இத்துறையானது 14.06.1985 அன்று ‘அலகு XIII - கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி - கால்நடைத் திட்டம் - உயர்கல்வி மற்றும் கண்டுபிடிப்புகள் நிறுவனம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல்’ என்ற திட்டத்துடன் தொடங்கப்பட்டது. இத்துறை கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி வழிகாட்டுதல் ஆகிய இரண்டையும் வழங்குகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.
அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் VCI - MSVE 2016 தேவைகளின்படி அமைந்துள்ளன.
திட்ட தலைப்பு | திட்டத்தில் பங்கு | நிதிச் செலவு (இலட்சம்) | நிதியளிக்கும் நிறுவனம் |
---|---|---|---|
புறஒட்டுண்ணிகளுக்கு எதிராக சீதாபலத்தின் விளைவு | 2000 | 0.05 | அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தமிழ்நாடு மாணவர் பேரவை (TNSCST) |
ஆய்வுக்கூட சோதனை முறையில் பூண்டு சாற்றின் பூஞ்சை காளானுக்கு எதிரான விளைவு | 2008 | 0.05 | |
சிறிய அசைபோடும் பிராணிகளின் குடற்புழுக்களுக்கு எதிராக நாய்வேளை விதைச் சாறுகளின் செயல்பாடு | 2010 | 0.05 | |
நோயுற்ற கோழிகளிலிருந்து பிரிதத்தெடுக்கப்பட்ட நோய் நுண்கிருமிகளுக்கு எதிராக முருங்கை தாவர சாற்றின் ஆய்வக எதிர்நுண்ணுயிரியல் செயல்பாடு | 2010 | 0.05 | |
கற்றாழை (ஆலோ) ஆரோக்கிய பானத்தின் கல்லீரல் பாதுகாக்கும் திறனை கோழிகளில் ஆராய்தல் | 2012-13 | 4.46 | சி.பி. பிளாண்டேஷன்ஸ், மதுரை. தமிழ் நாடு |
நாட்டுக்கோழிகளில் வெள்ளைக் கழிச்சல் நோய்க் கட்டுப்பாட்டுக்கு எதிராக பூண்டு மற்றும் அமுக்கறா கிழங்கின் நோய் எதிர்ப்புத்திறன் | 2015-16 | 0.50 | தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் |
கோழிப்பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்த சைரோமசைனுடன் வேம்பு தயாரிப்புகளின் ஒப்பீடு மற்றும் ஒருங்கிணைந்த விளைவு | 2012 | 0.20 | டாக்டர். பி.வி.ராவ் WPC’1996 - கோழி வளர்ப்பு முதுகலை பட்டதாரிகளுக்கான ஆராய்ச்சி மானியங்கள் |
தமிழ்நாட்டில் பழங்குடியினரிடையே உள்ள பாரம்பரிய கால்நடை மருத்துவத்தில் பங்கேற்பு தொழில்நுட்ப வளர்ச்சி | 2011-13 | 9.75 | தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை, அகமதாபாத், குஜராத் |
நாட்டுக் கோழிகளில் சுவாசக் குழல் தொற்றுக்கான மாற்று உத்திகள் | 2013-14 | 8.00 | தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை, அகமதாபாத், குஜராத் |
மாடுகளில் ஏற்படும் மருக்களுக்கு எதிரான சிறந்த மேற்பூச்சு தயாரிப்பை உறுதியளிக்கும் முகியா மதராசபட்டனா மூலிகை பற்றிய ஆய்வு | 2019 | 0.24 | தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் - துணைத் திட்டம் (2019 -2020) |
வணிக கறிகோழி வளர்ப்பில், ஈக்களின் முட்டை மற்றும் கூட்டுப்புழுக்களுக்கெதிராக மெத்தோஃபிரினுடன் வேம்பு தயாரிப்புகளின் செயல்பாடு | 2019 | 0.20 | தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் - துணைத் திட்டம் (2019 -2020) |
திட்ட தலைப்பு | திட்டத்தில் பங்கு | நிதிச் செலவு (இலட்சம்) | நிதியளிக்கும் நிறுவனம் |
---|---|---|---|
கறிக்கோழிகளில் சோதனை ரீதியாக தூண்டப்பட்ட பூஞ்சை நச்சேற்றத்தை தணிப்பதில் டாக்சோலின் விளைவு | 2019 | 3.50 | வெஸ்பர் குழு, பெங்கள்ளூரு |
கறிகோழிகளில் இரத்தக் கழிச்சல் நோய்க்கு எதிராக IVP-1ன் செயல்திறனை மதிப்பிடுதல் | 2021 | 4.06 | ஹெக்கா பார்மா, ஹைதராபாத் |
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
நாமக்கல் – 637002
தொலைபேசி எண்: 04286-266491
மின்னஞ்சல்: vpt-vcri-nkl@tanuvas.org.in