கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை

குறிக்கோள்கள்

  • இளநிலை மற்றும் முதுநிலைகல்வி வழங்குதல்
  • கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் சேவை வழங்குதல்
  • பண்ணை மற்றும் செல்லப்பிராணிகளுக்கு மலட்டுத்தன்மை சிகிச்சை வழங்குதல்.
  • பண்ணை மற்றும் செல்லப்பிராணிகளுக்கு அவசர ஈனியல் சிகிச்சை வழங்குதல்.
  • விவசாய சமூகத்தின் நலன்களுக்காக கால்நடை ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக மக்கள் தொடர்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தி கலந்து கொள்ளல்.
  • கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கள கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
  • கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் பிரிவில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.

கல்வி

இளங்கலைக் கல்வி

முதுகலைக் கல்வி

  • 1999-2000 முதல் முதுகலைப் படிப்புகளை வழங்குகிறது..
  • 10 மாணவர்கள் தங்கள் முனைவர் பட்டத்தையும், 14 மாணவர்கள் முதுநிலை பட்டத்தையும் பெற்றுள்ளனர்.

விரிவாக்கப் பணிகள்

  • மருத்துவர்களுக்கு இனப்பெருக்கப் பிரச்சினைகள் மற்றும் மேலாண்மைகளில் முன்னேற்றங்கள் குறித்த பயிற்சிகளை வழங்குதல்.
  • மைத்ரி (MAITRI) திட்டத்தின் கீழ் கிராமப்புற படித்த இளைஞர்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி அளித்தல்.
  • சினை பிடிக்காத கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் அவசர ஈனியல் தொடர்பான சிகிச்சை அளித்தல்.
  • மக்கள் தொடர்புத் திட்டங்கள் மற்றும் மலட்டுத்தன்மை பிரச்சாரங்கள் மூலம் கிராமப்புற மக்களுக்கு சேவைகளை வழங்குதல்.
  • பண்ணை மற்றும் செல்லப்பிராணிகளில் இனப்பெருக்க மேலாண்மை குறித்த வானொலி மற்றும் தொலைக்காட்சி விரிவுரைகளை வழங்குதல்.

ஆராய்ச்சி

  • தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமையின் நிதியுதவியுடன் 7 மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டங்களும், 12 ஆராய்சிச்திட்டங்கள் பல்கலைக்கழக மற்றும் வெளிப்புற நிதி உதவிகள் மூலம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
  • தற்போது 2 வெளிபுற நிதியுதவி திட்டங்கள் மற்றும் 2 சுயநிதித் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

வல்லுநர்கள்

  • இரா. எசகியல் நெப்போலியன், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • ம. பழனிசாமி, பேராசிரியர்
  • கா. இரவிக்குமார், உதவிப் பேராசிரியர்
  • கி. செந்தில்குமார், உதவிப் பேராசிரியர்
  • து. கோபிகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்

கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை,

கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

நாமக்கல் -637002

தொலைபேசி எண் : 04286-266491