கால்நடை ஊட்டச்சத்தியல் துறை

வரலாறு:

கால்நடை ஊட்டச்சத்தியல் துறை, 1985-ம் ஆண்டு ஆரம்பிக்கபட்டது. இளங்கலை பட்டப் படிப்பிற்கான, கால்நடை ஊட்டச்சத்தியல் பாடம் 1985-ம் ஆண்டும், முதுநிலை பட்டப் படிப்பு 1994-ம் ஆண்டும் ஆரம்பிக்கபட்டன. தீவன ஆலை, 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பல்வேறு வகையான கால்நடை தீவனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்கலைக்கழக பண்ணைகளுக்கும், கால்நடை பராமரிப்பு துறை பண்ணைகளுக்கும், விவசாயிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. 2015 ல் தானுவாசு தாது உப்புக்கலவை உற்பத்தி மையம் தொடங்கப்பட்டு தானுவாசு ஸ்மார்ட் மற்றும் பொது தாது உப்புக்கலவை விற்பனை செய்யப்படுகின்றன.

குறிக்கோள்கள்:

  • இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு கல்வி வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளுதல்.
  • மாற்று தீவன மூலப்பொருட்களின் எரிசக்தி மற்றும் புரதப் பயன்பாட்டை மேம்படுத்துதல்.
  • தீவன சேர்க்கைகளை மதிப்பீடு செய்தல்.

சேவைகள்:

  • அனைத்து வகையான கால்நடைகளுக்கும் (கறவைமாடு, வெள்ளாடு, செம்மறியாடு, வெண்பன்றி, கோழி இனங்கள் மற்றும் ஆய்வக விலங்குகள்) தேவையான தீவனங்களை உற்பத்தி செய்து, பல்கலைக்கழக பண்ணைகள் மற்றும் விவசாயிகளுக்கு விற்பனை செய்தல்.
  • கால்நடைகளுக்கான தாதுஉப்புக் கலவை தயார் செய்து பல்கலைக்கழகப் பண்ணைகள் மற்றும் விவசாயிகளுக்கு விற்பனை செய்தல்.

கல்வி:

  • முதுநிலை பட்டயப்படிப்பு "தீவனம் தயாரிக்கும் தொழில்நுட்பம்" – அறிவியல் பட்டதாரிகளுக்கு ஒரு வருடம் தொலைதூரக்கல்வி மூலம் வழங்கப்படுகிறது.
  • சான்றிதழ்படிப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு "தீவன ஆலை மேற்பார்வையாளர்", ஒரு மாதகாலம் செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது.

சாதனைகள்:

  • இதுவரை 49 முதுநிலை மாணாக்கர்கள் மற்றும் 8 முனைவர் மாணாக்கர்கள் படிப்பை நிறைவு செய்துள்ளனர்.
  • கோழிகளுக்கான சுற்றுச்சுழல் கட்டுப்படுத்தப்பட்ட கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 500 முட்டைக்கோழிகள் மற்றும் 1200 கறிக் கோழிகள் வளர்க்கலாம்.
  • கல்வி நிறுவனம் மற்றும் தொழிற்சாலை இணைந்து 11 ஆராய்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் 5 அரசாங்க ஆராய்ச்சி திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய வேளான் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதியுதவியுடன் இளநிலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு அனுபவவழி கற்றல் மூலம் தீவனம் தயாரிக்கும் தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி 691 மணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சிகள்

  • இந்திய வேளான் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதியுதவியுடன் இரண்டு கோடைகால (21 நாட்கள்) பயிற்சிகள் நடத்தப்பட்டன.
  • இந்திய வேளான் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதியுதவியுடன் இரண்டு குறுகிய கால (10 நாட்கள்) பயிற்சிகள் நடத்தப்பட்டன.
  • இந்திய வேளான் அமைச்சகத்தின் நிதியுதவியுடன் ஒரு மாதிரி பயிற்சி நடத்தப்பட்டது.
  • தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப மன்றத்தின் நிதியுதவியுடன் விவசாயிகளுக்கு இரண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

வல்லுநர்கள்

  • முனைவர் பெ. வசந்தகுமார், பேராசிரியர் மற்றும் தலைவர்,
  • முனைவர் சி . கதிர்வேலன், உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்

கால்நடை ஊட்டச்சத்தியல் துறை,

கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

நாமக்கல் -637002

தொலைபேசி எண் : 04286-266491, 266492, 266493 : Ext .503

தீவன ஆலை தொடர்பு எண் : 04286-291941 / 04286 - 266571

மின்னஞ்சல்: annvcrinkl@tanuvas.org.in, ann-vcri-nkl@tanuvas.org.in