கால்நடை மருத்துவ சிகிச்சைத் துறை

கால்நடை மருத்துவ சிகிச்சைத் துறை 1985 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, கால்நடை மருத்துவ சிகிச்சை முறைகள் இளநிலை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் முதுநிலை, பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் முறையே 2006 மற்றும் 2008 துவங்கப்பட்டன.

குறிக்கோள்கள்

  • இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு வழங்குதல்
  • நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு சிறப்புச் சிகிச்சை அளித்தல்.
  • நோய்கிளர்ச்சி ஏற்படும் சமயங்களில் அவற்றை கண்டறிந்து சிகிச்சை அளித்தல்.
  • மக்களிடையே நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • கால்நடைப் பண்ணைகளுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் கால்நடை புத்தாக்கப் பயிற்சி அளித்தல்.

உள்கட்டமைப்பு வசதி

  • சிறிய மற்றும் பெரிய பிராணிகளுக்கு கலர்டாப்ளர் கதிர் மின்னொளி கருவி வசதி
  • சிறிய மற்றும் பெரிய பிராணிகளுக்கு இதய மின்னலை வரைவு வசதி
  • அசையூன் பிராணிகள், நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு உள்நோக்கி கருவி வசதி
  • டாப்ளர் இரத்த அழுத்தமானி
  • இதய உதறல் நீக்கி
  • 12 - முனைகள் கொண்ட இதய மின்னலை வரைவு
  • நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு ஆக்சிஜன் ஜெனரேட்டர் வசதி
  • ரூமன் ஆய்வகம்
  • அசையூன் பிராணிகளுக்கு இன்பியூஷன் பம்ப் வசதி
  • எழமுடியாத மாடுகளைத் தாங்கும் கருவி மற்றும் நீர்ப்படுக்கை வசதி

தற்போதைய திட்டங்கள்

பெயர் ஆரம்பிக்கப்பட்ட வருடம் பண உதவி
சுழற்சி முறை திட்டமான அசையும் பிராணிகளுக்கு வாய் வழியாக மறு நீரேற்றம் செய்வதற்கு இன்பியூஷன் பம்ப் வடிவமைத்தல் 2018 தானுவாஸ், சென்னை
சுய நிதி திட்டமான உருவத்தின் மூலம் நோய்களை கண்டறிதல் மற்றும் இதய மின் அலை வரைவு பிரிவு 2019 தானுவாஸ், சென்னை

சாதனைகள்

  • கதல் ஒலி மூலம் நாயினங்களில் ஏற்படும் கல்லீரல் நோய்களைக் கண்டறிதல்
  • மாடுகளில் ஏற்படும் குறுகியகால சுவாசக் கோளாறு நோய்களைக் கண்டறிதல்
  • உள்நோக்கி கருவி மூலம் எருமைகளில் ஏற்படும் குறுகியகால சுவாசகோளாறு நோய்களைக் கண்டறிதல்
  • படுத்தநிலையில் உள்ள மாடுகளில் பொட்டாசியம் குளோரைடின் தாக்கத்தை வரையறுத்தல்
  • நாய்களில் ஏற்படும் இதயதசை நோயின் சுருக்கவியல் குறியீடுகளை வரையறுத்தல்
  • மாடுகளில் இதயத்தை சுற்றியுள்ள சவ்வில் ஏற்படும் அழற்சியை மின்ஒலி இதயவரைவு மூலம் கண்டறிதல்
  • மாடுகளில் ஏற்படும் குடல் இயக்கமின்மை நோயின் குறியீடுகளை வரையறுத்தல்

வல்லுநர்கள்

  • தே.சுமதி, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்
  • கா.மோகானாம்பாள், உதவிப் பேராசிரியர்
  • இரா. ரவி, உதவிப் பேராசிரியர்
  • கா. சசிகலா, உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்

கால்நடை மருத்துவ சிகிச்சையியல் துறை,

கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

நாமக்கல் -637002

தொலைபேசி எண் : 04286-266491

மின்னஞ்சல்: vcm-vcri-nkl@tanuvas.org.in