தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் விலங்கின மரபில் மற்றும் இனப்பெருக்கத்துறை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்

வரலாறு:

விலங்கின மரபியல் துறையானது 1987 மற்றும் 1993ஆம் ஆண்டு முறையே இளங்கலை மற்றும் முதுகலை கால்நடை மருத்துவப் படிப்பு பயிற்றுவிப்பதற்காக தொடங்கப்பட்டது. இத்துறையின் மூலம் நாட்டின கால்கடைகளான காங்கேயம், தோடா எருமை, கன்னி மற்றும் கொடி ஆடு, வேம்பூர் மற்றும் கோயமுத்தூர் செம்மறியாடுகளின் கணக்கெடுப்பு மற்றும் குணாதிசியங்களை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிக்கோள்:

  • இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்கம் கல்வி அளித்தல்
  • பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி திட்டங்களை வகுத்தல்.
  • பூர்வீக கால்நடைகளின் கணக்கெடுப்பு, மதிப்பீடு மற்றும் குணாதிசியம் பற்றிய ஆய்வு

சேவை:

  • விலங்குகளின் மரபுத்திரி அமைப்பு சோதனை ரூ.1000
  • செல்லப் பறவைகளின் பாலினம் அறிதல்
வ.எண் பறவை இனம் கட்டணம் (ரூ.)
1. சிறு காதல் கிளிகள் 275/-
2. ஆப்பிரிக்க காதல் பறவைகள் 450/-
3. சிறு சூட்டுடைய ஆஸ்திரேலியா நாட்டுக்கிளிகள் 450/-
4. பெரிய சூட்டுடைய ஆஸ்திரேலியா நாட்டுக்கிளிகள் 900/-
5. பஞ்சவர்ணக்கிளிகள் 1350/-
6. கொனூர் கிளிகள் 800/-

கல்வி:

முதுகலை பட்டப் படிப்பு (எம்.வி.எஸ்.சி) மற்றும் முனைவர் பட்டப் படிப்பு (பி.எச்.டி)

சாதனைகள் - காப்புரிமைகள் - தொழில்நுட்ப பரிமாற்றங்கள் - இல்லை

வல்லுநர்கள்

  • முனைவர். நா. முரளி, பேராசிரியர் மற்றும் தலைவர்
  • மருத்துவர். மு.மலர்மதி, உதவிப் பேராசிரியர்
  • மருத்துவர் ம.ஜெயகுமார், உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்கத்துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

நாமக்கல், தொலைபேசி: 04286-266491-494

மின்னஞ்சல்: agb-vcri-nkl@tanuvas.org.in