கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பத்துறை (பால்வள அறிவியல்)

குறிக்கோள்

இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பால் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல் குறித்த தொழில்நுட்பம் பால் மற்றும் பால் பொருட்களின் தர உறுதியை ஆராய்தல் போன்றவை எடுத்துரைக்கப்படுகின்றன.

ஆராய்ச்சி

பால் பதனிடுதல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல் குறித்த செயலாகத்திற்கான மாதிரி விளக்கப் பிரிவு மதிப்பு ரூபாய் 99.00 லட்சம் மதிப்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக நிதி உதவியின் கீழ் நிறுவப்பட்டது .

பால்பண்ணை தொழிலில் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பதன் மூலம் வருமானத்தை அதிகரித்தல் குறித்த திட்டம் ரூபாய் 1.17 கோடி மதிப்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் நிதி உதவியின் கீழ் நிறுவப்பட்டது .

விரிவாக்க சேவைகள்

  • தொழில் முனைவோர்கள், விவசாயிகள், சுய உதவிக் குழுக்களை சார்ந்த பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான பயிற்சிகளை அளித்தல்.
  • பால் பதனிடுதல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வாரந்தோறும் அளிக்கப்படுகிறது .
  • பிற கல்லூரி மாணவர்களுக்கான ஆராய்ச்சி தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன

பின்வரும் சேவைகள் கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்றன

குறிப்புகள் கட்டணம் ரூபாய்
பால் ஆலையை பயன்படுத்த 10000.00
பிற கல்லூரி மாணவர்களுக்கான ஆராய்ச்சி தொடர்பான வழிகாட்டுதல்கள் (ஒரு மாதத்திற்குள்) 5000.00
பிற கல்லூரி மாணவர்களுக்கான ஆராய்ச்சி தொடர்பான வழிகாட்டுதல்கள் 3 மாதத்திற்குள் 20000.00
பால் பதனிடுதல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரி த்தல் பயிற்சி (இரண்டு நாட்கள்) 500.00
ஆலோசனை வழங்குதல் 50.00
பால் ஆலையை பார்வையிடுதல் 10.00

சாதனைகள்/ காப்புரிமைகள்/ தொழில்நுட்ப பரிமாற்றங்கள்:

தொழில்நுட்ப பரிமாற்றங்கள்

குலாப் ஜாமுன் கலவை தயாரிப்பு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

காப்புரிமைகள்

பாலேடு பிரிப்பான் மற்றும் வெண்ணெய் தயாரிப்பு இயந்திரம் வடிவமைக்கப்பட்டு காப்புரிமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.