கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை

வரலாறு

  • தமிழ்நாடு அரசால் தமிழக மேற்குப் பகுதியில் உள்ள கால்நடை வளத்தை மேம்படுத்துவதற்காக 18.08.2020 அன்று இக்கல்லூரி நிறுவப்பட்டது.
  • தற்காலிகமாக உடுமலைப்பேட்டை ஆர்கேஆர் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் இக்கல்லூரி செயல்பட்டுவருகிறது.
  • உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள பண்ணைக்கிணறு கிராமத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் கால்நடைப் பண்ணை வளாகத்திற்கான நிரந்தர வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இது உடுமலைப்பேட்டையில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது.
  • கால்நடைகளுக்கான சிகிச்சை வளாகம் உடுமலைப்பேட்டையில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள பெதப்பம்பட்டியில், நிறுவப்பட்டு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

குறிக்கோள்

  • மாணவர்களுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான அறிவுறுத்தல்கள் மூலம் தரமான கல்வியை வழங்குதல்
  • பல்கலைக்கழகத்தின் புதிய தொழில் நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புக்களை கிராம மக்களை சென்றடையும் வண்ணம் மற்ற இத்துறை சார்ந்த கால்நடை பராமரிப்பு மற்றும் வேளாண் துறையுடன் இணைந்து செயல்படுதல்

கல்வி

கால்நடை மருத்துவ அறிவியலில் 2020-21 முதல் இளநிலைப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு 40 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

துறைகள்

  • கால்நடை உடற்கூறியல்
  • கால்நடை உடற்செயலியல்
  • கால்நடை உற்பத்தி மேலாண்மை
  • விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தி
  • கால்நடை உணவியல் துறை
  • கால்நடை மருத்துவ நோய் குறியியல் துறை
  • கால்நடை உயிர்வேதியியல் துறை
  • கால்நடை நுண்ணுயிரியல் துறை
  • கால்நடை பண்ணை வளாகம்
  • கால்நடை சிகிச்சை வளாகம்

கால்நடை பண்ணை வளாகம்

  • முற்போக்கு விவசாயிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமப்புற வேலையற்ற இளைஞர்களுக்கு மாதிரி கால்நடை பண்ணை அமைத்தல்
  • கால்நடை மருத்துவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை உற்பத்தி, சுகாதாரம் மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சித் திட்டங்களை வழங்குதல்
  • விவசாயிகளுக்கு உயர் ரக கால்நடை இனங்கள், தீவனப்புல் கரணை மற்றும் விதைகள் வழங்குதல்

கால்நடை சிகிச்சை வளாகம்

  • பெரிய மற்றும் சிறிய பிராணிகளுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிதல், அதற்குண்டான மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல்
  • கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி
  • பெரிய மற்றும் சிறிய பிராணிகளுக்கான மருத்துவம், அறுவை சிகிச்சை, ஈனியல், செயற்கை கருவூட்டல் மற்றும் கால்நடை நோய் கண்டறிதல் போன்ற சிறப்பு பிரிவுகள் மூலம் மேம்பட்ட சிகிச்சைகளை அளித்தல்
  • திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல்

தொடர்புக்கு:

முதல்வர்

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

உடுமலைப்பேட்டை - 642126.

தொலைபேசி எண்: 04252-295399

மின்னஞ்சல் முகவரி: deanvcriudp@tanuvas.org.in