கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளி

வரலாறு

இந்த மையம் 1980இல் தொடங்கப்பட்டு, விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை விரிவுபடுத்துதல், புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு விவசாயிகளை ஊக்குவித்தல் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிக்கோள்

  • இயற்கை வள மேலாண்மை, கால்நடை மற்றும் கோழி தொடர்பான தொழில்நுட்பங்களை முதல் நிலை விரிவாக்கப் பணியாளர்கள் வாயிலாகப் பரவலாக்குதல்
  • உழவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க கால்நடை, கோழியின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளின் இணைப்பை வலுப்படுத்துதல்
  • நீடித்த கால்நடை அடிப்படையிலான வாழ்வாதாரத்திற்குப் பல்கலைக்கழகம் / தொழில் முனைவோர்கள் மூலம் கால்நடை உற்பத்திச் சூழலியலை மேம்படுத்துதல்

உள்கட்டமைப்பு

  • நன்கு காற்றோட்டமான பயிற்சிக் கூடத்தில் இருக்கை வசதிகளோடு ஓலிபெருக்கி வசதிகளும் திரையிடும் வசதிகளும் உள்ளன.
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட நுண்ணோக்கி, சூடான காற்று அடுப்பு (ஹாட் ஏர் ஓவென்), இன்குபேட்டர், சென்ட்ரிபியூஜ், நீர் வடிகட்டுதல் அலகு (water distillation unit), ஆன்டிபயாடிக் உணர்திறன் சோதனைப் (ஏபிஎஸ்டி) பொருட்கள் மற்றும் பால் கலப்படச் சோதனைப் பொருட்கள் ஆகியவை உள்ளன.
  • விவசாயிகள் கண்டு பயனடையும் வகையில் அசோலா, மூலிகைத் தோட்டம் மற்றும் மண்ணில்லாப் பசுந்தீவன அலகுகள் இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சேவைகள்

  • கறவை மாடு, செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி, முயல், கோழி, ஜப்பானியக் காடை முதலானவை வளர்ப்பு ஆகியவற்றில் பண்ணைப் பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
  • கிராமப்புற மக்கள், சிறப்புச் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குப் புற வளாகப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
  • விவசாயிகளுக்கான தாது உப்புகள், பல்கலைக்கழகப் புத்தகங்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

வல்லுநர்கள்

  • முனைவர் கே. ஷிபி தாமஸ், உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்
  • முனைவர் வே. ஜெயலலிதா, உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

7/2, கோழிப் பண்ணைச் சாலை,

கொட்டப்பட்டு திருச்சிராப்பள்ளி - 620 023

தொலைபேசி: 0431 - 2331715

மின்னஞ்சல்: trichyvutrc@tanuvas.org.in