விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தஞ்சாவூர்


தோற்றமும் வளர்ச்சியும்

தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமானது தஞ்சை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட ஆட்சியரகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இம்மையம் “மரபுசார் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் நிறுவுதல்” எனும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டது. இந்த மையத்தின் கட்டிடம் 03.10.2011 அன்று செயல்பாட்டுக்கு வந்தது.


குறிக்கோள்கள்

  • கால்நடை மற்றும் கோழியினங்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை (இயற்கை வள மேலாண்மை உள்ளிட்ட) முன்கள விரிவாக்க முகவர்கள் மூலம் பண்ணையாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லுதல்.
  • பண்ணையாளர்களின் தேவை அடிப்படையிலான தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் வகையில் கால்நடை மற்றும் கோழியினங்கள் சார்ந்த ‘ஆராய்ச்சி-விரிவாக்க இணைப்பை’ வலுப்படுத்துதல்.
  • கால்நடை சார் நீடித்த வாழ்வாதாரத்திற்கான உற்பத்தி சூழலை பல்கலைக்கழகம் அல்லது தொழில்முனைவோர்கள் மூலமாக ஊக்கப்படுத்துதல்.

கால்நடைபண்ணைய விரிவாக்கம் சார்ந்த செயல்பாடுகள்

ஒரு நாள் உள்வளாகப் பயிற்சிகள்

  • கறவை மாடு வளர்ப்பு, நாட்டுக் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு என மாதந்தோறும் இரண்டு அல்லது மூன்று பயிற்சிகள் இலவசமாக கால்நடை பண்ணையம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்த தகவல்கள் நாளேடுகள், வானொலி மற்றும் சமூக வலை தளங்கள் மூலம் பண்ணையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். பண்ணையாளர்கள் பயிற்சி மையத்தின் தொலைபேசி எண்ணுக்கு நேரிடையாக தொடர்பு கொண்டும் பயிற்சி பற்றிய தகவலை அறிந்துக் கொள்ளலாம்.

ஒரு நாள் வெளிவளாகப் பயிற்சிகள்

  • பயிற்சி மையத்தை எளிதில் அணுக முடியாமல் குக்கிராமங்களில் உள்ள கால்நடை பண்ணையாளர்களுக்காக கறவை மாடு வளர்ப்பு, நாட்டுக் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி அவர்களின் கிராமங்களிலேயே நடத்தப்படுகிறது.

அரைநாள் உள்வளாக சிறப்புப்பயிற்சிகள்

  • கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரித்தல், பசுந்தீவனம் சாகுபடி செய்தல், கால்நடைகளுக்கு காப்பீடு செய்தல், கால்நடைகளுக்கான கோடைகால பராமரிப்பு, அசோலா வளர்ப்பு என குறிப்பிட்ட சில சிறப்பு தலைப்புகளில் அரைநாள் பயிற்சிகளும் அவ்வப்போது நடத்தப்படுகிறது. இது குறித்த தகவல்கள் நாளேடுகள், வானொலி மற்றும் சமூக வலை தளங்கள் மூலம் பண்ணையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். பண்ணையாளர்கள் பயிற்சி மையத்தின் தொலைபேசி எண்ணுக்கு நேரிடையாக தொடர்பு கொண்டும் பயிற்சி பற்றிய தகவலை அறிந்துக் கொள்ளலாம்.

உள்வளாக கட்டணப் பயிற்சிகள்

  • முயல் வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு போன்றவை பண்ணையாளர்களின் தேவை கருதி கட்டண அடிப்படையிலும் அவ்வப்போது நடத்தப்படுகிறது. கட்டண விபரம் மற்றும் பயிற்சி குறித்த தகவல் நாளேடுகள், வானொலி மற்றும் சமூக வலை தளங்கள் மூலம் பண்ணையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

ஒரு மாதகால சுயவேலை வாய்ப்புப் பயிற்சிகள்

  • கால்நடை பண்ணையம், மதிப்புக் கூட்டுதல், விற்பனை என தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாக கட்டண அடிப்படையில் ஒரு மாத பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பயிற்சியில் சேர விரும்புவோர்கள் பயிற்சி மையத்தை அணுகி முறையாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வருடம் முழுவதும் வழங்கப்பட்டு பெறப்படுகின்றன. இப்பயிற்சியில் பங்கு பெறுவோர்கள் மற்ற பண்ணைகளையும் பார்வையிட அழைத்துச் செல்லப்படுவார்கள். இளம் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு ஏற்றது. பயிற்சிக்குப் பின்னர் சான்றிதழ் வழக்கப்படும்.

ஒரு மாதகால திறன் மேம்பாட்டு பயிற்சிகள்

  • பால் பண்ணை உதவியாளர், கோழிப்பண்ணை மேற்பார்வையாளர், குஞ்சுப் பொறிப்பக மேற்பார்வையாளர் என திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு பல்கலைக்கழகத்தின் தொலைக்கல்வி இயக்குநரகத்தின் வாயிலாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி பற்றிய மேலும் தகவலை அறிந்துக் கொள்ள பயிற்சி மையத்தை அணுகவும்.

பொருட்காட்சிகளில் பங்கு கொள்ளுதல்

  • அரசு சார்ந்த பொருட்காட்சிகளில் பங்கு கொண்டு கால்நடைப் பண்ணையம் குறித்த ஆலோசனைகள் மற்றும் விளக்கங்களை பொது மக்களுக்கு வழங்குகிறது.

கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த பயிற்சிகளில் பங்கேற்பு

  • விலையில்லா கறவை மாடு / வெள்ளாடு / நாட்டுக் கோழி வழங்குதல், தீவன அபிவிருத்தி, நாட்டுக்கோழி வளர்ப்பு என கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த பல்வேறு திட்ட பயனாளிகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

கால்நடை பண்ணைசார் திட்ட அறிக்கைகள்

  • கால்நடை பண்ணையம் தொடங்குவதற்காக வங்கிகளில் கடனுதவி பெறும் வகையில் தேவையான திட்ட அறிக்கைகள் தயாரித்து வழக்கப்படுகிறது. இதற்காக திட்ட அறிக்கையின் மொத்த மதிப்பில் 0.25% கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பண்ணைகளை களப்பார்வையிடல்

  • தேவையின் அடிப்படையில் மையத்திலிருந்து வல்லுநர்கள் பண்னையாளர்களின் பண்ணைக்கு வந்து பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

கிராமத்தை தத்தெடுத்தல்

  • தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வழியில் அமைந்துள்ள இராஜேந்திரம் எனும் ஊரை இம்மையம் தத்தெடுத்துள்ளது. இந்த கிராமத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது சிறப்பு நிகழ்ச்சிகளும், பணிகளும் இம்மையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகள்

  • தஞ்சை மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சி திட்டங்களை தீட்டி நிதியுதவி முகமைகளுக்கு முறையாக சமர்பித்தல்.
  • பல்கலைக்கழக தொழில் நுட்பங்களை பண்ணையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு செல்லுதல்.
  • கால்நடை பண்னையம் சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை பரீட்சாத்திய அடிப்படையில் களத்தில் அறிமுகப்படுத்தி அவைகளின் திறனை ஆய்ந்தறிதல்.

வல்லுநர்களின் விவரங்கள்

வல்லுநர் பெயர் வகிக்கும் பதவி மின்னஞ்சல் கைபேசி#
முனைவர் கி. ஜெகதீசன் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் jegadeesan.k@tanuvas.ac.in | jagadeesankrishnan@gmail.com +91-9566082013

உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவ பல்கலைகழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
பிள்ளையார்பட்டி அஞ்சல், தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை
தஞ்சாவூர் – 613 403
தொலைபேசி: +91-4362-264665
மின்னஞ்சல்: thanjavurvutrc@tanuvas.org.in