விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்


தோற்றமும் வளர்ச்சியும்

  • இம்மையமானது கறவை மாடுகளில் கருக்கலைப்பைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக ஈரோட்டில் தொடங்கப்பட்டு, 25.11.1994 அன்று பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக சேலம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர், 08.04 1999 அன்று கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (VUTRC), சேலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்பொழுது இம்மையமானது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநரகம், சென்னை – 600 051 யின் கீழ் செயல்படுகிறது.
  • இம்மையமானது, கால்நடைகள் சார்ந்த சுய வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் மூலம் கால்நடைகள் மற்றும் கோழிப்பண்ணைகளை உருவாக்க விவசாயிகளை ஊக்குவிக்கிறது. மேலும் விவசாயிகளுக்குத் தேவையான சேவையை செய்வதுடன், கால்நடைகளுக்கான பகுதி சார்ந்த குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குத் தேவையான தீர்வுகளையும் வழங்குகின்றது.
  • அமைவிடம்: இம்மையமானது ஆகஸ்ட் மாதம் 2012 ஆம் ஆண்டிலிருந்து, நமது சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வருகின்றது.


குறிக்கோள்கள்

  • முன்கள விரிவாக்க பணியாளர்கள் / பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லுதல்.
  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இணைப்பை வலுப்படுத்துதல்.
  • கால்நடைகளை அடிப்படையாகக் கொண்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்காக கால்நடை உற்பத்திக்கான சூழலை மேம்படுத்துதல்.

செயல்பாடுகள் மற்றும் சேவைகள்

  • கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பிற்கான உள் மற்றும் வெளி வளாகப் பயிற்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன.
  • விவசாயிகளுக்கு, மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் கூடிய கால்நடை மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
  • கால்நடைகள் மற்றும் கோழிப் பண்ணைகளில் ஏற்படும் அன்றாட பிரட்சனைகளைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு விவசாயிகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே இருவழிப் பாதையாகச் செயல்படுகின்றது.
  • கால்நடைகளில் நோய் கிளர்ச்சி ஏற்படும் சமயங்களில் கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து நோய் கிளர்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல்.
  • பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை விவசாயிகளின் பண்ணைகளில் சோதனை செய்தல் மற்றும் பகுதி சார்ந்த பிரச்சனைகளை ஆராய்தல்.
  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பிற்கான வங்கி திட்ட அறிக்கையானது கட்டணத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது.
  • கால்நடை மற்றும் கோழிப் பண்ணைகள் தொடர்பான பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தகங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
வ. எண் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தகங்கள் விலை (ரூபாயில்)
1 தாணுவாஸ் தாதுப்பு கலவை 75
2 தாணுவாஸ் தாதுப்பு கட்டி 65
3 கறவைமாடு வளர்ப்பு புத்தகம் 50
4 வெள்ளாடு வளர்ப்பு புத்தகம் 50
5 நாட்டுக்கோழி வளர்ப்பு புத்தகம் 50
6 முயல் வளர்ப்பு புத்தகம் 30
7 வெண்பன்றி வளர்ப்பு புத்தகம் 40
8 நவீன முறையில் வான்கோழி வளர்ப்பு புத்தகம் 35
9 கால்நடைகளுக்கேற்ற பசுந்தீவனப் பயிர்கள் புத்தகம் 30
10 கால்நடை பண்ணைப் பொருளாதாரம் புத்தகம் 20
11 ஜப்பானியக் காடை வளர்ப்பு புத்தகம் 40
12 மரபுசார் மூலிகை மருத்துவம் புத்தகம் 25
13 இறைச்சிக்கோழி வளர்ப்பு புத்தகம் 25
  • மாதிரி தீவன பாத்திகள், அசோலா வளர்ப்பு, ஆடுகள், முயல்கள், ஊரக கோழி வளர்ப்பு கூண்டு, கோழிக்குஞ்சுகளுக்கான கூண்டு மற்றும் முட்டை கரு பரிசோதனை கருவி போன்றவை மையத்திற்கு வரும் விவசாயிகள் பார்வையிட காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி

  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு, கால்நடைப் பொருட்களின் மதிப்பு கூட்டல் போன்ற சான்றிதலுடன் கூடிய ஒரு மாத சுயவேலைவாய்ப்பு படிப்புகள் கால்நடை தொழிலில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு நடத்தப்படுகின்றன.
  • ஒரு மாத சுயவேலைவாய்ப்பு படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் பெறப்பட்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகம் (DDE), சென்னை மூலம் நடத்தப்படுகின்றன.

சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள்

வ. எண் பயிற்சியின் பெயர் கல்வித்தகுதி பயிற்சிக் கட்டணம் பயிற்சிக் காலம்
1 கறவைமாட்டுப் பண்ணையம் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 3000 ரூபாய் 1 மாதம்
2 செம்மறியாடு வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 1000 ரூபாய் 1 மாதம்
3 வெள்ளாடு வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 3000 ரூபாய் 1 மாதம்
4 பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 1000 ரூபாய் 1 மாதம்
5 முயல் வளர்ப்புதமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 1000 ரூபாய் 1 மாதம்
6 வெண்பன்றி வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 3000 ரூபாய் 1 மாதம்
7 ஜப்பானியக் காடை வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 3000 ரூபாய் 1 மாதம்
8 நாட்டுக்கோழி வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 3000 ரூபாய் 1 மாதம்

வல்லுநர்கள்

ஆசிரியர் பெயர் வகிக்கும் பதவி மின்னஞ்சல் கைபேசி#
முனைவர் வி.செ. வடிவு பேராசிரியர் மற்றும் தலைவர் vadivoo.v.s @tanuvas.ac.in | vsvadivoo@gmail.com +91-9445126784
மருத்துவர் ரா.கோபி உதவிப் பேராசிரியர் drgopiext@gmail.com +91-75300 52315

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
கால்நடை மருத்துவமனை வளாகம் (மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகில்)
சேலம் - 636 001
தொலைபேசி: +91-427-2410408
மின்னஞ்சல்: salemvutrc@tanuvas.org.in