விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், ராமநாதபுரம்


தோற்றம்

இராமநாதபுரத்தில் கால்நடைமருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமானது தமிழக அரசாணை எண் Ms.No.109 நாள்: 24.03.2013 மற்றும் பல்கலைக்கழக ஆணை எண் No.50106/G1/2013 & Proc No. 27513/G1/2012-13 நாள்: 03.6.2013 ஆகியவற்றின் படி 2013 ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் இம்மையமானது 1/1947,சேட் இப்றாஹிம் நகர 2வது வீதி, பாரதிநகர(தெற்கு) இராமநாதபுரம் என்ற முகவரியிலுள்ள வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. பின்னர மாவட்டஆட்சியரக அலுவலகம்,பெருந்திட்ட வளாகத்தில் இடம் பெறப்பட்டு மையத்திற்கென நிலையானகட்டடம் கட்டப்பட்டு, 01.04.2016 முதல் மையமானது இக்கட்டடத்தில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

இடம்

இந்த மையம் இப்போது புதிய பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து கிழக்கு நோக்கி 3.5 கிமீ தொலைவிலும் ராமநாதபுரம் மாஸ்டர் பிளான் வளாகத்தில் அமைந்துள்ள அதன் நிரந்தரக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

குறிக்கோள்கள்

  • முன்கள விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லுதல்.
  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இணைப்பை வலுப்படுத்துதல்.
  • கால்நடைகளை அடிப்படையாகக் கொண்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக கால்நடை உற்பத்திக்கான சூழலை மேம்படுத்துதல்.

வழங்கப்படும் சேவைகள்

  • ஒவ்வொருவாரமும் அரசுவிடுமுறை தினங்கள் தவிர்த்துசெவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கால்நடைமற்றும் கோழிவளர்ப்புகள் பற்றியபயிற்சிகள் வருடாந்திரஅட்டவணையின்படிநடைபெற்றுவருகிறது.
  • கடைநிலைப் பயன்பாட்டாளர்களின் தேவையினைக் கருத்தில்கொண்டுபயிற்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சம்மந்தமான தொழில்நுட்ப நுணுக்கங்களை விவசாயிகளுக்கு எடுத்துச்செல்வதிலும், விவசாயிகளிடமுள்ள பிரச்சினைகளை பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச்சென்று அதற்கான தொழில்நுட்பத் தீர்வுகளைஅளிப்பதற்கும் ஏதுவான பாலமாகச் செயல்படுகிறது.
  • கால்நடை மற்றும் கோழிவளர்ப்பிலுள்ள புலம் சார்ந்த குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்த பண்ணைச் சோதனைகள் மற்றும் பண்ணை அளவிலான முன்களப் பரிசோதனைகள் ஆகியன நடத்தப்படுகிறது.
  • மாவட்ட கால்நடை வளர்ப்போரின் நலன் கருதி பல்வேறுதுறைகளுடன் இணைந்து இம்மையமானது செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
  • கால்நடை வளர்ப்பு மற்றும் கோழிப்பண்ணைகளை சுயதொழில் செய்ய உள்ளூர் விவசாயிகள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களை ஊக்கப்படுத்துதல்.
  • கண்காட்சிகள், சிறப்புவிரிவுரைகள், பண்ணைச் சோதனைகள், முன்களப் பரிசோதனைகள் மற்றும் கிராமத் தத்தெடுப்புத் திட்டங்களின் மூலம் தொழில்நுட்பப் பரிணாhமங்களை விவசாயிகளுக்கு எடுத்துச்செல்கிறது.
  • நிலைய மற்றும் கள ஆலோசனைகள், பண்ணைச் சந்திப்புகள், பயிற்சிகள், சிறப்புவிரிவுரைகள், வானொலிமற்றும் தொலைக்காட்சிநிகழ்ச்சிகள் மூலம் கால்நடை மற்றும் கோழிவளர்ப்பு சார்ந்த அறிவியல் செய்திகளை கடைநிலைப் பயனாளிகளுக்கு எடுத்துச் செல்லுதல்.

பொதுமக்களுக்கான விற்பனை/சேவை

  • தனுவாஸ் தாதுஉப்புக் கலவை : ரூ.55/-
  • பண்ணைத் திட்டஅறிக்கை : திட்டமதிப்பில் 0.25 %
  • பல்கலைவெளியீடுகள் : மாறுபட்டவிலைகளில்

வல்லுநர்கள்

ஆசிரியர் பெயர் பதவி மின்னஞ்சல் கைபேசி#
டி.ஏ.விஜயலிங்கம் பேராசிரியர் மற்றும் தலைவர் tavijayalingam@gmail.com +91-9444367939
என்.வி.ராஜேஷ் உதவி பேராசிரியர் crocvet@gmail.com +91-9597297729

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
ஆட்சியர் வளாகம், ராமநாதபுரம் - 623 503.
தொலைபேசி: 04567-231807
மின்னஞ்சல்: vutrc_ramnad@tanuvas.org.in