வரலாறு
இக் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் 23.04.2013 அன்று நிறுவப்பட்டது.
குறிக்கோள்
- இயற்கை வள மேலாண்மை, கால்நடை மற்றும் கோழி தொடர்பான தொழில்நுட்பங்களை முதல் நிலை விரிவாக்கப் பணியாளர்கள் வாயிலாகப் பரவலாக்குதல்
- உழவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க கால்நடை, கோழியின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளின் இணைப்பை வலுப்படுத்துதல்
- நீடித்த கால்நடை அடிப்படையிலான வாழ்வாதாரத்திற்கு, பல்கலைக்கழகம் / தொழில் முனைவோர்கள் மூலம் கால்நடை உற்பத்திச் சூழலியலை மேம்படுத்துதல்
உள்கட்டமைப்பு
கேட்பொலி, காணொலி மற்றும் பல்லூடக உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பயிற்சி வளாகம், நுண்ணுயிரியல் சோதனைகளைச் செய்வதற்கான அடிப்படைக் கருவிகளுடன் கூடிய ஆய்வகம்
சேவைகள்
- கால்நடை வளர்ப்போர்க்கு அறிவியல் பூர்வ தொழில்நுட்பங்களையும் புதுமையான ஆராய்ச்சி முடிவுகளையும் பரப்புதல்
- பண்ணையில் செயல்முறை விளக்கம் மூலம் அந்தந்த உள்ளூர் சார்ந்த சிக்கல்களுக்கான தீர்வுகளைப் பரிந்துரைத்தல்
- பயிற்சி மற்றும் ஆலோசனைகள் மூலம் உழவர்கள் தொழில்முனைவோராக மாற ஊக்குவித்தல்
- கால்நடை மற்றும் கோழி வளர்க்கும் உழவர்களுக்குப் பயிற்சி, ஆலோசனை, புதிய பண்ணைகள் அமைத்தல் மற்றும் திட்ட அறிக்கைகளை வழங்கல்
- பருவ கால அடிப்படையிலான ஆலோசனைகள், பொது மேலாண்மை, கால்நடை மற்றும் கோழிப் பண்ணையின் சுகாதாரப் பராமரிப்பு குறித்த வானொலிப் பேச்சுகளைத் தொடர்ந்து பதிவு செய்து, உழவர்களின் நலனுக்காகத் திருச்சி அகில இந்திய வானொலி மூலம் ஒலிபரப்புதல்
பிற சேவைகள் (கட்டணங்களுடன்)
1) நோய் கண்டறிதல்
வரிசை எண் |
சேவை |
தொகை (ரூ.) |
1 |
உடற்கூறு பரிசோதனை |
20/- |
2 |
சாணம் மாதிரி |
3 |
இரத்த ஸ்மியர் |
4 |
பண்ணை பார்வையிடுதல் |
100/-
|
5 |
கால்நடைத் திட்ட அறிக்கை |
மொத்தத் திட்டச் செலவில் 0.25%
|
2) புத்தகங்கள் மற்றும் இடுபொருட்கள் விற்பனை
புத்தகங்கள் மற்றும் ஈடுபொருட்கள் |
தொகை (ரூ.) |
தனுவாஸ் தாது உப்புக் கலவை |
55/- |
தனுவாஸ் தாது உப்புக் கட்டி |
45/- |
பல்கலைக்கழக வெளியீடுகள் (தமிழில்) |
மாடு வளர்ப்பு |
50/- |
ஆடு வளர்ப்பு |
40/- |
பன்றி வளர்ப்பு |
40/- |
முயல் வளர்ப்பு |
30/- |
கோழி வளர்ப்பு |
50/- |
ஜப்பானியக் காடை வளர்ப்பு |
40/- |
கால்நடைத் தீவனம் |
30/- |
கால்நடைப் பொருளாதாரம் |
20/- |
தீவனம் மற்றும் தீவனத் தொழில்நுட்பங்களுக்கான கண்காட்சி
அசோலா உற்பத்தி மற்றும் செறிவூட்டிய தீவனத் தயாரிப்புச் செயல்முறை விளக்கம்
சிறந்த கால்நடை விவசாயி விருது
இணையவழிப் பயிற்சி
வல்லுநர்கள்
- முனைவர் ரெ. ரவிக்குமார், உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்
- முனைவர் து. இளைய பாரதி, உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு:
உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
பெரம்பலூர் – 621 220.
தொலைபேசி : 9385307022
மின்னஞ்சல் : vutrc_perambalur@tanuvas.org.in