விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மேல்மருவத்தூர்


தோற்றம்

  • மேல்மருவத்தூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமானது முதலில் வாத்து ஆராய்ச்சி மற்றும் பெருக்கம் என்று காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தால் நிறுவப்பட்டது.
  • 17.11.2003 அன்று காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து பிரிக்கப்பட்டு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக மேல்மருவத்தூரில் நிறுவப்பட்டது.
  • துவக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை இந்த மையமானது கால்நடை வேளாண்மையில் ஈடுப்பட்டுள்ள பண்ணையாளர்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் உதவி புரிந்து வருகிறது.

குறிக்கோள்கள்

  • இயற்கை வள மேலாண்மை கால்நடை மற்றும் கோழி தொடர்பான தொழில்நுட்பங்களை முதல்நிலை விரிவாக்கப் பணியாளர்கள் வாயிலாகப் பரவலாக்குதல்.
  • விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க கால்நடை, கோழியின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளின் இணைப்பை வலுப்படுத்துதல்.
  • நீடித்த கால்நடை அடிப்படையிலான வாழ்வாதாரத்திற்கு பல்கலைக்கழகம் / தொழில் முனைவோர்கள் மூலம் கால்நடை உற்பத்திச் சூழலியலை மேம்படுத்துதல்.

சேவைகள்

  • இந்த மையம் கால்நடை விவசாய சமூகத்திற்கு அறிவியல் பூர்வமான தொழில் நுட்பங்களையும் புதுமையான ஆராய்ச்சி முடிவுகளையும் பரப்புகிறது. பண்ணையில் செயல்முறை விளக்கம் மூலம் அந்தந்த உள்ளூர் சார்ந்த சிக்கல்களுக்கான தீர்வுகளை பரிந்துரைக்கிறது. இந்த மையம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சேவைகள் மூலம் விவசாயிகளை தொழில்முனைவோராக மாற ஊக்குவிக்கிறது. கால்நடை மற்றும் கோழியின விவசாயிகளுக்கு பயிற்சி, ஆலோசனை, புதிய பண்ணைகள் அமைத்தல் மற்றும் திட்ட அறிக்கைகளை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்கி வருகின்றது.
  • கிராமத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் நோக்கத்துடன் இந்த மையம் ஆண்டுக்கு இரண்டு கிராமத்தை தத்தெடுத்து வருகிறது. இது பொருளாதார மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனித வளர்ச்சியின் பிற அம்சங்களை உள்ளடக்கியது. அதாவது கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்கல் போன்றவை.
  • இந்த மையத்தின் வல்லுனர்கள் பருவகால அடிப்படையிலான ஆலோசனைகள், பொது மேலாண்மை மற்றும் கால்நடை மற்றும் கோழிப்பண்ணையின் சுகாதாரப்பராமரிப்பு குறித்த வானொலிப் பேச்சுக்களை தொடர்ந்து பதிவு செய்து, விவசாயிகளின் நலனுக்காக சென்னை அகில இந்திய வானொலி மூலம் ஒளிபரப்பப்படுகின்றன.
  • இந்த மையம் செங்கல்பட்டு மாவட்டத்தின் கால்நடை பராமரிப்புத்துறையுடன் இணைந்து தமிழ்நாடு அரசின் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் விலையில்லா ஆடு வழங்கும் திட்டங்களின் பயனாளிகளுக்கு பயிற்சிகளை வழங்குகிறது.
  • இந்த மையம் மாநில வேளாண்மைத்துறை / அட்மா / பிறதுறைகள் / மேம்பாட்டு நிறுவனங்களின் வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் கால்நடை வளா;ப்பு - கோழி வளர்ப்புக்கான தொழில்நுட்ப ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகின்றது.

கட்டணச் சேவைகள்

வ.எண் சேவை தொகை
1. பிரேத பரிசோதனை ருபாய் 20/-
2. சாண மாதிரி பரிசோதனை
3. இரத்த மாதிரி பரிசோதனை
4. பண்ணை பார்வையிடல் ரூபாய் 100/-
5. கால்நடை திட்ட அறிக்கை மொத்த திட்ட செலவில் 0.25%

பண்ணையாளர்களுக்கான சான்றிதழ் படிப்புகள்

வ.எண். சுய வேலைவாய்ப்பு பயிற்சி செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி
1. கறவைமாட்டுப் பண்ணையம் பால் பண்ணை உதவியாளர்
2. செம்மறியாடு வளர்ப்பு தீவன ஆலை மேற்பார்வையாளர்
3. வெண்பன்றி வளர்ப்பு கால்நடை பண்ணை மேலாளர்
4. முயல் வளர்ப்பு கோழிப்பண்ணை மேலாளர்
5. வெள்ளாடு வளர்ப்பு கோழிகளுக்கான நோய் தடுப்பூசியாளர்
6. பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி
7. ஜப்பானிய காடை வளர்ப்பு
8. நாட்டுக்கோழி வளர்ப்பு

பயிற்சி காலண்டர் (ஜூலை, 2023 முதல் டிசம்பர், 2023 வரை)

பயிற்சி காலண்டர் விவரங்கள்
பயிற்சி காலண்டர் (ஜூலை, 2023 முதல் டிசம்பர், 2023 வரை) click

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
மேல்மருவத்தூர்- 603 319 செங்கல்பட்டு மாவட்டம்
தொலைபேசி: +91–44 27529548
மின்னஞ்சல்: melmaruvathurvutrc@tanuvas.org.in