விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கரூர்


தோற்றம்

கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கரூர் 16.08.1996 முதல் 4/221, பண்டுதகாரன் புதூர், மண்மங்கலம் அஞ்சல், கரூர்-6 என்ற முகவரியில் செயல்பட்டு வருகின்றது. இம்மையமானது, விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து விதமான சேவையை வழங்குவதுடன், பகுதி சார்ந்த சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கும் தேவையான அனைத்து தீர்வுகளை கொடுக்கின்றது.

மையத்தின் நோக்கங்கள்

 • முன்கள விரிவாக்க பணியாளர்கள், பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லுதல்
 • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக ஆராய்ச்சி மற்றம் விரிவாக்க இணைப்பை வலுப்படுத்துதல்
 • கால்நடைகளை அடிப்படையாகக் கொண்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்காக கால்நடை உற்பத்திக்கான சூழலை மேம்படுத்துதல்

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி திட்டங்கள்

 • தமிழ்நாடு நீர்வள நிலவள திட்ட நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் "கறவை மாடுகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் மீத்தேன் உமிழ்வைத் தணிக்கவும் தானுவாஸில் உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்து துணை உத்திகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்" மற்றும் "உப்பு நுகர்வு பற்றிய நோக்குநிலைப் பயிற்சி" ஆகிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு மையமாக செயல்படுகிறது
 • தேசிய வேளாண்மை வளர்;ச்சி திட்ட நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் "தானுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து டானிக் கொண்டு கறவை மாடுகளுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்" என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு மையமாக செயல்படுகிறது.
 • தேசிய கால்நடை இயக்கம், 2017-2018 திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் “மேச்சேரி மற்றும் வரையறுக்கப்படாத செம்மறியாடுகளில் இயற்கை கருத்தரித்தல் மற்றும் செயற்கை கரூவூட்டல் மூலம் மரபணுத்திறன் மேம்படுத்துதல திட்டத்தில் மாவட்ட உறுப்பினராக இம்மையம் செயல்படுகிறது

சேவைகள்

 • கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பில் வளாகத்திலும் வளாகத்திற்கு வெளியேயும் பல்வேறு பயிற்சித் திட்டங்களை வழங்குதல்
 • பண்ணையாளர்களுக்கு தேவையான பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த வெளி வளாக பயிற்சிகளை அவர்களின் இடங்களில் நடத்துதல்
 • கால்நடைகளின் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்காகவும் மற்றும் கோழி வளர்ப்பிற்கான தீவனம் தயாரிப்பதில் ஆலோசனை மற்றும் தகவல் சேவைகள்
 • புதிய கால்நடை பண்ணைத் தொடங்குவதற்குவும் அல்லது பிரச்சனைகளைக் கண்டறிந்து தகுந்த தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் பண்ணையை பார்வையிடுதல்
 • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் பல்கலைக்கழகத்தால் சான்றளிக்கப்பட்ட சுய வேலைவாய்ப்பு மற்றம் திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்புகளை நடத்துதல்
 • பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு பண்ணை தொடங்குவதற்கு திட்ட அறிக்கை தயாரித்து பண்ணையாளர்களுக்கு வழங்குதல்
 • கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பின் அடிப்படையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தத்தெடுக்கப்பட்ட கிராமத்தில் நலத்திட்டங்களை செயல்படுத்துதல்
 • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் பயிற்சிகளை நடத்துதல்
 • மாதிரி தீவன வங்கிகள் மற்றும் அசோலா குழிகளை நிறுவுதல் மற்றும் பராமரித்தல், முயல்களுக்கான குறைந்த விலை பேட்டரி கூண்டுகள், கிராமப்புற கோழி கூண்டு, தீவன புல்வெட்டும் கருவி, பால் கறவை இயந்திரம், மாடுகளுக்கான தரை விரிப்பு, கோழிகளுக்கான மூக்கு வெட்டும் கருவி, முட்டை அடைகாக்கும் கருவி மற்றும் கருமுட்டை சோதிப்பான் போன்ற கால்நடைப்பண்ணை மாதிரிகள் இம்மையத்தில் பண்ணையாளர்களுக்கு காட்சிக்கு வைத்தல்
 • பல்கலைக்கழக தொழில் நுட்ப தயாரிப்புகள் மற்றும் புத்தக வெளியீடுகள் மானிய விலையில் விற்பனை செய்தல்
 • கால்நடைகள் மற்றும் கோழிகளின் நோய் கண்டறிதல், பிரேத பரிசோதனை, சாணம் மாதிரி மற்றும் இரத்தப் பரிசோதனை மூலம் தொடர்ந்து செய்யப்படுகிறது
 • பண்ணைகளைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை சரிபார்க்க நீர் மாதிரிகளின் பகுப்பாய்வு செய்தல்
 • கால்நடைகள் மற்றும் கோழிகளின் வளர்ப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை தொடுதிரை தகவல் கணிணி வழியாக பண்ணையாளாகள் சுயமாக அறிந்து கொள்ளும் வசதி

பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தகங்கள்

வ.எண். பல்கலைக்கழக பொருட்கள் மற்றும் புத்தகங்கள் விலை (ரூபாயில்)
1 தனுவாஸ் தாது உப்புக்கலவை 75
2 தனுவாஸ் தாது உப்புக்கட்டி 60
3 கறவை மாடு வளர்ப்பு 50
4 வெள்ளாடு வளர்ப்பு 40
5 நாட்டுக் கோழி வளர்ப்பு 50
6 இறைச்சிக் கோழி வளர்ப்பு 30
7 முயல் வளர்ப்பு 30
8 வெண்பன்றி வளர்ப்பு 40
9 வான்கோழி வளர்ப்பு 35
10 ஜப்பானிய காடை வளர்ப்பு 40
11 கால்நடைகளுக்கேற்ற தீவனப்பயிர்கள் 30
12 மரபுசார் மூலிகை மருத்துவம் 25
13 கால்நடைப் பொருளாதாரம் 20
14 தீவன சோளம் விதை (CoFs 29) 410
15 வேலி மசால் விதை 550

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
4/221, பண்டுதகாரன் புதூர், மண்மங்கலம் அஞ்சல்,
கரூர்-6
தொலைபேசி: +91–4324 – 294335 / +91-73390 57073
மின்னஞ்சல்: karurvutrc@tanuvas.org.in