விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், ஈரோடு


தோற்றம்

கால்நடை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், 13.11.1980 அன்று ஈரோட்டில் தொடங்கப்பட்டு, பின்னர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 306, சத்தி சாலை, வீரப்பன் சத்திரம், ஈரோடு - 638 004 என்ற முகவரியில் செயல்பட்டு வருகின்றது. இம்மையமானது, விவசாயிகளுக்குத் தேவையான சேவையை செய்வதுடன், பகுதி சார்ந்த குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கும் தேவையான தீர்வுகளை கொடுக்கின்றது.

குறிக்கோள்கள்

 • முன்கள விரிவாக்க பணியாளர்கள் / பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லுதல்.
 • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இணைப்பை வலுப்படுத்துதல்.
 • கால்நடைகளை அடிப்படையாகக் கொண்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்காக கால்நடை உற்பத்திக்கான சூழலை மேம்படுத்துதல்.

முக்கிய சேவைகள்

 • கால்நடைகள் மற்றும் கோழிகளின் உற்பத்தி திறனை அதிரிகரிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் தகவல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
 • கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பிற்கான உள் வளாகப் பயிற்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன.
 • கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பு பயிற்சி தேவைப்படுவோருக்கு வெளிவளாகப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
 • சான்றிதழுடன் கூடிய கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பிற்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
 • கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பிற்கான வங்கி திட்ட அறிக்கையானது கட்டணத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது.
 • கிராம தத்தெடுப்பு நிகழ்ச்சியின் மூலமாக, அக்கிராம மக்களுக்காக, கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு பயிற்சிகள் மற்றும் பிற விழிப்புணர்வு பயிற்சிகளின் வாயிலாக அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகின்றது.
 • விவசாயிகளுக்கு, மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் கூடிய கால்நடை மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
 • மாதிரி தீவன பாத்திகள், அசோலா வளர்ப்பு சில்பாலின் தொட்டிகள், ஆடுகள், முயல்கள், ஊரக கோழி வளர்ப்பு கூண்டு, கோழிக்குஞ்சுகளுக்கான கூண்டு மற்றும் முட்டை கரு பரிசோதனை கருவி போன்றவை மையத்திற்கு வரும் விவசாயிகள் பார்வையிட காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 • பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தகங்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன

பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தகங்கள்

வ.எண் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தகங்கள் விலை (ரூபாயில்)
1 தானுவாஸ் ஸ்மார்ட் தாதுப்பு கலவை 45 ரூபாய்
2 தானுவாஸ் தாதுப்பு கட்டி 60 ரூபாய்
3 கறவைமாடு வளர்ப்பு புத்தகம் 50 ரூபாய்
4 வெள்ளாடு வளர்ப்பு புத்தகம் 50 ரூபாய்
5 நாட்டுக்கோழி வளர்ப்பு புத்தகம் 50 ரூபாய்
6 முயல் வளர்ப்பு புத்தகம் 30 ரூபாய்
7 வெண்பன்றி வளர்ப்பு புத்தகம் 40 ரூபாய்
8 நவீன முறையில் வான்கோழி வளர்ப்பு புத்தகம் 35 ரூபாய்
9 கால்நடைகளுக்கேற்ற பசுந்தீவனப் பயிர்கள் புத்தகம் 30 ரூபாய்
10 கால்நடை பண்ணைப் பொருளாதாரம் புத்தகம் 20 ரூபாய்
11 ஜப்பானியக் காடை வளர்ப்பு புத்தகம் 40 ரூபாய்
12 மரபுசார் மூலிகை மருத்துவம் புத்தகம் 25 ரூபாய்
13 இறைச்சிக்கோழி வளர்ப்பு புத்தகம் 25 ரூபாய்

கல்வி

 • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு, கால்நடைப் பொருட்களின் மதிப்பு கூட்டல் போன்ற சான்றிதழடன் கூடிய ஒரு மாத சுயவேலைவாய்ப்பு படிப்புகள் கால்நடை தொழிலில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு நடத்தப்படுகின்றன.
 • ஒரு மாத சுயவேலைவாய்ப்பு படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் பெறப்பட்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகம் (DDE), சென்னை மூலம் நடத்தப்படுகின்றன.
 • இம்மையத்தில் நடத்தப்படும் சுயவேலைவாய்ப்பு படிப்புகளின் பட்டியல் மற்றும் அதன் கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள்

வ.எண் பயிற்சியின் பெயர் கல்வித்தகுதி பயிற்சிக் கட்டணம் பயிற்சிக் காலம்
1 கறவைமாட்டுப் பண்ணையம் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 1000 ரூபாய் 1 மாதம்
2 செம்மறியாடு வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 500 ரூபாய் 1 மாதம்
3 வெள்ளாடு வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 1000 ரூபாய் 1 மாதம்
4 பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 500 ரூபாய் 1 மாதம்
5 முயல் வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 500 ரூபாய் 1 மாதம்
6 வெண்பன்றி வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 2000 ரூபாய் 1 மாதம்
7 ஜப்பானியக் காடை வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 1000 ரூபாய் 1 மாதம்
8 நாட்டுக்கோழி வளர்ப்பு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 1000 ரூபாய் 1 மாதம்

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி திட்டங்கள்

 • நபார்டு நிதி உதவியுடன் “ஈரோடு மாவட்ட தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புறக்கடை நாட்டுக்கோழி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம்” என்ற ஆராய்ச்சி திட்டமானது கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், ஈரோட்டால் செயல்படுத்தப்படுகின்றது.
 • தமிழ்நாடு நீர் வள நிலவள திட்டம் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் , "விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமான தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட துணை ஊட்டச்சத்துகள் மூலம் கறவைமாடுகளில் உற்பத்தியை அதிகரித்து மீத்தேன் வாயு வெளியேற்றத்தை குறைத்தல்" என்ற ஆராய்ச்சி திட்டத்தில் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், ஈரோடானது துணை ஆராய்ச்சி நிறுவனமாக பங்கேற்றுள்ளது.
 • தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும், "தாணுவாசு கிராண்ட் ஊட்ட சத்துக்களின் மூலம் மாடுகளின் உற்பத்தி மற்றும் இலாபத்தை அதிகரித்தல்" என்ற ஆராய்ச்சி திட்டத்தில் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், ஈரோடானது துணை ஆராய்ச்சி நிறுவனமாக பங்கேற்றுள்ளது.

உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
306, சத்தி சாலை, வீரப்பன் சத்திரம்,
ஈரோடு - 638 004.
தொலைபேசி: +91–424-2291482
மின்னஞ்சல்: erodevutrc@tanuvas.org.in