விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல்


தோற்றம்

திண்டுக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் 26.06.1999 அன்று மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்களால் சென்னையில் ஒரு அதிகாரபூர்வ விழாவில் தொடங்கப்பட்டு விஜய்தா காலனி, நந்தவனப்பட்டியில் செயல்பட்டு வந்தது. தற்பொழுது 03.10.2011 அன்று முதல் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திண்டுக்கல்-624 004 செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்த மையம் ஆய்வகத்திலிருந்து விவசாய சமூகத்திற்கு சாத்தியமான தொழில்நுட்பங்களை மாற்றுவதற்கான சேவைகளை வழங்குகிறது மற்றும் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பரிந்துரைக்க முயற்சிக்கிறது.

மையத்தின் குறிக்கோள்கள்

  • முன்கள விரிவாக்க பணியாளர்கள்/ பல்கலைகழக தொழில்நுட்ப வல்லுநர் மூலம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லுதல்.
  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பாங்களை உருவாக்குவதற்காக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இணைப்பை வலுப்படுத்துதல்.
  • கால்நடைகளை அடிப்படையாகக் கொண்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்காக கால்நடை உற்பத்திக்கான சூழலை மேம்படுத்துதல்.

முக்கிய செயல்பாடுகள்

  • வளாகத்தினுள் மற்றும் வளாகத்திற்கு வெளியில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்குதல்
  • மக்கள் தொடர்பு முகாம் நடத்துதல்
  • கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடத்துதல்
  • பண்ணைகளை பார்வையிடுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்
  • கௌரவ விரிவுரை வழங்குதல் - கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொழில்நுட்ப வகுப்பு
  • கால்நடை கண்காட்சி நடத்துதல்
  • விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்துதல்
  • புதிய கால்நடை பண்ணை தொடங்குவதற்கு ஆலோசனை வழங்குதல்
  • கால்நடை நோய் புலனாய்வு மற்றும் ஆலோசனை வழங்குதல்
  • கால்நடை சகோதர துறையோடு இணைந்து பணியாற்றுதல்

முக்கிய சேவைகள்

கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பு பயிற்சிகளை வளாகத்தினுள் மற்றும் வளாகத்திர்கு வெளியில் மகளிர் சுய உதவி குழுக்கள், நிலமற்ற விவசாயிகள், ஏழைகள், வேலையில்லா பட்டதாரிகள், பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு வழங்குதல். வேவ்வேறு செயல் முறை வகுப்புகள் பின்வருமாறு

  • கறவைமாடு வளர்ப்பு
  • வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு
  • முயல் வளர்ப்பு
  • நாட்டுக்கோழி வளர்ப்பு
  • பன்றி வளர்ப்பு
  • ஜப்பானிய காடை வளர்ப்பு
  • வான்கோழி வளர்ப்பு

பிற செயல்பாடுகள்

  • கால்நடை மற்றும் கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு- நேரடியாக, அஞ்சல் வழி, மின்னஞ்சல் வழியாக ஆலோசனை வழங்குதல்
  • புதிதாக பண்ணை அமைக்கும்பொழுது மற்றும் நோய் கிளர்ச்சி ஏற்படும்பொழுது பண்ணையை பார்வையிடல்
  • கால்நடைகளுக்கு பிரேத பரிசோதனை செய்து அதன் மாதிரிகளை நோய் புலனாய்விற்கு அனுப்புதல்.
  • கால்நடைகளிடமிருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு உட்படுத்துதல் மற்றும் மாதிரிகளை மத்திய பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு அனுப்புதல்.
  • கால்நடை மற்றும் கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்ப உத்திகளை வழங்குதல்
  • கால்நடை பாதுகாப்புத்திட்டம், மக்கள் தொடர்பு முகாம் மற்றும் கால்நடைகளுக்கு மலடு நீக்க முகாம் ஆகியவற்றை நடத்துதல்
  • விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் கால்நடை கண்காட்சி நடத்துதல்
  • கால்நடை வளர்ப்பில் வென்றிக்கண்ட விவசாயின் கதையினை ஆவணமாக்குதல்.
  • பல்கலைக்கழக பதிப்பகங்களை விற்பனை செய்தல்
  • பல்கலைக்கழக தாதுப்பு கலவை மற்றும் தீவன வித்துக்கள் விற்பனை செய்தல்
  • விவசாயிகளை கால்நடைகள் சம்மந்தமான கருத்தரங்கில் கலந்துகொள்ள ஊக்குவித்தல்.

உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
திண்டுக்கல் - 624 004.
தொலைபேசி: +91–451-2904041
மின்னஞ்சல்- dindigulvutrc@tanuvas.org.in