விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்


தோற்றம்

கடலூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமானது கடலூர்- புதுச்சேரி புறவழிச்சாலையில் செம்மண்டலத்தை அடுத்து உள்ள குண்டுசாலையில் அமைந்துள்ளது. இம்மையமானது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தால் கட்டப்பட்டது. இம்மையம் 27-02-2016 முதல் செயல்பட்டு வருகிறது.

மையத்தின் குறிக்கோள்கள்

  • கால்நடைகள் மற்றும் கோழிகள் தொடர்பான இயற்கைவளமேலாண்மை தொழில்நுட்பகளை முன்கள விரிவாக்கம் மற்ற முகவர்கள் மூலம் பரிமாற்றம் செய்தல்.
  • கால்நடைகள் கோழிகள் சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் விரிவாக்கம் போன்ற இணைப்புகள் மூலம் தேவையான குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்.
  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் கால்நடை தொழில் முனைவோர் மூலம் கால்நடை அடிப்படையிலான வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துவதற்கு கால்நடை உற்பத்தி சூழல் அமைப்பை மேம்படுத்துதல்.

மையத்தின் சேவைகள்

  • கால்நடை மற்றும் கோழி இனங்கள் வளர்ப்பு , மற்றும் கால்நடை உற்பத்தி பொருள்களின் விற்பனை பற்றிய உள் மற்றும் வெளி வளாக பயிற்சிகள் அளித்தல்.
  • கண்காட்சிகள், குறுந்தகடு விளக்கப்படங்கள், சிறப்பு விரிவுரைகள், விளக்க உரைகள் மற்றும் கருததரங்குகள் போன்ற விரிவக்கப்பணிகளை மேற்கொள்ளுதல்.
  • அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சார்ந்த பயணிகளுக்கு பயிற்சி அளித்தல்.
  • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு பற்றிய கண்காட்சிகளை நடத்துதல்.
  • கால்நடை பராமரிப்பு துறை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் நிகழ்ச்சிகள் பற்றிய விழிபபுணர்வு நிகழ்ச்சி நிரல்களை நேரடி தொடர்ப்பு, வானொலி, தொடுதிரை கணினி மற்றும் உள்ளூர் செய்தித்தாள்கள் மூலம் பண்ணையாளர்களுக்கு வழங்குதல்.
  • நோய் ஆய்வு நடவடிக்கை மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைகழக ஆராய்ச்சி கண்டுப்பிடிப்புகளை கல ஆய்வு செய்தல்.
  • கால்நடை பராமரிப்பு துறையின் ஈடுபாடுகளுடன் பொது தொடர்பு நிகழ்ச்சி மற்றும் விசேட கால்நடை மலட்டுத்தன்மை நீக்க மருத்துவ முகாம்களையும் நடத்துதல்.
  • பட்டபடிப்பு, பள்ளிப்படிப்பு முடித்தோர்களுக்கும் தோற்றோர்களுக்கும் மற்றும் வேலையற்ற இளைஞர்களுக்கும் செயல்திறன் மேம்பாடு பயிற்சிகளை நடத்தி புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்.
  • பலவகையான நிறுவனங்களின் வேண்டுகோளுக்கிணங்க விரிவுரைகள் வழங்குதல்.
  • கால்நடைப் பண்ணைகளை நேரடியாக பார்வையிட்டு பண்ணை பராமரிப்பு முறைகளை பண்ணையாளர்களுக்கு எடுத்துரைத்தல்.
  • கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தின் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு பற்றிய தமிழ் வெளியீடுகள், தாது உப்புக்கலவை மற்றும் தீவன விதைகள் போன்றவற்றை பண்ணையாளர்களுக்கு விற்பனை மூலம் கொண்டு செல்லுதல்.
  • கால்நடைப் பண்ணை அமைவு மற்றும் பரமரயுப்பு பற்றிய துண்டு பிரசுரம் மற்றும் வழிக்கட்டிகளை தயார் செய்து விநியோகம் செய்தல்.
  • கால்நடை மருத்துவர்கள் மற்றும் பண்ணையாளர்களின் தேவைக்கேற்ப ஆய்வக சோதனைகளை மேற்கொள்ளுதல்.
  • கால்நடைத்துறையில் தொழில் முனைவோர்களாக விரும்புபவர்களுக்காக
  • ஒரு மாத சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள் தேவையின் அடிப்படையில் வழங்கபடுகின்றன. இதற்கான கட்டணம் ரூபாய் 500 முதல் ரூபாய் 1000 வரை வசூலிக்கப்படுகிறது.
  • கால்நடை பண்ணையம் தொடங்குவதற்காக வங்கிகளில் கடனுதவி பெரும் வகையில் தேவையான திட்ட அறிகைக்கள் தயாரித்து வழங்கபடுகிறது. எதற்காக திட்ட அறிகையின் மொத மதிப்பில் 0.25% கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
  • தேவையின் அடிப்படையில் மையத்திலிருந்து வல்லுனர்கள் பன்னயலர்களின் பண்ணைக்கு வந்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்குகிறார்கள்.
  • இம்மையத்தை நாடி வரும் விவசாயிகளுக்கு கால்நடைகள் அனைத்து விதமான ஆலோசனைகள் வழங்குகிறார்கள்.
  • இம்மையத்தில் தாது உப்பு கலவை, தாது உப்பு கட்டி, தீவன விதைகள். பலகலைகழக புத்தக வெளியீடுகள் விற்பனை செய்ய படுகிறது.
  • கால்நடை கதிர் மாதாந்திர இதழ் தேவைப்படும் பயனாளர்களுக்கு உரிய கட்டணம் செலுத்தினால் அவர்களது இல்லத்தற்கு அஞ்சல் வழி அனுப்பி வைக்கப்படுகிறது

உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
கடலூர்- பாண்டி புறவழி சாலை, குண்டுசாலை,
செம்மன்டலம், கடலூர்-607001 .
தொலைபேசி: +91–4142 290249
மின்னஞ்சல்: cuddalorevutrc@tanuvas.org.in