VCRI, Udumalpet

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை

கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறை


கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டையில் கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறையானது 2020 இளங்கலைப் படிப்பை (B.V.Sc. &A.H) கால்நடை மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தரநிலைகளின்படி (2016) வழங்க உருவாக்கப்பட்டுள்ளது.

குறிக்கோள்கள்

  • கால்நடை உடற்செயலியல் மற்றும் கால்நடை உயிர்வேதியியல் ஆகிய துறைகளில் இளங்கலை பட்டதாரிகளுக்கு கல்வி கற்பித்தல்
  • கால்நடை உடற்செயலியல் ஆராய்ச்சியை மேற்கொள்வது
  • பல்கலைக்கழகம்/வெளிப்புற நிதியுதவி நிறுவனங்களின் நிதி உதவியுடன் ஆராய்ச்சி திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துதல்

கல்வி

இந்திய கால்நடை மருத்துவ குழும (MSVE 2016) கல்வி திட்ட நெறிமுறைகளின்படி கால்நடை உடற்செயலியல் துறையானது முதலாம் ஆண்டிற்கான மற்றும் கால்நடை உயிர் வேதியியல் துறையானது இரண்டாம் ஆண்டிற்கான பாட பிரிவுகளை பயிற்று வருகிறது - சுரப்பிகள், இனப்பெருக்கம், வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் உடற்செயலியல் கால்நடை உடற்செயலியல் பாடத்தில் இரத்தம், இருதய மண்டலம், நரம்புத்தசை மண்டலம், செரிமான மண்டலம், சுவாச மண்டலம், குறித்த மண்டலம், நாளமில்லா ஆகியன கற்பிக்கப்கிறது. உயிர்வேதியியல் பாடத்தில் மாவுப்பொருட்கள், புரதம், கொழுப்பு, நியுக்ளிக் அமிலங்கள், வளர்சிதை மாற்றங்கள் மற்றும் சிகிட்சை ஆய்வுகள் ஆகியன கற்பிக்கப்படுகிறது.

உள்கட்டமைப்பு வசதிகள்

துறை தற்போது பின்வரும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது:

  • மீ நுண்துகள்களுடன் ஹார்மோன் இணைக்கப்பட்டு உருவான சுரப்பிநீரால் ஆட்டில் இனப்பெருக்க பருவத்தை உருவாக்குதல்.
  • தென்தமிழகத்தில் சிறு அசைபோடும் விலங்குகளில் வெப்ப அயற்ச்சியினால் உருவாகும் மாற்றங்களை கண்டறிதல்.
  • நாட்டின நாய்களில் விந்தணுக்களின் பொதுப்பண்புகளை ஆராய்தல்.

குறிப்பிடத்தக்க சாதனைகள்

இத்துறையானது பாட தேவைகளுக்கு ஏற்ப அனைத்து வசதிகளுடன் கூடிய ஆராய்ச்சி கூடம் மற்றும் உபகாரணகளுடன் செயல்பட்டு வருகிறது.


கால்நடை உடற்செயலியல் ஆய்வகம்

  • நுண்ணோக்கி
  • நரம்பு மற்றும் தசைகள் தொடர்பான மென்பொருள் கருவிகள் பைனாகுலர் மைக்ரோஸ்கோப்
  • ரத்த பகுப்பாய்வு கருவிகள்
  • வானிலை மாற்றம் கண்டறியும் உபகாரணகள்
  • செரிமான மண்டலம் தொடர்புடைய ஆராய்ச்சி கருவிகள்
  • இதய செயல்பாடுகளை கண்டறியும் கருவி
  • வேதி பொருட்களை அளவிடுவதற்கான எடை கருவி

கால்நடை உயிர்வேதியியல் துறை

  • நிறமாலை ஒளிமானி
  • ஒளி மின் நிறமானி
  • ஆள் உறை பெட்டகம்
  • ஒளி விலகல் அளவி
  • நுண்ணோக்கி
  • அமில கார அளவி
  • அளவிடுவதற்கான மின்னணு எடை கருவி
  • இன்குபேட்டர்
  • ஹாட் வாட்டர் பாத்
  • ஹாட் ஏர் ஓவென்
  • மேக்னெட்டிக் ஸ்டிர்ரர் & வொர்டெக்ஸ் மிக்ஸர்

கால்நடை உடற்செயலியல் ஆய்வகம்

  • தானியியங்கி இரத்த பாகுப்பாய்வு கருவி
  • நிறமாலை ஒளிமானி
  • தானியியங்கி வேதிப்பொருட்கள் பாகுப்பாய்வு கருவி
  • வண்ண படிவு பிரிகை
  • தழல் ஒளியளவிட்டம்
  • அதிவேக குளிரூட்டிய மைய விலக்கி

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை –642 126.
தொலைபேசி: +91-4252-295399 | 295499
மின்னஞ்சல்: vpb-vcri-udp@tanuvas.org.in