VCRI, Udumalpet

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை

கால்நடை நுண்ணுயிரியல் துறை


கால்நடை நுண்ணுயிரியல் துறையானது, இளங்கலை கால்நடை மருத்துவ பட்டதாரி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கத்துடன் 2020 ஆம் ஆண்டு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டையில் உருவாக்கப்பட்டது.

பார்வை

  • கால்நடைகள், கோழிகள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு மண்டல அளவிலான நோய் கண்டறியும் ஆய்வகம் அமைத்தல்.

குறிக்கோள்கள்

  • இளங்கலை கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு கால்நடை நுண்ணுயிரியலில் தரமான
  • கல்வியை வழங்குதல்
  • கால்நடைகள் மற்றும் கோழிகளில் ஏற்படும் நோய்கள் பற்றிய ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளுதல்
  • பல்வேறு மருத்துவ மாதிரிகளை ஆய்வு செய்து, கால்நடைகள் மற்றும் கோழிகளின் தொற்று நோய்களைக் கண்டறிதல்
  • கால்நடை நுண்ணுயிரியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து களப்ணியாளர்களாய் பணிபுரியும் கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்தல்
  • கால்நடைப் பண்ணையாளர்களுக்கு கால்நடை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

கல்வி

இத்துறையானது, இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கு கால்நடை நுண்ணுயிரியலில் தரமான கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட “கால்நடை மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தரநிலைகள் – 2016” விதிமுறைகளின்படி, இளங்கலை மாணவர்களுக்கு பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன

II தொழில்முறை ஆண்டு - VMC – கால்நடை நுண்ணுயிரியல் (3+2)

  • அலகு I – பொது மற்றும் முறையான கால்நடை நுண்மவியல்
  • அலகு II – கால்நடைப் பூஞ்சையியல்
  • அலகு III – நுண்ணுயிரி உயிர்தொழில்நுட்பவியல்
  • அலகு IV – கால்நடை நோய் எதிர்ப்பு திறனியல் மற்றும் ஊநீரியல்
  • அலகு V – பொது மற்றும் முறையான கால்நடை நச்சுயிரியல்

ஆய்வக வசதிகள்

கால்நடை நுண்ணுயிரியல் துறையானது, கால்நடை மற்றும் கோழிகளில் ஏற்படும் நோய்களைக் கண்டறிவதற்காக கால்நடை நுண்ணுயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான அதிநவீன வசதிகளைக் கொண்ட 3 ஆய்வகங்களைக் கொண்டுள்ளது:

  • கால்நடை நுண்மவியல் மற்றும் பூஞ்சையியல் ஆய்வகம்
  • கால்நடை நச்சுயிரியல் ஆய்வகம்
  • கால்நடை நோய் எதிர்ப்பு திறனியல் ஆய்வகம்

துறை பணிகள்

  • இத்துறையானது, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை ஆய்வகத்தில் வளர்த்தல் மற்றும்
  • கண்டறிதல், பாக்டீரியாக்களுக்கு எதிரான நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை கண்டறிதல், நோய் எதிர்ப்பு திறனியல் போன்ற தொழில்நுட்ப சேவைகளை வழங்குதல்
  • வீட்டு விலங்குகள் மற்றும் கோழிகளின் தொற்று நோய்களின் மூலக்கூறு வகையறிதல்
  • திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கால்நடைகள் மற்றும் கோழிகளில் நோய்க்கிளர்ச்சி குறித்து பல்கலைக்கழகத்தின் பிற துறைகள் மற்றும் இதர துறைகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளுதல்
  • கால்நடைகள் மற்றும் கோழி நோய்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல்

இலக்கு

கால்நடைகள், கோழிகள் மற்றும் வன விலங்குகளில் ஏற்படும் நோய்களைக் கண்டறிய மண்டல அளவிலான நோய் கண்டறியும் ஆய்வகத்தை நிறுவுதல்

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை நுண்ணுயிரியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை - 642 126.
தொலைபேசி: +91-4252-295399
மின்னஞ்சல்: vmc-vcri-udp@tanuvas.org.in