VCRI, Udumalpet

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை

விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தித்துறை


கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டையில் விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்திதுறையானது 2020 இல் இளங்கலைப் படிப்பை (B.V.Sc. &A.H) கால்நடை மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தரநிலைகளின்படி (2016) வழங்க உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையானது கால்நடை மேம்பாட்டிற்கான ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் கால்நடைகளின்புறத் தோற்றங்கள் குறித்து ஆவணப்படுத்துதல், கால்நடைகளை அழிவிலிருந்து பாதுகாக்கும் திட்டங்கள்மற்றும் கால்நடை வளர்ப்போர் & விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்தல் போன்ற செயல்பாடுகளையும்மேற்கொள்ளும்.

குறிக்கோள்கள்

  • இளங்கலை மாணவர்களுக்கு விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தி பற்றிய படிப்புகளை வழங்குதல்
  • உயர் ரக கால்நடை இனங்கள் உற்பத்தி, கால்நடை இன மேம்பாடு மற்றும் கால்நடைகள் பாதுகாப்பு போன்ற செயல்பாடுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்
  • கால்நடை வளர்ப்போர் பயன்படும் வகையில் அறிவியல் முறையிலான இனவிருத்தி முறைகள் மற்றும் நவீன தொழிநுட்பங்களை பரவலாக்கம் செய்தல்

கல்வி

இந்திய கால்நடை மருத்துவ சபையின்படி MSVE 2016 நெறிமுறைகளின்படி விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தி பாடமானது கால்நடை இளங்கலை படிப்பில் இரண்டாமாண்டில் வருகிறது. இந்த பாடத்திட்டமானது மூன்று அலகுகளை கொண்டுள்ளது,அவை பின்வருமாறு

  • அலகு 1 - உயிர் புள்ளியில் மற்றும் கணினி பயன்பாடுகள்
  • அலகு 2 - மரபியல் கோட்பாடுகள் மற்றும் இனக்குழு மரபியல்
  • அலகு 3 - விலங்கின இனவிருத்திக்கான கோட்பாடுகள்

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தித்துறை ,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை - 642 126.
தொலைபேசி: +91-4252-295399 | 295499
மின்னஞ்சல்: agb-vcri-udp@tanuvas.org.in