VCRI, Udumalpet

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை

கால்நடை உடற்கூறியல் துறை


கால்நடைஉடற்கூறியல் துறை 2020-ஆம் ஆண்டு இக்கல்லூhpயில் நிறுவப்பட்டது. இத்துறையின் நோக்கம் முதலாமாண்டு மாணவர்களுக்குகால்நடைஉடற்கூறியல் பாடத்திட்டத்தைசெம்மையாககற்பிப்பதாகும். மேலும்,கால்நடைமருத்துவர்கள் தங்களுடையசிகிச்சைப் பணியைதிறம்படசெய்வதற்கும்,களப்பணியில் கால்நடைஉடற்கூறியல் பாடப்பயன்பாட்டைவலியுறுத்தவும்; இத்துறைசெயல்படுகிறது. மேலும் கால்நடைநோய்குறியியல்,அறுவைசிகிச்சையியல் போன்றதுறைகளோடு இணைந்துபண்ணையாளர்களுக்குபயன்படுகிறஆராய்ச்சிதிட்டங்களைச் செயல்படுத்துகிறது.

குறிக்கோள்கள்

  • கால்நடை மருத்துவ இளங்கலை மாணவர்களுக்கு கால்நடை களின் உடற்கூறியல் கற்பித்தல்.
  • கால்நடை மருத்துவர்கள் தங்களின் கால்நடை மருத்துவ உடற்கூறியல் அறிவைப் புதுப்பிக்க பயிற்சித் திட்டங்களை வழங்குதல் மற்றும் மருத்துவ நோயறிதல், உடல் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முறைகளுக்கான பயிற்சிகளை வழங்குதல்.

இத்துறையில் 30 நுண்ணோக்கிகள் மற்றும் 10 காணொளிப்பெட்டிஉள்ளநவீனநுண்ணோக்கிகள் நுண்ணமைப்பியல் ஆய்வகத்தில் உள்ளன. பெருந்திரைகாட்சிபெட்டி மூலமாகமாணவர்களுக்குநுண்ணமைப்பியல் மிகநுட்பமாககற்பிக்கப்படுகிறது. மேலும்;வெப்பவாயுகொதிகலன்,நீர்வாயுகொதிகலன்,குளிர்சாதனபெட்டி,நவீனதராசுமற்றும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்டதிசுநுண்வெட்டிஆகியஉபகரணங்கள் இவ்வாய்வகத்தைமிகநவீனநிலையில் நிறுத்துகின்றன. கால்நடை கூறாய்வகத்தில், இத்துறையினரால் உருவாக்கப்பட்டமாடு,நாய் மற்றும் கோழியினுடையஎலும்பு கூடுகள் உள்ளன. அருங்காட்சியகத்தில் பன்றி,கோழி, ஆடு ஆகியவற்றின் உறுப்புகள் சேகாpக்கப்பட்டுஅழகுறகாட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒருகன்றுகுட்டிமுழுமையாகபதப்படுத்தப்பட்டுஅனைத்துஉள்உறுப்புகளையும் அதனதன் அமைவிடத்திலேயே இருக்கும் வகையில் மாணவர்களுக்குகற்பிக்கப்படுகிறது. அனைத்துவிலங்குகளின் எல்லாஎலும்புகளும் (முன் கால் எலும்பு, பின் கால் எலும்பு,முதுகெலும்புத் தொடர், இடுப்பெலும்பு,விலாஎலும்பு,மார்பெலும்பு,கபாலஎலும்பு) மாணவர்களுக்குசெயல்முறைவகுபÊபிலÊசெயல்விளகÊகம் அளிக்கப்படுகிறது. மாட்டின் இதயம், மூளை,விழிஉருண்டைஆகியவைமாணவர்களுக்கு கூறாய்வுசெய்துகற்பிக்கப்படுகிறது. நுரையீரல்,கல்லீரல்,மண்ணீரல்,வயிறு, குடல்,சிறுநீரகம், இரைப்பை, இனப்பெருக்கஉறுப்புகள் போன்றஅனைத்துஉறுப்புகளின் சிறப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்குஎலும்பியல், மூட்டியல்,தசையியல், இரத்தநாளவியல்,நரம்பியல்,நுண்ணமைப்பியல்,உள்ளுறுப்பியல்,கருவளாpயல் மற்றும் பயன்பாட்டுஉடற்கூறியியல் போன்றஅனைத்துபாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உடற்கூறியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை - 642 126.
தொலைபேசி: +91-4252-295399 | 295499
மின்னஞ்சல்: van-vcri-udp@tanuvas.org.in