VCRI, Tirunelveli

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை


கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலை கால்நடை மருத்துவ மாணவர்களைவ ல்லுநர்களாக்கும் பொருட்டு 2012 ஆம் ஆண்டு இத்துறைஉருவாக்கப்பட்டது. மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கிடைபரவும் நோய்கள்கண்டறியும் ஆய்வகம், பால் மற்றும் இறைச்சி சுகாதாரம், மூலக்கூறு நோய் நிகழ்வாய்வியல் ஆய்வகங்கள் இத்துறையில்உள்ளன.


குறிக்கோள்கள்

கல்வி:

கால்நடைமருத்துவஇளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கால்நடை பொதுசுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் பாடங்களைபயிற்றுவித்தல்.

ஆராய்ச்சி:

விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையே பரவம் நோய்கள் குறித்து கண்காணித்தல் மற்றும் முன்னெச்சரிக்கை மாதிரிகளை தேவைக்கேற்ப உருவாக்குதல்.

விரிவாக்கம்:

பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையேபரவும் நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல், உணவுபாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாத்தல் போன்றவற்றில் விழிப்புணர்வினை ஏற்படுத்தல்.

கல்வி

கால்நடை மருத்துவ பாடத்திட்டம்– 2016ன்படி, கால்நடை பொதுசுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் பாடம் மாணவர்களுக்குபயிற்றுவிக்கப்படுகிறது. பால் மற்றும் இறைச்சி சுகாதாரம், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையே பரவும் நோய்கள், உணவுப்பாதுகாப்பு, நோய்நிகழ்வாய்வியல், சுற்றுப்புறச்சூழல் சுகாதாரம் குறித்த பாடங்கள் மாணவர்களுக்கு விரிவாக பயிற்றுவிக்கப்படுகிறது. .

ஆராய்ச்சி

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையே பரவும் நோய்கள் பற்றிய தகவல்களை சேகரித்தல் மற்றும் இந்நோய்களைக்கண்டறியும் ஆய்வகத்தைத்துறையில் உருவாக்கும் நோக்கத்துடன் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கன்றுவீச்சுநோய், காக்சியெல்லோசிஸ், வெறிநோய், எலிக்காய்ச்சல்நோய், லிஸ்டீரியோசிஸ், மற்றும் உணவுமூலம் கால்நடைகளிடமிருந்து மனிதர்களுக்குப்பரவும் நோய்களானசால் மெனெல்லோசிஸ், கேம்பைளோபாக்டீரியோசிஸ் போன்ற நோய்களின் நிகழ்வு குறித்து தற்போது ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.

குறிப்பிடத்தக்க சாதனைகள்

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையே பரவும் நோய்கள் கண்டறியும் ஆய்வகத்தினை நிர்மாணித்தல். கன்றுவீச்சு நோய் மற்றும் காக்சியெல்லோசிஸ் நோய் நிகழ்வு குறித்து முறையே திருநெல்வேலி மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டது


இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358.
தொலைபேசி: +91-462-2336345
மின்னஞ்சல்: vphvcritni@tanuvas.org.in