VCRI, Tirunelveli

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறை


கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவர்களை தரம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறையானது 2012 -ஆம் ஆண்டு ஜீன் மாதம் தொடங்கப்பட்டது. பயிற்சி ஆய்வுக்கூடங்கள், இரத்த பரிசோதனை ஆய்வக வசதிகள் இந்த துறையில் உள்ளன.
ஆய்வகங்களில் ஸ்பைரோமீட்டர், சிறிய இரத்த ஆய்வு மையவிலக்கு கருவி, ஆய்வக தராசு, ஒற்றைத்தட்டு தராசு, நுண்ணோக்கி, சிகிட்சை மையவிலக்கு கருவி, உறுப்பு கலன், முக்கண் ஆராய்ச்சி நுண்ணோக்கி, சூழ்நிலைக் காரணிகளை அளவிடும் கருவிகள், விந்தணு பகுப்பாய்வு கருவிகள், உடற்செயலியல் சோதனைக் கருவிகள், மெல்லிய அடுக்கு வண்ணப்படிவு பிரிகை, முறிவுமானி, ஒளிநிறமானி, கூழ்ம மின் பிரிகை, கார காடி நிலைமானி உவர்நிலை, காந்தக கலப்பி, சுழல் கலப்பி, வெந்நீர் கலன;, மிதநீர் கலன;, இul;il நீர்காய்ச்சி வடித்தல் உபகரணம் (படிகம்), இருமுறை நீர்காய்ச்சி வடித்தல் உபகரணம் (கண்ணாடி), குளிரூட்டப்பட்ட நுண்மையவிலக்கு கருவி, புறஊதா இரட்டை கற்றை நிறமாலை , ஒளிமானி போன்ற சாதனங்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


குறிக்கோள்கள்

கல்வி:

இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் பாடத்தினை சிறப்பாக பயிற்றுவிக்குதல்.

ஆராய்ச்சி:

கால்நடைகளில் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்காக உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் குறித்த ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்வது.

விரிவாக்கம்:

இனப்பெருக்க திறனை மேம்படுத்துவதற்காக ஹார்மோன் அடிப்படையிலான பொருட்கள் பற்றிய அடிப்படை அறிவை விவசாய சமூகத்திற்கு வழங்குதல்.

கல்வி

சுரப்பிகள், இனப்பெருக்கம், வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் உடற்செயலியல் கால்நடை உடற்செயலியல் பாடத்தில் இரத்தம், இருதய மண்டலம், நரம்புத்தசை மண்டலம், செரிமான மண்டலம், சுவாச மண்டலம், குறித்த மண்டலம், நாளமில்லா ஆகியன கற்பிக்கப்கிறது. உயிர்வேதியியல் பாடத்தில் மாவுப்பொருட்கள், புரதம், கொழுப்பு, நியுக்ளிக் அமிலங்கள், வளர்சிதை மாற்றங்கள் மற்றும் சிகிட்சை ஆய்வுகள் ஆகியன கற்பிக்கப்படுகிறது.

ஆராய்ச்சி

துறை தற்போது பின்வரும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது:

  • மீ நுண்துகள்களுடன் ஹார்மோன் இணைக்கப்பட்டு உருவான சுரப்பிநீரால் ஆட்டில் இனப்பெருக்க பருவத்தை உருவாக்குதல்.
  • தென்தமிழகத்தில் சிறு அசைபோடும் விலங்குகளில் வெப்ப அயற்ச்சியினால் உருவாகும் மாற்றங்களை கண்டறிதல்.
  • நாட்டின நாய்களில் விந்தணுக்களின் பொதுப்பண்புகளை ஆராய்தல்.

குறிப்பிடத்தக்க சாதனைகள்

செம்மறியாடுகளில் இன்கிபின் ஹார்மோனுக்கு எதிராக தடுப்பாற்றல் உருவாக்குவதால் இரத்தத்தில் பாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (எப்.எஸ்.எச்), 17 பீட்டா ஈஸ்ட்ரடயால் மற்றும் புரஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கின்றன. மேலும் பாலிக்கிளின் வளர்ச்சி மற்றும் கருமுட்டை வெளியேறும் விகிதமும் அதிகமாக உள்ளன. எனவே, இது ஒரு எளிய மற்றும் குறைந்த செலவில் பக்கவிளைவுகள் இல்லாமல் கையாளப்படும் முறையாக விளங்குகிறது.


இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358.
தொலைபேசி: +91-462-2336345
மின்னஞ்சல்: vpyvcritni@tanuvas.org.in