VCRI, Tirunelveli

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை


கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவர்களை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறையானது 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மருந்தக ஆய்வுக்கூடம், மருந்தியல் பரிசோதனை ஆய்வகம் மற்றும் நச்சியல் & வேதிச்சிகிச்சை ஆய்வகம் போன்ற ஆய்வக வசதிகள் இந்த துறையில் உள்ளது. மருந்துகளின் தரம் மற்றும் நச்சு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, டெல்லியில் உள்ள விலங்குகள் மீதான பரிசோதனைகளின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வைக்கான குழு (CPCSEA) அங்கீகரித்த ஆய்வக விலங்கு ஆராய்ச்சி மையம் (Regn.No.2161/GO/Re/S/22/CPCSEA) இந்தத் துறையில் செயல்படுகின்றன.. மேலும் ஆய்வக விலங்கு பரிசோதனையை வழிமுறைப்படுத்த நிறுவன விலங்கு நெறிமுறைக் குழு (IAEC) செயல்பட்டு வருகின்றன.
ஆய்வகங்களில் தனிமைப்படுத்தப்பட்ட திசு குளியல், அசைவு வரைகருவி., டிஜிட்டல் கையகப்படுத்தல் அமைப்புடன் கூடிய மின்பதிவு சாதனம், மின்னணு தூண்டுதல், ஸ்டீரியோடாக்ஸிக் கருவி, ஒற்றை தட்டுமின்னணு தராசு, இருகண் நுண்ணோக்காடி , ஸ்பெக்ட்ரோஃபோட்டோமீட்டர், குளிரூட்டப்பட்ட மையவிலக்கி, எடைகளுடன் அளவிடுதல், கார அளவீட்டுமானி, சூடானகாற்று அடுப்பு, சுவாச எக்கி, சிறிய மைய விலக்கி, ஸ்பைரோமீட்டர், ரோட்டா ராட், ஆக்டோஃ போட்டோமீட்டர், திசு ஹோமோஜனைசர், உயர்ந்த கெட்டிக் கட்டையாலான பருகுகலம், அனல்ஜீசியோமீட்டர்- எடியின் சூடானதட்டு, அனல்ஜீசியோமீட்டர் – டெயில்ஃப்ளிக்யூனிட், துருவு கோல் கொண்ட காந்த கலக்கி, சுழல் கலவை, அதி அழுத்த கொதி கருவி, செங்குத்து லேமினார் காற்றோட்டக் கருவி, நுண்ணுயிரிகளின் வெப்பக் கட்டுப்பாட்டு பெட்டி, கூக்‌ஷ் கம்பம் ஏறும் கருவி, மின்ணணு வெர்னியர்காலிபர், டிஸ்க்டிஸ்பென்சருடன் ஆன்டிபயாடிக் ஸோன்ரீடர், சுழல் வெற்றிட ஆவியாக்கி அதி அழுத்த கொதி கருவி – முழுதானியங்கி போன்ற சாதனங்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


குறிக்கோள்கள்

கல்வி:

கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியலில் இளங்கலை/முதுகலை மற்றும் முனைவர்பட்ட மாணவர்களுக்கு கல்வி வழங்குதல்.

ஆராய்ச்சி:

தேவைக்கேற்ப மருந்தியல் / நச்சியல்ஆராய்ச்சிகளை இயற்கை மற்றும் செயற்கை மருந்துகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளில் மேற்கொள்ளல். மேம்படுத்தப்பட்ட மீ நுண் துகள் மூலம் மருந்து செலுத்தும் முறை தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளல்.

விரிவாக்கம்:

உழவு மற்றும் அறிவியல் சமூகத்திற்கு மருந்து தொடர்பான சேவைகளை வழங்குதல்.

கல்வி

பொது கால்நடை மருந்தியல், தன்னியக்க நரம்பு மண்டலத்தில் செயல்படும் மருந்துகள, மத்திய நரம்பு மண்டலத்தில் செயல்படும் மருந்துகள, பல்வேறு உடல் அமைப்புகளில் செயல்படும் மருந்துகள, கால்நடை கீமோதெரபி மற்றும் கால்நடை நச்சியல் போன்ற படிப்புகள் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவர் களுக்கு இத்துறை மூலம் கற்றுவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இறுதியாண்டு மாணவர்களுக்கு நிறுவனங்களின் பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கான மருந்துகளின் வர்த்தக தயாரிப்புகளை அறிந்து கொள்ள மருந்து உற்பத்தியாளர்கள் - மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தை இத்துறை தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது.

ஆராய்ச்சி

ஆய்வுகள், கால்நடைகள் மற்றும் கோழிப் பொருட்களில் உள்ள மருந்து எச்சங்களைக் கண்டறிவதற்கான வழிமுறைகள், இனவழி மருத்துவ முறைகள் மூலம் கால்நடைகளில் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனை ஊக்குவித்தல் போன்ற பகுதிகளில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் தொடர்ந்துஇத்துறை செயல்பட்டு. மீ நுண் (நானோ) தொழில் நுட்ப்பம் மூலம் மருந்து செலுத்தும் முறைகள் இனவழி கால்நடை மருத்துவம் மற்றும் மருந்து எச்சங்கள் மற்றும் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு முறை ஆகிய பகுதிகளில் ICAR மற்றும் TANII நிதியுதவியுடன் மூலம் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

ஆராய்ச்சி

கால்நடை வளர்ப்பு மற்றும் கோழிப்பண்ணை உற்பத்தி தொடர்பான பல்வேறு விரிவாக்கத் திட்டங்களில் இத்துறை ஈடுபட்டுள்ளது. கால்நடைகள் மற்றும் கோழிகளின் நோய்களுக்கு இனவழி கால்நடை மருத்துவம் மூலம் முதலுதவி சிகிச்சைமேற்கொள்ளும் முறைகள் பற்றிய பயிற்சிகள் தென் தமிழக உழவர்களிடையே மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

குறிப்பிடத்தக்க சாதனைகள்

  • விலங்குகள் மீதான பரிசோதனைகளின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வைக்கான குழு, புது தில்லி (CPCSEA) அங்கீகரித்த ஆய்வக விலங்கு ஆராய்ச்சி மையம் (Regn.No.2161/GO/Re/S/22/CPCSEA) தோற்றுவித்தது
  • ஆய்வக விலங்குகள் மீதான ஆராய்ச்சியை கண்காணிப்பதற்காக நிறுவன விலங்கு நெறிமுறைக் குழு (IAEC) அமைத்தது
  • கால்நடைகளின் குடற்புழுக்களுக்கு எதிரான இனவழி மூலிகை மருந்துகளின் தரம் மற்றும் பண்புகள் பற்றி ஆவணப்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்தது
  • கால்நடைகள் மற்றும் கோழி நோய்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ தாவரங்களின் நுண்ணுயிர் எதிர் திறன் செயல்பாட்டை மதிப்பீடு செய்தது
  • திருநெல்வேலி மாவட்டத்தின் கால்நடைகள் மற்றும் கோழிகளில் நுண்ணுயிர் எதிர் மருந்தின் எதிர்ப்புத் தன்மை பற்றிய தரவுகளை சேகரித்தது
  • தென் தமிழக உழவர்களிடையே இனவழி கால்நடை மருத்துவம் மூலம் கால்நடைகள் மற்றும் கோழி நோய்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளும் முறைகள் பற்றிய பயிற்சிகள் மேற்கொண்டது
  • துறையின் நடைபகுதியில் மூலிகை வழித்தடத்தை அமைத்தது
  • கால்நடைங்களின் மடிவீக்க நோய்க்கு நொதிகளின் வழிகாட்டுதலுடன் நுண்ணுயிர் எதிர் மருந்தினை மடிப்பகுதிக்கு மட்டும் இலக்காகக் கொண்டு மீநுண் வாகனம் மூலம் செலுத்தும் திட்டத்திற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் நிதியுதவி பெற்று செயல்படுத்துவது.

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358.
தொலைபேசி: +91-462-2336345
மின்னஞ்சல்: vptvcritni@tanuvas.org.in