VCRI, Tirunelveli

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை


குறிக்கோள்கள்

  • இக்கல்லூரியின் இளங்கலை மாணாக்கர்களுக்கு இனப்பெருக்கம், ஈனியல் மற்றும் ஆண் இனப்பெருக்கவியல் பாடங்களை கற்பித்தல்
  • கால்நடை மற்றும் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் சார்ந்த நோய்க்களுக்கு சிறப்பு நிபுணத்துவ சிகிச்சை அளித்தல்
  • இளங்கலை மாணாக்கர்களுக்கு இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் நோய் சார்ந்த பிரச்சனைகளை கண்டறியவும் , மேலும் அவைகளை கையாளும் முறைகளையும் பயிற்றுவித்தல்.
  • ஆராய்ச்சி மாணவர்களுக்கு இத்துறைச் சார்ந்த ஆராய்ச்சிகளை செய்ய தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்
  • களம் சார்ந்த பிரச்சனைகளில் தேவையான ஆராய்ச்சிகள் மேற் கொண்டு தகுந்த தீர்வுகளை கண்டறிதல்
  • இத்துறையின் கால்நடை விரிவாக்க செயற்பாட்டின் ஒருபகுதியாக கால்நடைகளை வளர்க்கும் விவசாய பெருமக்களுக்கு இனப்பெருக்க மேலாண்மை முறைகளை பயிற்றுவித்தல்
  • தென்தமிழகத்தின் உயர்தர மற்றும் மேம்படுத்தப்பட்ட இனப்பெருக்க நிபுணத்துவ சிகிச்சை மையமாக விளங்குதல்


கல்வி


இத்துறை தற்போது MSVE - 2016 பாடத்திட்டத்தின்படி VGO 411 கால்நடை இனப்பெருக்கம் (2+1), VGO 421 கால்நடை ஈனியல் (1+1) மற்றும் VGO 511 கால்நடை ஆண் இனப்பெருக்கவியல் மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் (1+1) குறித்த படிப்பை பட்டதாரி மாணவர்களுக்கு வழங்குகிறது.

துறையின் கீழ் செயல்படும் பிரிவுகள்

  • பெரிய பிராணிகள் இனப்பெருக்கப் பிரிவு
  • பெரிய பிராணிகள் ஈனியல் பிரிவு
  • பெரிய பிராணிகள் செயற்கை கருவூட்டல் முறை பிரிவு
  • சிறிய பிராணிகள் இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் பிரிவு

வழங்கப்படும் சேவைகள்:

  • பெரிய மற்றும் சிறிய பிராணிகளில் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை கண்டறிதல்
  • செல்ல பிராணிகளில் இனப்பெருக்க மேலாண்மை முறைகளுக்கான ஆலோசனைகளை வழங்குதல்
  • பெரிய மற்றும் சிறிய பிராணிகளில் ஏற்படும் ஆண் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை கண்டறிதல்

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358.
தொலைபேசி: +91-462-2336345
மின்னஞ்சல்: vgovcritni@tanuvas.org.in