VCRI, Tirunelveli

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

கால்நடை மருத்துவ சிகிச்சையியல் துறை


கால்நடை மருத்துவ சிகிச்சையியல் துறையானது, கால்நடை மருத்துவத்தில் வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவர்களை சிறந்த கால்நடை மருத்துவர்களாக மாற்றும் நோக்கத்துடன் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்துறையானது மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத நடவடிக்கைகள் என இரண்டு முக்கிய அங்கங்களை கொண்டுள்ளது.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை மருத்துவ வளாகத்தில் கால்நடை மருத்துவத் துறையின் கீழ் பின்வரும் பிரிவுகள் செயல்படுகின்றன சிறிய பிராணிகள் புற நோயாளிப் பிரிவு, சிறிய பிராணிகள் தடுப்பூசிப் பிரிவு, பெரிய பிராணிகள் புற நோயாளிப் பிரிவு, பெரிய பிராணிகள் உள்நோயாளிப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, சிறிய பிராணிகள் தொற்று நோய் பிரிவு, மீயொலிப் பிரிவு, இருதய மீயொலிப் பிரிவு, இருதய மின்னலைப் பிரிவு, குடல் உள்நோக்கி கண்டறியும் பிரிவு. கால்நடை மருத்துவ சிகிச்சையியல் மற்றும் தடுப்புமருந்தியல் ஆய்வகங்கள் பின்வரும் உபகரணங்களை கொண்டுள்ளது குளிரூட்டும் மையவிலக்கு கருவி, மின்னணு எடைக் கருவி, இரட்டை முறை நீர் வடிகட்டும் அலகுகள், ஸ்பெக்ரோபோட்டோமீட்டர்கள் (முழுமையாக தானியங்கி மருத்துவ வேதியியல் பகுப்பாய்வி), அடை காக்கும் கருவி, முட்டை அடை காக்கும் கருவி, சூடான காற்று வெதுப்பிகள், நுண்ணோக்கிகள், அழுத்த அனற்கலன் (செங்குத்து), நுண்ணொளிப்பட வசதி இணைப்புடன் கூடிய நுண்ணோக்கி, ஆழ்நிலை உறைவிப்பான், லேமினார் கருவி, மின்பகுபொருள் பிரித்தறியும் கருவி, கண் இரத்த அழுத்தம் அறியும் கருவி, அசையூண் உட்செலுத்தும் கருவி, எலீசா முறை பரிசோதனைக் கருவி.


குறிக்கோள்கள்

  • இத்துறையானது இளங்கலை கால்நடை மருத்துவக் கல்வியை வழங்க செயல்படுகின்றது
  • நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தல் மற்றும் இளங்கலை கால்நடை பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாக செயல்படுகின்றது.
  • ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக செயல்படுகின்றது .
  • விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் விலங்கு உரிமையாளர்களுக்கு நோய்தடுப்பு மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளைப் பராமரிப்பது குறித்து தகவல் வழங்கும் மையமாக செயல்படுகின்றது.
  • தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கான பரிந்துரைப் பிரிவாக செயல்படுகின்றது.

கல்வி

இத்துறையானது தற்போது பொது மருத்துவம், அமைப்பு சார்ந்த நோய்கள், வளர்சிதை மாற்றம் மற்றும் குறைபாடுகள், விலங்கு நலன், நெறிமுறைகள், மற்றும் நீதித்துறை, மிருகக்காட்சிசாலை மற்றும் வன விலங்கு மருத்துவம், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ரிக்கெட்சியல் நோய்கள், வைரஸ் மற்றும் ஒட்டுண்ணி நோய்கள் போன்ற படிப்புகளை இளங்கலை மாணவர்களுக்கு வழங்குகிறது. நான்காவது ஆண்டு கால்நடை மருத்துவ மாணவர்கள் வலுவான மருத்துவ அறிவு மற்றும் திறன்களை அறிந்து கொள்ள மருத்துவ கூட்டத்தை ஒழுங்கமைத்து நடத்தி வருகிறது.

விரிவாக்க பணிகள்

கால்நடை வளர்ப்பு மற்றும் கோழிப்பண்ணை உற்பத்தி தொடர்பான பல்வேறு விரிவாக்கத் திட்டங்களில் இத்துறை ஈடுபட்டுள்ளது. இத்துறையானது, கால்நடை மருத்துவத் துறையில் ஒரு நிபுணத்துவ அங்கத்தினராக கள நோய் ஆய்வு மற்றும் சிகிச்சைக் குழுக்களில் தேவைப்படும் போது செயல்படுகிறது. மேலும், இத்துறையானது திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சுகாதார மற்றும் தடுப்பூசி முகாம்களை நடத்துவதில் கால்நடை மருத்துவ வளாகத்திற்கு உதவுகிறது.

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை சிகிச்சையியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358.
அலைப்பேசி+91-462-2330675.
மின்னஞ்சல்:vmdvcritni@tanuvas.org.in