கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத்துறையானது கால்நடை உற்பத்திப் பொருட்களான பால், இறைச்சி, முட்டை மற்றும் கம்பளி போன்றவைகளின் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கையாளும் வகையில் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இறைச்சி அறுவைக்கூடம், இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்கள் ஆய்வகம், பால் ஆலை, பால் மற்றும் பால் பொருட்கள் ஆய்வகம் போன்ற ஆய்வக வசதிகள் இத்துறையில் உள்ளன. கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத்துறை துவங்கப்பட்ட காலகட்டத்திலிருந்து, கால்நடை இளநிலைப் பட்டதாரிகளுக்கு, இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடப்பகுதிகளே பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டிலிருந்து கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத்துறையில் முதுநிலைப் பட்டயப்படிப்பு கற்பதற்கும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத்துறையின் ஆய்வகங்களில், இறைச்சிக்காக அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி உடலங்களைத் தொங்கவிடுவதற்கான மேல்நிலை தண்டவாளக் கம்பிகள், கால்நடைகளை உணர்விழக்கச் செய்யும் கருவி, கால்நடைகளை கட்டுக்குள் வைத்து அறுப்பதற்கு ஏற்ற தடுப்பு அலகு, இறைச்சிக்கூட இதர இயந்திரங்கள், கால்நடைகளை எடையிடத் தேவையான எடையிடும் நிலுவை, தானியங்கி வெந்நீர் இயந்திரம், கோழி இறகுகளை நீக்கம் செய்யும் இயந்திரம், ஃபிளேம் போட்டோ மீட்டர், வாரிங் கலப்பான், இறைச்சியை வில்லைகளாகத் துண்டுப் போட உதவும் இயந்திரம், ஈரப்பதத்தை சமநிலைப்படுத்தும் இயந்திரம், டிஜிட்டல் நுண்ணோக்கியடன் கூடிய இருமுனைய ஒளி உமிழும் தொலைக்காட்சி மற்றும் மேசைக்கணினி, இரட்டை அலைக்கற்றையான புற ஊதாக் கதிர் மற்றும் ஒளி மூலம் செயல்படும் நிறமாலை ஒளிமானி, அரைக்கலவை இயந்திரம், கிண்ணக்கலவை இயந்திரம் போன்ற இயந்திரங்களும், கருவிகளும் உள்ளன.
கால்நடை இளநிலைப் பட்டதாரிகளுக்கு, கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத்துறை (பால், இறைச்சி, முட்டை மற்றும் கம்பளி) குறித்த கல்வியைக் கற்பித்தல்.
பால் மற்றும் இறைச்சிப் பொருட்களின் உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டல் தொடர்பான ஆராய்ச்சிகள், கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்காக ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்.
கால்நடைப் பண்ணையாளர்கள், கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போன்ற அமைப்புகளுக்கு பால் மற்றும் இறைச்சிப் பொருட்களின் உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டல் குறித்த பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கமளித்தல்.
இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடப்பகுதிகளான பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி குறித்த தொழில்நுட்பங்கள், கம்பளி அறிவியல், இறைச்சிக்கூடச் செயல்பாடுகள் மற்றும் இறைச்சிக்கூட உபப்பொருட்களைப் பயனள்ள முறையில் பயன்படுத்துவதற்கேற்ற எளிய தொழில்நுட்பங்கள் மற்றும் இறைச்சி அறிவியல் போன்ற தலைப்புகளில் கால்நடை இளநிலைப் பட்டதாரிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகின்றன.
கால்நடை உற்பத்திப் பொருட்களான பால் மற்றும் இறைச்சிப் பொருட்களின் தயாரிப்பு மற்றும் பதனப்படுத்தும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இத்துறையால் உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போன்ற அமைப்புகளுக்கு தேவைப்படும் நேரங்களில் தொழில்நுட்பப் பரிமாற்ற முறை வாயிலாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத்துறை
மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358.
தொலைபேசி: +91-462-2330675
மின்னஞ்சல்: lptvcritni@tanuvas.org.in