VCRI, Tirunelveli

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

நூலகம்


கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி நூலகம் 2012 ல் நிறுவப்பட்டது. நூலகம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தகவல் தேவைகளை பூர்த்தி செய்ய 2084 சதுரஅடி பரப்பளவில் தற்போது நிர்வாக கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்கி வருகிறது . நூலகப் பயனர்களின் நலனுக்காக புத்தகங்கள், குறிப்பு, மறுபதிப்பு , ஆன்லைன் பொது அணுகல் பட்டியல் மின் நூலகச் சேவைகள் போன்றவை நூலகத்தால் வழங்கப் படுகின்றன. நூலகத்தில் அகன்ற கற்றை இணைய வசதி கொண்ட 8 கணினிகள், மற்றும் தடையில்லாத மின்சார விநியோகத்திற்காக நிகழ்நிலை (ஆன்லைன்) யூபிஎஸ் உள்ளன.


குறிக்கோள்கள்

  • ஆசிரியர், பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மாணவர்கள், மற்றும் உறுப்பினர்களின் தேவைகளுக்கேற்ப பயனுள்ள மற்றும் சிறப்பான முறையில் நூலக மற்றும் தகவல் சேவைகளை வழங்குதல்.
  • கல்லூரி பாடத்திட்டம் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட கல்வி, மற்றும் தொழில்முறைத் தேவைகளை செழுமைப்படுத்திப் பூர்த்தி செய்யும் வகையில் நூலகம் செயல் படுதல் .

வேலை நேரம்

  • வார நாட்கள்: காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை
  • சனிக்கிழமை: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

நிர்வாகம்

முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் நூலகம் இயங்கி வருகிறது. நூலகத்தில், நூலகப் பொறுப்பு அதிகாரி, மற்றும் ஒரு பல்கலைக்கழக உதவி நூலகர் மற்றும் இரண்டு நிர்வாக ஊழியர்கள் உள்ளனர்.

நூலகக் குழு

நூலகக் குழுவில், கல்லூரி முதல்வர் அவர்கள், நூலகப் பொறுப்பு அதிகாரி , பல்கலைக்கழக உதவி நூலகர் மற்றும் பல்வேறு துறைகளின் துறைத் தலைவர்கள் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். கல்லூரி முதல்வர் அவர்கள் நூலகக் குழுவின் தலைவராகவும், நூலகப் பொறுப்பு அதிகாரி ஒருங்ணைப்பாளராகவும் உள்ளனர்.

புத்தகம் கடன் வாங்குபவர்களின் சலுகைகள்

பல்கலைக்கழக அதிகாரிகள், மற்றும் பேராசிரியர்கள் 12 புத்தகங்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள் 6 புத்தகங்கள் வீதம் 30 நாட்களுக்கும்,. இளங்கலை மாணவர்கள் 3 புத்தகங்கள் வீதம் 10 நாட்களுக்கும் நூலகத்திலிருந்து கடனாக பெற்றுக் கொள்ளலாம்.


நூலகச் சேவைகள்

  • ஆவணக் கடன்
  • குறிப்பு
  • விழிப்புணர்வு சேவை
  • தகவல்களை தேர்ந்தெடுத்துப் பரப்புதல்
  • ஆன்லைன் பொது அணுகல் பட்டியல்
  • நகல் எடுக்கும் சேவை: புகைப்பட நகல் எடுத்தல், அச்சிடுதல்
  • விவசாயத்தில் மின் வளங்களின் கூட்டமைப்பு மூலம் வளப்பகிர்வு
  • நூலகப் பயனர்கள் மற்றும் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை தயாரித்து வழங்குதல்
  • எழுத்தறிவு திட்டங்கள் குறித்த தகவல் அமைப்பு

.புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் இருப்பு (அச்சு மற்றும் நிகழ்நிலை)

நூலகத்தில் 4304 புத்தகங்கள் மற்றும் 12 இதழ்கள் உள்ளன. மேலும் தினசரிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஆராய்ச்சிக் கட்டுரை இதழ்கள் ஆகியவை உள்ளன. இளங்கலை மற்றும் முதுநிலை மாணவர்கள் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யத் தேவையான உரை மற்றும் குறிப்பு புத்தகங்கள், மற்றும் ஆசிரிய உறுப்பினர்களின் தேவைகளுக்கேற்ப பாடத்திட்டத்திற்கு உறுதுணையாகவும், பலதரப்பட்ட பாடங்களில் மிகவும் தேர்வான நூல்களை நூலகம் கொண்டிருப்பதுடன், அவ்வப்போது வெளியாகும் புதிதானதும் பொருத்தமானதுமான பயன்தரும் நூல்களை தொடர்ந்து சேகரித்து நூலகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.


மின் புத்தகங்கள் மற்றும் மின் இதழ்கள்

டிஜிட்டல் நூலகம் அறிமுகம் மிகவும் எளிதாக மற்றும் விரைவாக திறந்த அணுகல் மின் இதழ் இணையதளங்கள் மூலம், விலைமதிப்பற்ற இதழ் இலக்கியங்களை எளிதாக அணுக வலை இணையங்கள் மூலம் தொகுக்கப்பட்டுள்ளது.


பேராசிரியர் மற்றும் நூலகப் பொறுப்பு அதிகாரி,
நூலகத் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358.
தொலைபேசி: +91-462-2336343
மின்னஞ்சல்: libvcritni@tanuvas.org.in