VCRI, Tirunelveli

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை


இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கு சமூகவியல், கிராமப்புற வளர்ச்சி, கிராம தத்தெடுப்பு மற்றும் விரிவாக்க திட்டங்களை நிர்வகிப்பதில் புதுமை பரவல் ஆகிய அம்சங்களில் கற்பிப்பதை நோக்கமாக கொண்டு கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை 2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கால்நடை மருத்துவக் கல்லூரியின் சார்பாக இத்துறை மக்களின் தேவை அறிந்து ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதுடன் விரிவாக்கப் பணிகளையும் செய்துவருகிறது.


குறிக்கோள்கள்

  • கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு விரிவாக்கத்தில் இளங்கலை கல்வி அளித்தல்.
  • கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு விரிவாக்கத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்தல்.
  • வேளாண் பெருமக்களின் நன்மைக்காக கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் பல்வேறு விரிவாக்கத் திட்ங்களை நடத்துதல்.

கல்வி

இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் ஒழங்குமுறையின் படி இத்துறை பின்வரும் படிப்புகளை வழங்குகிறது.

  • இளங்கலை மூன்றாவது ஆண்டு - கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு விரிவாக்கக் கல்வி (3+1 )
  • முதுகலை படிப்பு: தொழில்நுட்ப எழுதுதல் மற்றும் தொடர்பு திறன்கள் (PGS 602)

உள்கட்டமைப்பு

கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை ஆய்வகங்கள் ஒவ்வொன்றும் மானவர்களுக்கு கற்பிப்பதற்கு தேவையான நவீன உபகரணங்கள் மற்றும் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் மற்ற அனைத்து விரிவாக்க நடவடிக்கைகளையும் நிறைவேற்றுகின்றன.

  • புகைப்படம் எடுத்தல் மற்றும் கிராபிக் பிரிவு (ஒளிப்பதிவு வசதியுடன் பதிவு / புகைப்படம் எடுப்பதற்கு வேலை செய்யும் நிலையத்துடன் எடிட்டிங் / ரெக்காடிங் வசதி)
  • ஒலி காட்சி (ஆடியோ விசுவல்) தொழில்நுட்ப ஆய்வகம் (கூரை ஏற்றப்பட்ட ஒளிப்படக் கருவி {ப்ரொஜெக்டர்) மற்றும் திரை,, பி.ஏ அமைப்பு, ஆடியோ கலவை)
  • குழு கலந்துறையாடல் / கருத்தரங்கு / மாநாட்டு அறை , கூரை ஏற்றப்பட்ட ஒளிப்படக் கருவி ஒளிப்படக் கருவி (ப்ரொஜெக்டர்) மற்றும் திரை, பி.ஏ அமைப்பு, ஆடியோ கலவை )
  • அருங்காட்சியகம் / கால்நடை வளர்ப்பு ஆலோசனை மையம் : எல்சிடி தொலைகாட்சி, நீளக் கதிர் டிஸ்க் பிளெயர் கல்வி விளக்கப் பாடங்கள் , நூலகம் தவிர விவசாயிகளுக்கு வீடியோபாடங்களை கான்பிக்க பிளேயர்

ஆராய்ச்சி

கால்நடை விரிவாக்கக் கல்வித் துறையின் ஆராய்ச்சியின் உந்துதல் பகுதிகள்: கிராம தத்தெடுப்புத் திட்டம், தொழில்நுட்ப பரிமாற்றம், தகவல்தேவை மதிப்பீடு, வளர்ச்சித் திட்டங்களின் மதிப்பீடு, கற்பித்தல் முறையின் செயல்திறன், கால்நடை வளர்ப்பு, மனித வள மேலாண்மை, பயிற்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டு தொழில்நுட்டப அறிவு போன்றவை ஆகும்.

விரிவாக்கம்

ககால்நடை விரிவாக்கக் கல்வித் துறை கீழ்க்காணு ம் விரிவாக்கப் பணிகளை செய்து வருகிறது

  • கால்நடை பண்ணை வைப்பதற்கான ஆலோசனைகள்
  • வளாக மற்றும் புற வளாகப் பயிற்சிகள்
  • அரசாங்கத்தின் பிற துறைக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துதல்
  • கண்காட்சிகள்
  • வெகுஜன திட்டங்கள்
  • செயல்முறை விளக்கம்
  • தொழில்நுட்ப மதிப்பீடு
  • பிரசுரங்கள்
  • களப்பயணங்கள், ஆய்வு சுற்றுப் பயணங்கள்
  • தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள்
  • பண்ணைகளில் தொழில்நுட்ப ஆய்வுகள்
  • கால்நடை பண்ணை வைப்பதற்கான திட்ட அறிக்கை வழங்குதல்

குறிப்பிடத்தக்க சாதனைகள்

  • ஆடுவளர்ப்பவர்களுக்கான தனுவாசு கைபேசி செயலி வெளியீடு
  • தனுவாசு தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்துதல்
  • சுயவேலைவாய்ப்பு பயிற்சி நடத்துதல்
  • கால்நடை அவசர சிகிச்சைப் பிரிவு (VERU) நிறுவுதல்
  • வங்கிக்கேற்ற கால்நடை பண்ணை திட்டங்களை தயாரித்தல்

இணைப் பேராசியர் மற்றும் தலைவர்,
கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி- 627358
தொலைபேசி: +91-462-2336345
மின்னஞ்சல்: vanvcritni@tanuvas.org.in