VCRI, Tirunelveli

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

கால்நடை உடற்கூறியல் துறை


கால்நடை உடற்கூறியல் துறை பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவா;களை உலக்த்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநா;களாக உருவாக்கம் நோகத்துடன் கால்நடை உடற்கூறியல் துறையானது 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எலும்பியல் மற்றும் மூட்டியியல் ஆய்வுக்கூடம், ஊடற்கூறு ஆய்வகம், நுண்ணமைப்பியல் மற்றும் கரு வளா;ச்சியியல், ஊடற்கூறு மாதிரி வைப்பு அறை, ஆய்வகம், உடல் பதப்படுத்தும் அறை மற்றும் நுண்ணமைப்பு ஆய்வகம் போன்ற ஆய்வக வசதிகள் இந்த துறையில் உள்ளது.
ஆய்வகங்களில் வெப்பக் காற்று கலன், மெழுகேற்றும் கருவி, நுண்திசு வெட்டும் கருவி, நுண்திசு மிதவைக் கலன், குளிர்சாதனத் தட்டு, எடை போடும் கருவி, முக்கோண நுண்ணோக்கியுடன் புகைப்படக் கருவி, மேம்படுத்தப்பட்ட புகைப்பட கருவியுடன் 40 இஞ்ச் படத்திரை, இருகண் நுண்ணோக்கிகள் போன்ற சாதனங்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிக்கோள்கள்

கல்வி:

கால்நடை உடற்கூறியலில் இளங்கலை/முதுகலை மற்றும் முனைவர்பட்ட மாணவர்களுக்கு கல்வி வழங்குதல்

ஆராய்ச்சி:

தேவைக்கேற்ப புறஅமைப்பியல், நுண்ணமைப்பியல், சிகிச்சை உடற்கூறியல், ஆய்வக விலங்கின உடற்கூறியல் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளல்

விரிவாக்கம்:

கல்வி சமூகத்திற்கு அருங்காட்சியகம் தொடர்பான சேவைகளை வழங்குதல்


கல்வி

பொது கால்நடை உடற்கூறியல், முன்னங்கால், தலை மற்றும் கழுத்துப் பகுதி, மார்புப்பகுதி, வயிறு மற்றும் அடிவயிறு பகுதி, பின்னங்கால் பகுதி, நுண்ணமைப்பியல் மற்றம் கருவளர்ச்சியியல் போன்ற படிப்புகள் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவர் களுக்கு இத்துறை மூலம் கற்றுவிக்கப்படுகிறது.


ஆராய்ச்சி

ஆய்வுகள், பல அறுவைசிகிச்சை மற்றும் மருந்தியல் சிகிச்சைக்கான அடையாளங்களைத் தரபடுத்துதல் பற்றிய ஆய்வுகள், கால்நடை உடற்கூறியல் மாற்று கற்பித்தல் முறை பற்றிய ஆய்வுகள்.


விரிவாக்கம்

கால்நடை வளர்ப்பு மற்றும் கோழிப்பண்ணை உற்பத்தி தொடர்பான பல்வேறு விரிவாக்கத் திட்டங்களில் இத்துறை ஈடுபட்டுள்ளது.

முக்கிய சாதனைகள்

  • கால்நடைகளான குதிரை, பன்றி, நாய், கோழி, கினிப்பன்றி மற்றும் வண்ணங்களால் ஆன குதிரை எலும்புக்கூடுகளுடன் உள்ள அருங்காட்சியகம்.
  • முடக்கியல், உறுப்புகள் மற்றும் கரு தொடர்பான முக்கிய உறுப்பு மாதிரிகள் அருங்காட்சியக குப்பிகளில் அடைக்கப்பட்டு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
  • திசுவியல் மற்றும் கரு வளர்ச்சியியல் தொடர்பான கல்வி விளக்கப் படங்கள் ஆய்வகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உடற்கூறியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358.
தொலைபேசி: +91-462-2336345
மின்னஞ்சல்: vanvcritni@tanuvas.org.in