vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறை

தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2020 – ஆம் ஆண்டு கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறை நிறுவப்பட்டது. இத்துறை தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது. இளங்கலை மாணவர்களுக்கு (B.V.Sc &A.H) இந்திய கால்நடை மருத்துவக்கழகத்தின் வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரையின்படி (MSVE 2016) பயிற்றுவித்தல் முக்கிய குறிக்கோளாக உள்ளது. மேலும், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.

நோக்கங்கள்

  • இளங்கலை மாணவர்களுக்கு உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் பாடங்கள் பயிற்றுவித்தல்.
  • கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.

படிப்புகள்

இந்திய மருத்துவக்கழகத்தால் (MSVE 2016) பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி, முதலாம் ஆண்டு (B.V.Sc& A.H) – இளங்கலை மாணவர்களுக்குப் கால்நடைஉடற்செயலியல் (தாள் – 1 மற்றும் 2) 4 + 1 வகுப்புநேரம் மற்றும் இரண்டாம் ஆண்டு (B.V.Sc& A.H) மாணவர்களுக்கு – கால்நடைஉயிர்வேதியியல் (தாள் – 1 மற்றும் 2) 2 + 1வகுப்புநேரம் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகள்

உடற்செயலியல் ஆய்வகம்

  • தானியங்கி இரத்தப் பகுப்பி
  • காலநிலை இயல் கருவிகள்
  • எல்.சி.டி திரையுடன் கூடிய கூட்டு திட்ட நுண்ணோக்கி
  • கணிணிமயமாக்கப்பட்ட உடற்செயலியல் கற்பித்தல்
  • மென்பொருள்
  • மைக்ரோ ஜெல்டால் மற்றும் டயஜுஷன் செட்
  • டி.எல்.சி. கவுண்டர்
  • இ.சி.ஜி (போர்டபிள்)
  • மைக்ரோ ஹெமடோக்ரேட் மைய விலக்கி
  • அமில – காரமானி
  • பிசியோகிராப்
  • நரம்பு – தசை பரிசோதனைக்கான மென்பொருள்
  • ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர்

உயிர்வேதியியல் ஆய்வகம்

  • நுண்ணோக்கி
  • உயிர்வேதியியல் பகுப்பி
  • வண்ணமானி
  • ஆழ்நிலை உரைவிப்பான் (-20C)
  • பிளேம் போட்டோ மீட்டர்
  • பேப்பர் ரோமோட்டோகிராபி
  • அமில- காரமானி
  • ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர்

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி, தேனி – 625 534
தொலைபேசி எண்: +91-4546-235401
மின்னஞ்சல்: vpb-vcri-thn@tanuvas.org.in