vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

கால்நடை நோய்க்குறியியல் துறை

தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடை நோய்க்குறியியல் துறையானது 2020 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

குறிக்கோள்கள்

  • இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு உயரிய தரமான கல்வி வழங்குதல்.
  • கால்நடை மற்றும் கோழியினங்களைத் தாக்கும் நோய்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்
  • கால்நடைகள் மற்றும் கோழிகளைத் தாக்கும் நோய்களைக் கண்டறிய ஆய்வக சேவை வழங்குதல்.

கல்வி

இரண்டாம் கல்வி ஆண்டு: இளநிலை கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு கால்நடை நோய்க்குறியியல் (தாள் I மற்றும் தாள் II); 4 + 2 என்ற முறைபடி வார மணிக்கணக்கில் வகுப்பறை விரிவுரை மற்றும் ஆய்வக செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆய்வகங்கள்

  • கால்நடை நோய் பரிசோதனை ஆய்வகம்
  • கால்நடை உடற்கூறாய்வுக் பரிசோதனைக் கூடம்
  • கால்நடை நுண் திசு பரிசோதனை ஆய்வகம்
  • புகைப்பட நுண்நோக்கி பிரிவு
  • அருங்காட்சியகம்

துறை நடவடிக்கைகள்

  • கால்நடை மற்றும் கோழிகளைத் தாக்கும் தீவிர நோய் பரவலை பிற துறைகள் உதவியுடன் புலனாய்வு செய்தல்.
  • கால்நடைகள், ஆய்வக விலங்குகள் மற்றும் கோழியினங்களில், உடற்கூறாய்வின் மூலம் நோய்களை கண்டறிதல் மற்றும் புலனாய்வு மேற்கொள்ளுதல்.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை நோய்க்குறியியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி, தேனி – 625 534
தொலைபேசி எண்: +91-4546-235401
மின்னஞ்சல்: vpp-vcri-thn@tanuvas.org.in