vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

கால்நடை நுண்ணுயிரியல் துறை

இளங்கலை கால்நடை மருத்துவ (பி.வி.எஸ்சி – எ.எச்) மாணவர்களுக்கு நுண்ணுயிரியல் துறை சார்ந்த பாடங்களை கற்பிப்பதற்காக 2020 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய கால்நடை மருத்துவ கழகத்தின் பரிந்துரையின்படி உள்கட்டமைப்பு வசதிகளான ஆய்வக இட வசதி, இருக்கை வசதி, மற்றும் மேசை வசதிகளுடன் ஆய்வக உபகரணங்கள் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு முறையான செய்முறை விளக்கத்துடன் கீழ்கண்ட நுண்ணுயிரியல் பிரிகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது.

  • கால்நடை தொடர்புடைய பொதுவான மற்றும் முறையான பாக்டீரியா குறித்த கல்வி
  • கால்நடை தொடர்புடைய பூஞ்சை குறித்த கல்வி.
  • நுண்ணுயிரியல் உயிர்த்தொழில் நுட்ப கல்வி.
  • கால்நடைகளுக்கான நோய் எதிர் வினைகள் குறித்த கல்வி மற்றும் நச்சுயிரி குறித்த கல்வி

குறிக்கோள்கள்

  • மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குதல்.
  • கால்நடைகள் மற்றும் பறவையினங்களுக்கு ஏற்படும் நோய்களை கண்டறியும் ஆய்வகத்தை நிறுவுதல்.
  • விவசாயிகள், சக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியல் சமூகம் பயனடையும் வகையில் கால்நடை நுண்ணுயிரியலின் பல்வேறு உட்பிரிவுகளில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல்.

கல்வி

கற்பித்தல் முறையில் பல்கலைக்கழக மானிய குழுமம் பரிந்துரைக்கப்பட்ட நவீன முறைகளை பின்பற்றுவது இத்துறையின் சிறப்பு அம்சமாகும். கற்பித்தலில், கால்நடைகளை தாக்கும் நோய்கள், அவற்றால் ஏற்படும் இழப்புகள், நோய்கட்டுப்படுத்துதல், மற்றும் நோய்தடுப்பு முறைகள் குறித்து முறையான விளக்கத்துடன் மாணவர்களுக்கு கற்பித்தல் மட்டுமல்லாமல் அவ்வப்போது விவசாயிகளின் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் கிளர்ச்சிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பணியையும் இத்துறை செயல்படுத்தி விவசாயிகளின் பொருளாதார இழப்பை குறைத்திடும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.
இத்துறையின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர் பலம் ஆகியவை தன் துவக்கநிலையில் இருந்தாலும் வரும் நாட்களில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் கால்நடை நுண்ணுயிரியல் துறையில் நவீன தொழில் நுட்பங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை நுண்ணுயிரியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி, தேனி – 625 534
தொலைபேசி எண்: +91-4546-235401
மின்னஞ்சல்: vmc-vcri-thn@tanuvas.org.in