vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை

கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறையானது 2020- ல் தொடங்கப்பட்ட தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு அங்கமாகும். கால்நடை மற்றும் கோழியினங்களை முறையாகக் கையாளுதல், அறிவியல் ரீதியான இனப்பெருக்க மேலாண்மை, கொட்டகைப் பராமரிப்பு மற்றும் கால்நடைகளுக்கான பிற பராமரிப்பு முறைகள் மூலம் கால்நடை மற்றும் கோழிகளின்உற்பத்தியினை அதிகரிப்பதற்கான வழிமுறைகள், கால்நடை இளங்கலை மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

நோக்கங்கள்

  • மாணவர்களுக்கு இளங்கலை கால்நடை அறிவியல் பட்ட படிப்பினை வழங்குதல்.
  • கால்நடை மற்றும் கோழிகளின் உற்பத்தியினை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.
  • அறிவியல் ரீதியான கால்நடை மற்றும் கோழி வளர்ப்பினை பிரபலப்படுத்துதல்.

படிப்புகள்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான குறைந்தபட்ச தரநிலை – 2016 – ன்விதிகளுக்கேற்ப, இளங்கலை மாணவர்களுக்கான பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டில் கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை (பாகம் 1 மற்றும் 2) பாடங்கள், கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறையின் மூலம் கற்பிக்கப்படுகின்றன.

உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகள்

  • கால்நடை படிப்புகளுக்கான குறைந்தபட்ச தரநிலை – 2016 ன் விதிகளுக்கேற்ப, கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறையில், கால்நடை மற்றும் கோழியினங்கள் பற்றிய படங்கள், கால்நடை மற்றும் கோழிகளுக்கான கொட்டகை மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டடுள்ளன.
  • கால்நடை மற்றும் கோழிகளை கையாளுவதற்கான உபகரணங்கள் மற்றும் காலநிலை அளவீடுகளுக்கான உபகரணங்கள் போதிய அளவில் உள்ளது.
  • சிறப்பான கற்பித்தலுக்காக அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இளநிலை மாணவர்களுக்கான ஆய்வகத்தினை தன்னகத்தே கொண்டுள்ளது.
  • கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறையில் கால்நடைகளை கையாளுதல் மற்றும் கட்டுப்படுத்தும் பயிற்சிக்காக, தனித்துவமிக்க கால்நடைகளை கையாளும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி, தேனி – 625 534
மின்னஞ்சல்: lpm-vcri-thn@tanuvas.org.in