vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

கால்நடைப் பண்ணை வளாகம்

கால்நடைப் பண்ணை வளாகமானது 2020 – ம் ஆண்டு இந்திய கால்நடை மருத்துவக் கழகத்தின் குறைந்த பட்ச தரமான கால்நடைக்கல்வி (2016) - என்ற விதியின் படி ஆரம்பிக்கப்பட்டது. இது தரமான கல்வி, ஆராய்ச்சி அனுபவம் மற்றும் விரிவாக்கக் கல்வி ஆகியவற்றை இளங்கலை கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு அளிக்கும் குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்டது. மேற்கண்ட தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த கால்நடைப் பண்ணை வளாகத்தில் வெவ்வேறுபட்ட கால்நடைகள் மற்றும் கோழியினங்கள் பராமரிக்கப்படுகின்றன.

குறிக்கோள்கள்

  • இளங்கலை கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு கால்நடைப் பண்ணை செய்முறைகள் குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.
  • கால்நடைகள் மற்றும் கோழியினங்களில் பகுதி சார்ந்த தனித்துவமிக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.
  • கால்நடைகள் மற்றும் கோழியினங்களை உற்பத்தி செய்து பண்ணையாளர்களுக்கு வழங்குதல்.
  • மாதிரி தீவனத்திடல்களை உருவாக்கி பண்ணையாளர்களுக்குத் தேவையான தராமான தீவன விதைகள் மற்றும் தீவன கரனைகளை வழங்குதல்.

பாடங்கள்

இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளின்படி,மூன்றாம் ஆண்டு இளங்கலை கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்களுக்கான கால்நடைப் பண்ணை செயல்முறை பயிற்சி வகுப்புகள் (0 + 2 பாடநேரம்) இப்பண்ணை வளாகத்தில் கற்பிக்கப்படுகின்றன.

உள்கட்டமைப்புகள்

இக்கால்நடைப் பண்ணை வளாகத்தில் நிர்வாக கட்டிடம், இளங்கலை செய்முறை ஆய்வகம், ஆராய்ச்சிகூடம், அருங்காட்சியகம் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் அரங்கம் என பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளது. மேலும், கீழ்காணும் பல்வேறு கால்நடைப் பண்ணை பிரிவுகளும் மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பண்னைப் பிரிவு

  • பால்பண்னைப் பிரிவு
  • செம்மறியாட்டுப் பிரிவு
  • வெள்ளாட்டுப் பிரிவு
  • கோழியினப் பிரிவு
  • பன்றிப் பிரிவு
  • முயல் பிரிவு
  • குதிரைப் பிரிவு
  • தீவனப் புற்கள் பிரிவு

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடைப் பண்ணை வளாகம்,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி, தேனி – 625 534
தொலைபேசி எண்: +91-4546-235401
மின்னஞ்சல்: lfc-vcri-thn@tanuvas.org.in