vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறை

விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறை 2020 – ம் ஆண்டு பின்வரும் குறிக்கோள்களுக்காக நிறுவப்பட்டது.

  • இளங்கலை மாணவர்களுக்கு விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்கப் பாடங்களை பயிற்றுவித்தல்.
  • சிறந்த கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை இனங்கள் மேம்பாட்டிற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.
  • விவசாயப் பெருமக்களிடையே இனப்பெருக்க அறிவியல் தொழில்நுட்பங்களைப் பரப்புதல்.

வழங்கப்படும் பாடங்கள்

கால்நடை கல்விக்கான குறைந்தபட்ச தரக்குறியீடு, (MSVE) 2016- ன் படி கீழ்க்கண்ட பாடங்களை இரண்டாம் தொழில்கல்வி வருட இளங்கலை மாணவர்களுக்கு வழங்குகின்றது.

  • விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்கம் தாள் 1 மற்றும் 2, பாடநேரம் 3 + 1
  • அலகு 1: உயிர்ப்புள்ளியியல் மற்றும் கணினிப் பயன்பாடு
  • அலகு 2: மரபியல் மற்றும் குடித்தொகை மரபியல் கோட்பாடுகள்
  • அலகு 3: விலங்கின இனவிருத்திக் கோட்பாடுகள்

பேராசிரியர் மற்றும் தலைவர்,
விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி, தேனி – 625 534
தொலைபேசி எண்: +91-4546-235401
மின்னஞ்சல்: agb-vcri-thn@tanuvas.org.in