vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

கால்நடை உடற்கூறியல் துறை

கால்நடை உடற்கூறியல் துறையானது 2020 ஆம் ஆண்டு, இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் விலங்குகள் பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி மற்றும் ஏஎச்) மாணவர்களுக்கு, இந்திய கால்நடை மருத்துவ கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட கால்நடை மருத்துவ கல்வியின் குறைந்தபட்ச தரநிலைகள், 2016ன் படி கால்நடை உடற்கூறியல் பாடத்தில் சிறந்த கல்வியை அளிப்பதற்காக தொடங்கப்பட்டது. மேலும் இத்துறை இளங்கலை மாணவர்கள், கள கால்நடை மருத்துவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்குகிறது. கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்காக பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் எலும்புக்கூடுகள் (உருவாக்கத்திலும், தயாரிப்பிலும்), கால்நடைகளின் பதப்படுத்தப்பட்ட மற்றும் உலர்ந்த உடல் உறுப்பு மாதிரிகள் சேகரிப்பிலும் மற்றும் பல்வேறு உறுப்புகளின் நுண்படப் படலம் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.

நோக்கங்கள்

  • இளங்கலை பி.வி.எஸ்சி மற்றும் ஏஎச், மாணவர்களுக்கு கால்நடை உடற்கூறியல் பாடங்களை வழங்குதல்.
  • மாணவர்கள், கள கால்நடை மருத்துவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை உடற்கூறியல் சம்பந்தப்பட்ட தொழிட்நுட்ப அறிவை வழங்குதல்.
  • கால்நடைகளின் உடற்கூறியல் அமைப்பு மற்றும் நுட்பங்கள் சம்பந்தமான ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல்.

பாடங்கள்

இந்திய மருத்துவக்கழகத்தால் (MSVE 2016) பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி, முதலாம் ஆண்டு (B.V.Sc& A.H) – இளங்கலை மாணவர்களுக்கு கால்நடை உடற்கூறியல் (தாள் I மற்றும் II) – 4+3 வகுப்பு நேரம் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகள்

  • எலும்புகள் மற்றும் மூட்டுகள் ஆய்வகம்
  • விலங்குகள் உடற்கூறாய்வு மற்றும் பதப்படுத்தும் அறை
  • காட்சியகம்.
  • நுண்ணமைப்பியல் மற்றும் கருவியல் நுண்படப் படல ஆய்வகம்

வசதிகள் – கருவிகள்

பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் எலும்புக்கூடுகள், அருங்காட்சியகத்திற்கான காட்சி பெட்டகம் (கண்ணாடி பேனல்), எலும்புகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட விலங்கு உறுப்புகள் வைப்பதற்கான இரும்புச் சட்டம், வடிகால் வசதியுடன் கூடிய துருப்பிடிக்காத உடற்கூறாய்வு மேசை, எலும்புகள் மற்றும் நுண்ணோக்கிகள் வைப்பதற்கான இரும்பு அல்மிரா, நுண்ணோக்கிகள், நுண்பகுப்பான், நுண்ணமைப்பியல் திசு உட்பதிப்பான், ஆழ் உறைப்பெட்டகம் ( -20 செ) வெப்ப காற்று கருவி, உயர் அழுத்தக் கொப்பரை, தொலைக்காட்சி பொருத்தப்பட்ட மறைக்காணி நுண்ணோக்கி, சடலஉட்செலுத்தி, மின்சார தராசு, நுண்கண்ணாடி சூடாக்கும் எந்திரம், திசு மிதவை குடுவை, மின்சார எலும்பு அறுக்கும் ரம்பம், குளிர்சாதனப் பெட்டி, எலும்புக்கூடு தயாரிப்பதற்கான துளையிடும் இயந்திரம், டெனாகுலம், பிரேத பரிசோதனை கருவிகள், விலா எலும்பு வெட்டும் கருவி, நுண் கண்ணாடிகளை சாயம் ஏற்றும் குடுவை, நுண்கண்ணாடிகளை சாயம் ஏற்றும் தட்டு, மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் ட்ரம், மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் வாளிகள், எனாமல் தட்டு, எனாமல் பேசின், ஊடுகதிர் தாளை பார்க்கும் கருவி, கத்தரிக்கோல், தமனி போர்செப்ஸ் மற்றும் கூறாய்வு போர்செப்ஸ், ரம்பம், கண்ணாடி பொருட்கள் மற்றும் அருங்காட்சியகம் கண்ணாடி குடுவை, நுண்கண்ணாடி பெட்டி, நுண்கண்ணாடி பெட்டகம், ஐஸ் பெட்டி, விலங்கின் உடலை பதப்படுத்துவதற்கு தேவையான துருப்பிடிக்காத இரும்பு தொட்டி போன்ற பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கருவிகள்.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உடற்கூறியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி, தேனி – 625 534
தொலைபேசி எண்: +91-4546-235401
மின்னஞ்சல்: van-vcri-thn@tanuvas.org.in