vcri

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்

கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை


கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை 4400 சதுர அடியில் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கிடையே தாக்கும் பொதுவான நோய்கள், அவைகளின் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் சிக்கல்களைக் கையாளும் முறைகள் பற்றி இளங்கலைப் பட்டதாரிகளுக்கு அறிவூட்டும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.


குறிக்கோள்கள்

  • கால்நடை மருத்துவத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் பற்றிய கல்வியைக் கற்பித்தல் .
  • விலங்கு வழி பரவல் நோய்களை படிப்படியாக கண்டறிந்து ‘மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரே சுகாதாரம்’ என்னும் முறையைக் கொண்டு கட்டுப்படுத்துதல்.
  • தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதிகளில் உள்ள விலங்குகளில் ஏற்படும் விலங்கு வழி பரவல் நோய்களின் நிகழ்வுகளை ஆராய்ந்து மற்றும் தொடர் கண்காணிப்பு கொண்டு நோய்களை கட்டுப்படுத்துதல்.
  • ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு, புறக்கணிக்கப்பட்ட விலங்குகளின் பரவல் நோய்கள் போன்ற உலகளாவிய அச்சுறுத்தல்கள் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்.

எதிர்நோக்கும் ஆராய்ச்சிகள்

  • ‘மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரே சுகாதாரம்’ எனும் முறையை கொண்டு விலங்கு வழி பரவல் நோய்களை கண்காணித்தலும் மற்றும் கட்டுப்படுத்துதலும்.
  • உணவு பாதுகாப்பு - உணவு மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களும் அதன் தடுப்பு முறைகளும்.
  • நோய் நிகழ்வாய்வியல் மாதிரியாக்கம் மற்றும் புவியியல் தகவல் அமைப்பு போன்ற கருவிகளைக் கொண்டு விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்துதல்.

உள்கட்டமைப்பு

  • விலங்கு வழி பரவல் நோய் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் ஆய்வகம்.
  • இறைச்சி சுகாதார ஆய்வகம் .
  • பால் சுகாதார ஆய்வகம்.

ஆய்வக் கருவிகள்

  • உயர் செயல்திறன் கொண்ட திரவ நிறமூர்த்தம் கருவி (HPLC).
  • அணு உறிஞ்சும் நிறமாலை ஒளியியல் கருவி (AAS).
  • வாயு நிறமூர்த்தம் கருவி.
  • உயிரியல் பாதுகாப்பு கருவி நிலை II.
  • பாலில் உடற் செல்கள் கண்டறியும் கருவி.
  • நீர் பகுப்பாய்வு அமைப்பு கருவி.
  • பல்படியாக்கத் தொடர்வினைக் கருவிகள்.
  • நொதி இணைக்கப்பட்ட இம்யூனோ சோர்பண்ட் மதிப்பீட்டு வாசகக் கருவி.

ஆராய்ச்சிகள்

  • விவசாயிகளின் பொருளாதாரத்தை பாதிக்கின்ற விலங்கு வழி பரவல் நோய் பற்றிய ஆராய்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது .

இத்துறையில் விரிவாக்க பணிகள்

  • உலக விலங்கு வழி பரவல் நோய், காசநோய் மற்றும் வெறிநோய் தினங்களை, முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் மற்றும் மற்றும் சுகாதார முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் இத்துறையில் நடத்தப்படுகின்றது.

துறை வல்லுநர்கள்

பெயர் மற்றும் பதவி மின்னஞ்சல் தொலைப்பேசி எண்
முனைவர். மா. விஜய பாரதி
பேராசிரியர் மற்றும் தலைவர்
mvijayabharathi74@gmail.com +91-9840161505
மரு. அ . சுந்தர்
உதவி பேராசிரியர்
asundarvet@gmail.com +91-8489135699

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தலைவாசல் கூட்டு ரோடு, நத்தகரை டோல் பிளாசா,
சேலம்-636 112, தமிழ் நாடு, இந்தியா.
தொலைபேசி எண்: +91-4282-290998
மின்னஞ்சல்: vph-vcri-slm@tanuvas.org.in