vcri

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்

கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் ஊடு கதிரியக்கவியல் துறை


கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் ஊடு கதிரியக்கவியல் துறையானது, உயர் திறன் கொண்ட கால்நடை மருத்துவ பட்டதாரிகளை உருவாக்க மற்றும் முன்மாதிரியான கால்நடை மருத்துவ கல்வியை வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பண்ணை விலங்குகளின் உற்பத்தியை மேம்படுத்தவும், செல்லப்பிராணிகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தவும் உயர் தர கால்நடை மருத்துவ சேவைகளை வழங்குவதிலும் இத்துறை ஈடுபட்டுள்ளது. மேலும், தொடர் கால்நடை மருத்துவ கல்வி மற்றும் திறன் மேம்பாடு மூலம் கால்நடை மருத்துவர்களின் கால்நடை அறுவை சிகிச்சை திறன்களை மேம்படுத்தவும், பண்ணை மற்றும் செல்லப்பிராணிகளின் மேம்பாட்டிற்கான நிபுணத்துவத்தை வழங்கவும் இத்துறை செயல் பட்டு வருகிறது. கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க பிரச்சனை அடிப்படையிலான மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


குறிக்கோள்கள்

  • கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கத்தில் தரமான கல்வியை வழங்குதல்.
  • கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் தொடர்பான மருத்துவ சேவைகள் மற்றும் நிபுணத்துவத்தை வழங்குதல்.
  • கால்நடை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு நேரடிப் பயிற்சியை வழங்குதல்.
  • பண்ணை ஆலோசனை சேவைகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குதல்.
  • விலங்குகள் மீதான பிரச்சனை அடிப்படையிலான மருத்துவ ஆராய்ச்சியை நடத்துதல் / உதவுதல்.

கல்வி

இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலின் கால்நடை மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்ச தரநிலைகள் 2016 பாடத்திட்டத்தின்படி கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கப் படிப்புகளை இத்துறை வழங்குகிறது.

வசதிகள்

  • பெரிய மற்றும் சிறிய விலங்குகளுக்கு முழுமையான வசதியுடன் கூடிய அறுவை சிகிசிச்சை அரங்கம்.
  • பிரத்தியேக கால்நடை மருத்துவக் கதிரியக்க பிரிவு.
  • பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு பிரிவு.
  • பெரிய விலங்குகளுக்கான மயக்க மருந்து செலுத்தும் வசதி .
  • பெரிய விலங்கு லிப்ட் மற்றும் அறுவை சிகிச்சை பொருத்துதல் வசதி.
  • இளங்கலை கற்பித்தலுக்கான ஆய்வகங்கள்.

துறை வல்லுநர்கள்

பெயர் மற்றும் பதவி மின்னஞ்சல் தொலைப்பேசி எண்
முனைவர்.ச.செந்தில் குமார்
பேராசிரியர் மற்றும் தலைவர்
ssenthilvet@gmail.com +91- 9443438976
முனைவர்.இ.கலைசெல்வன்
உதவிப்பேராசிரியர்
selvansurgeontanuvas@gmail.com +91-9787104765

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் ஊடு கதிரியக்கவியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தலைவாசல் கூட்டு ரோடு, நத்தகரை டோல் பிளாசா,
சேலம்-636 112, தமிழ் நாடு, இந்தியா.
தொலைபேசி எண்: +91-4282-290998
மின்னஞ்சல்: vsr-vcri-slm@tanuvas.org.in