vcri, salem

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்

உடற்கல்வி மற்றும் விளையாட்டு வசதிகள்

உடற்கல்வி மற்றும் விளையாட்டு வசதிகள்

கல்லூரியில் உள்ள விளையாட்டு வசதிகளில் 5 ஏக்கரில் நிறுவப்பட்ட மாணவர்களின் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மைதானங்கள் உள்ளன. 200 மீ தடகள ஓடுபாதை, கால்பந்து, கோ-கோ, கைப்பந்து, எறிபந்து, டென்னிகோயிட், கபடி, பேட்மிண்டன் மற்றும் கிரிக்கெட் மைதானங்கள் தனித்தனியே உள்ளன. மேலும், சதுரங்கம், கேரம் மற்றும் மேசைப்பந்து போன்ற உள்ளரங்க வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரூ. 35 இலட்சம் செலவில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.



உடற்கல்வி

மாணவர்களுக்கு உடற்கல்வி கட்டாய இணை பாடத்திட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக வழங்கப்படுகிறது

மாணவர் சாதனை

  • இக்கல்லூரி மாணவர்கள் 24.08.2021 முதல் 02.10.2021 வரை ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ஓட்டப் பந்தயத்தில் வெற்றிகரமாக பங்கேற்றனர்
  • வாணியம்பாடியில் 18.12.2021 மற்றும் 19.12.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 45th மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டியில் பங்கேற்க செல்வன் கே. மீனாகுமார் தேர்வு பெற்றார்.
  • நாமக்கல்லில் 19.11.2021 மற்றும் 20.11.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டென்னிகாய்ட் போட்டியில் செல்வன் கே. மீனாகுமார் பங்கேற்றார்.