vcri

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்

கால்நடை ஒட்டுண்ணியியல் துறை


கால்நடை ஒட்டுண்ணியியல் துறை 2023 ஆம் ஆண்டில் குடற்புழுவியல் ஆய்வகம் மற்றும் பூச்சியியல் மற்றும் ஒருசெல் ஒட்டுண்ணியியல் ஆய்வகம் என இரண்டு ஆய்வகங்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. இத்துறையானது கால்நடை மற்றும் கோழி நோய்களைக் கண்டறிவதற்கும், கால்நடை ஒட்டுண்ணி மருத்துவத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் நவீன வசதிகளைக் கொண்டுள்ளன. இத்துறைக்கு ரூ. 89,64,400/- மதிப்பீட்டில் இளங்கலை மாணவர்களுக்கு கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும் நோக்கத்திற்காக கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.
கால்நடை கல்விக்கான குறைந்தபட்ச தரநிலைகள் 2016 இன் படி இளங்கலை மாணவர்களுக்கு கால்நடை ஒட்டுண்ணி மருத்துவம் குறித்த தரமான கல்வியை வழங்குவதில் துறை கவனம் செலுத்துகிறது. மேலும் இந்தக் கல்லூரியின் தொடர்புடைய பிற துறைகள், அரசு கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பாளர்களுக்கு நோய் கண்டறியும் சேவைகளை வழங்குகிறது. மேலும், நோய் கண்டறிதலுக்காக நோய் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் நலனுக்காக பொருத்தமான ஒட்டுண்ணி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அறிவுறுத்தப்படுகின்றன.


குறிக்கோள்கள்

  • இளங்கலை மாணவர்களுக்கு கால்நடை ஒட்டுண்ணியியல் பாடத்தில் தரமான கல்வியை வழங்குதல். .
  • பல்வேறு கால்நடை மற்றும் கோழி ஒட்டுண்ணி நோய்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்.
  • கால்நடைகள் மற்றும் கோழிகளின் அக மற்றும் புற ஒட்டுண்ணி நோய்களைக் கண்டறியும் சேவைகளை வழங்குதல் மற்றும் அவற்றின் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பற்றிய ஆலோசனைகளை வழங்குதல்.
  • பிற துறைசார் முதுகலை மற்றும் முனைவர் ஆய்வாளர்களின் நலனுக்காக ஆய்வக வசதிகளை வழங்குதல்.

கல்விப் பிரிவு

கால்நடை ஒட்டுண்ணியியல் (3 + 2) என்ற பாடம் இளங்களைப் பட்டப் படிப்பின் மூன்றாம் தொழில்முறை ஆண்டில் வழங்கப்படுகிறது.

  • அலகு 1 - பொது கால்நடை ஒட்டுண்ணியியல்.
  • அலகு 2 - கால்நடைகளைத் தாக்கும் தட்டை மற்றும் நாடாப்புழுக்களின் முக்கியத்துவம்.
  • அலகு 3 - கால்நடைகளைத் தாக்கும் உருண்டைப்புழுக்களின் முக்கியத்துவம்.
  • அலகு 4 - கால்நடைகளைத் தாக்கும் புற ஒட்டுண்ணிகளின் முக்கியத்துவம்.
  • அலகு 5 - கால்நடைகளைத் தாக்கும் ஓரணு ஒட்டுண்ணிகளின் முக்கியத்துவம்.

ஆராய்ச்சி

  • மாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் கோழிப் பண்ணைகளில் தேவை சார்ந்த ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நோய்கண்டறியும் சேவைகள்

  • வகுடற்புழுக்கள், பூச்சிகள், உண்ணிகள் மற்றும் ஓரணு ஒட்டுண்ணிகளை கண்டறிந்து அடையாளம் காணுதல்.
  • சாணம் மற்றும் இரத்தத்தில் உள்ள ஒட்டுண்ணிகளை மதிப்பீடு செய்தல்.
  • குடற்புழுநீக்க மருந்தின் செயல்திறன் மதிப்பீடு செய்தல்.
  • குடற்புழுநீக்க மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தின் எதிர்ப்பு திறனை மதிப்பீடு செய்தல்.
  • பண்ணையாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு குடற்புழுநீக்க மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதற்கான சேவைகளை வழங்குதல்.

விரிவாக்க செயல்பாடுகள்

  • நோய் கண்டறிதலுக்காக இந்த நிறுவனத்தின் பிற துறைகள், அருகிலுள்ள கால்நடை மருந்தகங்கள் மற்றும் பண்ணைகளில் இருந்து இத்துறைக்கு சமர்ப்பிக்கப்படும் சாணம் மற்றும் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து சிகிச்சை வழங்குதல்.
  • மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நோய்கிளர்ச்சி நோய் ஆய்வு மேற்கொள்ளுதல்.

உள்கட்டமைப்பு வசதிகள்

ஒருசெல் ஒட்டுண்ணியியல் ஆய்வகம்

  • இந்த ஆய்வகத்தில் தொலைக்காட்சியுடன் கூடிய பன்முக நுண்ணோக்கி, ஆழ் உரைப் பெட்டகம் (-80ᵒC), நுண் மையவிலக்கு, சுடு காற்றுச்சூளை, உயர்அழுத்த கொப்பரை, அடைகாக்கும் கருவி, அமில காரத்தன்மை சோதிப்பான், சாதாரண மையவிலக்கு ஆகிய கருவிகள் இளங்கலைப் பட்டப் படிப்பின் செயல்முறை வகுப்புகள் நடத்துவதற்கும், அடிப்படை ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பூச்சியியல் ஆய்வகம்

  • இந்த ஆய்வகத்தில் பூச்சிகள் மற்றும் உண்ணி மாதிரிகளைக் காண ஸ்டீரியோஸ்கோப் மற்றும் ஸ்டீரியோ ஜூம் நுண்ணோக்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குடற்புழுவியல் ஆய்வகம்

  • இந்த ஆய்வகத்தில் இருகண் நுண்ணோக்கி, சாதாரண மையவிலக்கு, மும்முக நுண்ணோக்கி, கட்ட மாறுபாடு நுண்ணோக்கி, அதிவேக மையவிலக்கு, குளிர்சாதன பெட்டி, நுண் மையவிலக்கு, எடை பார்க்கும் எந்திரம், சாண முட்டை எண்ணிக்கையை மேற்கொள்ள மெக்மாஸ்டர் ஸ்லைடு, இளம்புழுக்களை தனிமைப்படுத்தி மற்றும் அடையாளம் காண உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

துறை வல்லுநர்கள்

பெயர் மற்றும் பதவி மின்னஞ்சல் தொலைப்பேசி எண்
முனைவர். க. அருணாசலம்,
பேராசிரியர் மற்றும் தலைவர்
mvijayabharathi74@gmail.com +91-94439 43483
முனைவர். தா.வே. தமிழம்
உதவி பேராசிரியர்
drtamizham@gmail.com, +91-97892 97481

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை ஒட்டுண்ணியியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தலைவாசல் கூட்டு ரோடு, நத்தகரை டோல் பிளாசா,
சேலம்-636 112, தமிழ் நாடு, இந்தியா.
தொலைபேசி எண்: +91-4282-290998
மின்னஞ்சல்: vpa-vcri-slm@tanuvas.org.in