vcri

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்

கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை


கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறையானது கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சேலத்தில் சுமார் 8995.36 சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.
இத்துறையின் முக்கிய பணியானது இளங்கலை மாணவர்களுக்கு கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை குறித்த தரமான கல்வி, மற்றும் பணி சார்ந்த மருத்துவ பயிற்சியை வழங்குவதாகும். மேலும் விவசாய பெருமக்கள், களக்கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவம் சார்ந்த இணைத் துறைகளுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளது.


குறிக்கோள்கள்

  • இளங்கலை கல்வியை வழங்குதல்.
  • இனப்பெருக்க மருத்துவப் பிரிவில் பசுக்கள், எருமை மாடுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் சேவையை வழங்குதல்.
  • அனைத்து பண்ணை மற்றும் செல்லப்பிராணிகளின் இனப்பெருக்கம் மற்றும் மகப்பேறு சம்பந்த நோய்களுக்கு சிகிச்சை அளித்தல்.
  • கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறையில் மாணவர்கள் மற்றும் களக் கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்குதல்.
  • இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் சம்பந்தமான களம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆய்வு மேற்கொள்ளுதல்.

கல்வி

இந்திய கால்நடை மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகின்றது.

உள்கட்டமைப்பு

  • இளங்கலை மாணவர்களுக்கான ஆய்வகம்.
  • செயற்கை கருவூட்டல் மையம்.
  • அருங்காட்சியகம்.
  • மாதிரி சினை பரிசோதனை மற்றும் போலி கன்று ஆய்வுக்கூடம்.
  • ஆண் இனப்பெருக்க நோய் பரிசோதனை ஆய்வுக்கூடம்.
  • பண்ணை விலங்குகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கான மின்னணு விந்து சேகரிப்பு கருவி.
  • மீயொலி கருவி.
  • அதி வெப்ப நீராவி மூலம் நுண்கிருமிகள் நீக்கும் கருவி.
  • அதி வெப்ப காற்று மூலம் நுண்கிருமிகள் நீக்கும் கருவி.
  • இன்வெர்டட் நுண்ணோக்கி.
  • யோனி உள்நோக்கு கருவி (பண்ணை விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான).
  • விந்து சேமிப்பு கொள்கலன்கள்.
  • ஈனியல் சம்பந்தப்பட்ட கருவிகள்.

ஆராய்ச்சி

இத்துறையானது கீழ்கண்ட திட்டங்களுக்கு துணை ஆராய்ச்சி மையமாக செயல்படுகிறது:

  • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க கன்னி ஆடு, கொடியாடு மற்றும் சேலம் கருப்பு ஆட்டினங்களில் ஆடு இனங்களில் ஆயிரம் ஆடுகளுக்கு விந்து உற்பத்தி செய்து செயற்கை முறை கருவூட்டல் மூலம் மரபியல் ரீதியாக தரம் உயர்த்துதல் (தமிழ்நாடு அரசு நிதி உதவி திட்டம், நிதி ஒதுக்கீடு: ரூபாய் 149 லட்சம்).
  • கறவை மாடுகளில் பாலினம் சம்பந்த பாலினம் பிரிக்கப்பட்ட விந்தணுவை மேம்படுத்தப்பட்ட இனப்பெருக்க தொழில்நுட்பங்களின் உதவியுடன் பயன்படுத்துவதன் மூலம் இனப்பெருக்கம் மற்றும் உற்பத்தி திறனை பெருக்குதல் (தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், நிதி ஒதுக்கீடு: ரூபாய் 208.90 லட்சம்).

துறை வல்லுநர்கள்

பெயர் மற்றும் பதவி மின்னஞ்சல் தொலைப்பேசி எண்
முனைவர். ச. மனோகரன்
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்
smanokaran1976@gmail.com +91-9488709436
மருத்துவர். அ. ரேஷ்மா
உதவிப் பேராசிரியர்
drareshma@gmail.com +91-9566706685
முனைவர். அ. தங்கமணி
உதவிப் பேராசிரியர்
thangamtamil19@gmail.com +91-9390990352

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தலைவாசல் கூட்டு ரோடு, நத்தகரை டோல் பிளாசா ,
சேலம்-636 112, தமிழ் நாடு, இந்தியா
தொலைபேசி எண்:+91-4282-290998
மின்னஞ்சல்: vgo-vcri-slm@tanuvas.org.in