vcri

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்

கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத் துறை


சேலம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத் துறை பிப்ரவரி 2021 ல், இறைச்சி அறிவியல் கட்டடம் (13396.20 சதுர மீட்டர்) மற்றும் பால் அறிவியல் கட்டடம் (14417.72 சதுர மீட்டர்) ஆகிய இரு தொகுதிகளாக இந்திய கால்நடை மருத்துவக் கழகத்தின் (VCI) விதிமுறைகளின்படி இளநிலை பட்டபடிப்புக்கான சுகாதாரமான இறைச்சி மற்றும் பால் உற்பத்தி, பால் உபப் பொருட்களைப் பயன்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட உள்நாட்டு மற்றும் மேற்கத்திய பால் பொருட்கள் தயாரித்தல், சுகாதாரமான கசாப்பு முறைகள், உணவு இறைச்சி பதப்படுத்தல், மதிப்பு கூட்டப்பட்ட இறைச்சி பொருட்கள் தயாரித்தல், இறைச்சிக் கூடத்தின் உபப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றிய கல்வியை போதிக்கும் நோக்கத்துடன் கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத் துறையில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நிறுவப்பட்டது.
இத்துறையானது கோழி, சிறிய விலங்குகள் மற்றும் பெரிய விலங்குகளுக்கான நவீன இறைச்சிக் கூடங்கள், சுகாதாரமான இறைச்சிப் பதப்படுத்துதலை மேற்கொள்வதற்காக, நவீன இறைச்சி பரிசோதனை ஆய்வுக்கூடம் மற்றும் இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்களின் மதிப்புக் கூட்டல் வசதிகள், பால் ஆராய்ச்சி ஆய்வகத்துடன் சுகாதாரமான பால் பதப்படுத்தும் வசதிகளையும் கொண்டுள்ளது.

குறிக்கோள்கள்

  • கால்நடைப் பொருட்கள் தொழில்நுட்பத்தில் பட்டதாரி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குதல்.
  • கால்நடை தயாரிப்புகள் தொடர்பான களம் சார்ந்த ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்ளுதல்.
  • மதிப்பு கூட்டப்பட்ட, நிலையான மற்றும் செயல்பாட்டு இறைச்சி மற்றும் பால் பொருட்கள் உருவாக்கம்.
  • கால்நடைப் பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றில் இறைச்சி மற்றும் பால் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்களை நடத்துதல்.


கல்வி

இளநிலை பட்ட படிப்புப் பாடப் பிரிவுகள்

இந்திய கால்நடை மருத்துவக் கழகத்தின் புதிய விதிமுறையின்படி, இளநிலை பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பின்வரும் பாடப் பிரிவுகளை வழங்குகிறது:

  • பிரிவு 1: பால் மற்றும் பால் பொருட்கள் தொழில்நுட்பம் .
  • பிரிவு 2: கம்பளி அறிவியல்.
  • பிரிவு 3: இறைச்சிக் கூட நடைமுறைகள் மற்றும் கால்நடை உபப்பொருட்கள் தொழில்நுட்பம்.
  • பிரிவு 4: இறைச்சி அறிவியல்.

ஆய்வக வசதிகள்

  • கோழி, சிறிய மற்றும் பெரிய கால்நடைகள் இறைச்சி உற்பத்தி மற்றும் இறைச்சி பதப்படுத்துதல் ஆகியவற்றிற்கான வசதிகள்.
  • நவீன இறைச்சி பதப்படுத்தும் கருவிகளுடன் கூடிய இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் பரிசோதனை ஆய்வகம்.
  • நவீன தரக்கட்டுப்பாட்டு உபகரணங்களுடன் கூடிய பால் தொழில்நுட்ப ஆய்வகம்.
  • பால் மற்றும் இறைச்சி நுண்ணுயிரியல் ஆய்வகம்.

இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் பரிசோதனை ஆய்வகம்

  • அபே ஒளி விலகல் மானி
  • அழுத்த அனற்கலன்
  • பறவைகளை எடைபோடுவதற்கான தராசு
  • கசாப்பு தொகுப்பு (கத்திகள் போன்றவை)
  • ஆழமான உறைகலன்
  • மின்னணுசார் ஒற்றைத் தட்ட தராசு
  • கணத்தாக்க அடைப்பான்
  • உணவு செயலி
  • வெப்பக் காற்றடுப்பு
  • வெந்நீர் கலன்
  • இறைச்சி அரைக்கும் இயந்திரம்
  • இலக்க முறை காரகாடி நிலை மானி
  • குளிர்சாதன பெட்டி
  • குழலப்ப நிரப்புதல் கலன்
  • சிறிய கால்நடை தராசு
  • மாணவர் நுண்ணோக்கி
  • மின் அதிர்ச்சி மயக்கமளிக்கும் சாதனம்
  • இரத்த வடிப்பு கூம்பு
  • அமிழ்த்தும் சுடுநீர் தொட்டி
  • சிறகு நீக்கும் இயந்திரம்
  • உள்ளுறுப்பு அகற்றுதலுக்கான மேசை
  • துண்டு போடும் இயந்திரம்
  • எர்மாஸ்கோப்
  • கோளமானி
  • கட்டுண்ட கீலக கைத்துப்பாக்கி

பால் தொழில்நுட்ப ஆய்வகம்

  • வெண்ணெய் கடைகலன்
  • வெண்ணெய்மானி
  • கெர்பரின் மைய விலக்கி
  • பால்அடர்த்திமானி
  • பாலாடை பிரிப்பான்

துறை வல்லுநர்கள்

பெயர் மற்றும் பதவி மின்னஞ்சல் தொலைப்பேசி எண்
முனைவர்.த. சாந்தி,
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்
drdshanthitanuvas@gmail.com +91-9841027633
மருத்துவர். அ. செ. சோபனா,
உதவிப் பேராசிரியர்
sobivimal@gmail.com +91-9786085016
மருத்துவர். பா. கார்த்திக்,
உதவிப் பேராசிரியர்
drkarthiklpt@gmail.com +91-9994014246

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தலைவாசல் கூட்டு ரோடு, நத்தகரை டோல் பிளாசா ,
சேலம்-636 112, தமிழ் நாடு,இந்தியா.
தொலைபேசி எண்: +91-4282-290998
மின்னஞ்சல்: lpt-vcri-slm@tanuvas.org.in