vcri, salem

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்

உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள்

உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள்

எட்டு மாணவர் கல்விக் கூடங்கள், பால் மற்றும் இறைச்சி அறிவியல் பிரிவுகள், கால்நடை மருத்துவ வளாகம், கால்நடைப் பண்ணை வளாகம், நூலகம், நிர்வாககே கட்டிடம், மானாட்டு அறை, சிறு கலையரங்கம், கருத்தரங்க அரங்குகள், வகுப்பக அரங்குகள் (7 எண்ணிக்கை), தேர்வு அரங்குகள் (2 எண்ணிக்கை), மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள் மற்றும் உணவகங்கள், முதல்வர், அத்தியாவசியப் பணி ஆசிரியர்கள் மற்றும் துணைப் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் என இருபத்தி ஒன்று கட்டுமானங்கள் உள்ளன.



வகுப்பக அரங்குகள்

இக்கல்லூரி 90 இருக்கைகள் கொண்ட 7 நவீன வகுப்பறைகளை வடிவமைத்துள்ளது. அனைத்து வகுப்பறைகளிலும் புதிய சிறப்பு பயிற்றுவிப்பு கருவிகள், ஒளிக்கற்றைகள், ஒலி அமைப்புகள், ஊடாடும் பலகைகள் மற்றும் டிஜிட்டல் மேடைகள் போன்றவை உள்ளன

நூலகம்

10512.52 சதுர அடியில் கட்டப்பட்ட நூலகம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பொதுவான தகவல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.