vcri

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்

கால்நடை விரிவாக்கக் கல்வித்துறை


கால்நடை விரிவாக்க கல்வியில் இளங்கலை படிப்பு மாணவர்களை கள விரிவாக்க நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ள ஆயத்தப்படுத்தும் வகையில். கால்நடை விரிவாக்க கல்வித் துறை 8099 சதுர அடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.


குறிக்கோள்கள்

  • இளங்கலை மாணவர்களுக்கு கால்நடை பராமரிப்பு விரிவாக்க கல்வி கற்பித்தல்.
  • கால்நடை வளர்ப்பை மேம்படுத்துவதற்கான விரிவாக்க முறைகளில் ஆராய்ச்சி நடத்துதல்.
  • கால்நடை பண்ணையாளர்களின் நலனுக்காக தத்தெடுப்பு கிராமங்களில் கால்நடை நலம் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் நுட்பங்களை பல்வேறு விரிவாக்க முறைகள் மூலம் கொண்டு சேர்த்தல்.

கல்வி

இளங்கலை கால்நடை மருவத்துவக் கல்வியின் மூன்றாம் தொழில்முறை ஆண்டில், கால்நடை விரிவாக்கக் கல்வி (3+1) பாடத்திட்டத்தில் கீழ்க்கண்ட ஒன்பது அலகுகளுடன் விரிவாக வழங்கப்படுகிறது.

  • கால்நடை வளர்ப்பு சார்ந்த வாழ்வாதாரம் மற்றும் அவற்றின் பரிணாமங்கள்.
  • விரிவாக்க கல்வி மற்றும் மேம்பாடு.
  • கால்நடை மருத்துவ விரிவாக்கத்தில் கிராமப்புற சமூகவியல்.
  • கால்நடை மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப பரிமாற்றம்.
  • தகவல் தொடர்பு மற்றும் கால்நடை விரிவாக்க கல்வி கற்பித்தல் முறைகள்.
  • கால்நடை பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்தல்.
  • கால்நடை தொழில்முனைவு.
  • தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம்.
  • சமகாலத்தில் கால்நடை தொழில் துறையில் உள்ள சவால்கள்.

உள்கட்டமைப்பு

  • ஒலி மற்றும் காணொளி தொழில்நுட்ப ஆய்வகம்.
  • புகைப்படம் மற்றும் வரைகலை பிரிவு.
  • குழு விவாதம் மற்றும் கருத்தரங்கு அரங்கம்.
  • அருங்காட்சியகம் மற்றும் கால்நடை பண்ணை ஆலோசனைப் பிரிவு .
  • இந்த ஆய்வகங்கள் மற்றும் பிரிவுகள் அனைத்திலும் LCD புரொஜெக்டர், ஒலிப் பெருக்கி அமைப்பு, ஆடியோ மிக்ஸ்ர், டிஜிட்டல் ஒலிப்பதிவு அலகு போன்ற அதிநவீன உபகரணங்களை கொண்டுள்ளது.

மக்கள் தொடர்பு செயல்பாடுகள்

  • கால்நடை பண்ணையாளர்களின் தேவை மற்றும் பிரச்சனைகளைக் கண்டறிவதற்காக மக்களின் பங்கேற்போடு கிராமப்புற மதிப்பீடு (PRA) நடத்துதல்.
  • தத்தெடுப்பு கிராமங்களில் கால்நடை வளர்ப்பில் பல்வேறு விரிவாக்க முறைகள் மூலம் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துதல் .
  • தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் மூலம் கால்நடை நலம் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் நுட்பங்களை பரவலாக்கம் செய்தல்.
  • விவசாயிகள் மற்றும் விரிவாக்க பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்தல் .
  • விவசாயிகளுக்கு பண்ணை ஆலோசனை சேவைகளை வழங்குதல்.

துறை வல்லுநர்கள்

பெயர் மற்றும் பதவி மின்னஞ்சல் தொலைப்பேசி எண்
முனைவர். கொ. மொ. சக்திவேல்
பேராசிரியர் மற்றும் தலைவர்
sakthivelvet@gmail.com +91-9444710560
முனைவர். க. தேவகி
இணைப் பேராசிரியர்
drkdevaki@yahoo.com +91-9445258978
முனைவர். ம. ஜோதிலெட்சுமி
உதவிப் பேராசிரியர்
drjothi80@gmail.com +91-8903222800

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை விரிவாக்கக் கல்வித்துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தலைவாசல் கூட்டுச் சாலை, நத்தக்கரை சுங்கச்சாவடி அருகில்,
சேலம் - 636 112, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: +91-4282-290998
மின்னஞ்சல்: ahe-vcri-slm@tanuvas.org.in