DCAPS

கால்நடை உற்பத்திக் கல்வி மையம்

மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம், புதுக்கோட்டை


தோற்றம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் கட்டுப்பாட்டின் கீழ் 17.10.1982 அன்று கோழியின ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக தோற்றுவி்க்கப்பட்டது. இம்மையம் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கறிக்கோழி மற்றும் முட்டைக்கோழி பண்ணைகளை நிறுவுவதில் கவனம் செலுத்தியது. தமிழகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட பிறகு, இம்மையம் 20.09.1989 முதல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்த மையத்தின் பெயர் பின்னர் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் என மாற்றப்பட்டது. இம்மையம் 38.33 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அண்டக்குளம் சாலையில் உள்ள டானிடா கட்டிட வளாகத்திற்கு கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக 01.08.2004 அன்று மாற்றப்பட்டது. அதன் பின் மண்டல ஆராய்ச்சி மையமாக 19.08.2005 அன்று மேம்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 23.05.2017 அன்று மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமாக உயர்த்தப்பட்டது.

குறிக்கோள்கள்

  • திறன் வளர்ப்பு திட்டம் மற்றும் நாட்டுக்கோழிக் குஞ்சுகளை விவசாயிகளுக்கு வழங்கி நாட்டுக்கோழி வளர்ப்பினை பிரபலப்படுத்துதல்.
  • வான்கோழி குஞ்சுகள் வழங்குதல் மற்றும் பயிற்சியின் மூலம் வான்கோழி வளர்ப்பினை பிரபலப்படுத்துதல்.
  • சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு படிப்புகளை நடத்தி சான்றிதழ் வழங்குதல்.
  • மற்ற அரசு மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயலாற்றுதல்.

சேவைகள்

இம்மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான நாட்டுக்கோழி குஞ்சுகள், வான்கோழி குஞ்சுகள், இராமநாதபுர வெள்ளை செம்மறியாட்டுக் குட்டிகள் வழங்கப்படுகிறது. இம்மையம் புதுக்கோட்டை மற்றும் அருகில் உள்ள மாவட்ட விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு பயிற்சிகளை வழங்குகிறது. பின்வரும் கோழி மற்றும் கால்நடை இனங்கள் இம்மையத்தில் பராமரிக்கப்படுகிறது.

வ.எண் பிரிவு வகைகள்
1. கறவை மாடு ஜெர்சி கலப்பின பசுக்கள்
2. செம்மறியாடு இராமநாதபுர வெள்ளை
3. வெண்பன்றி பெரிய வெள்ளை யார்க்சையர்
4. வான்கோழி நந்தனம் வகை
5. நாட்டுக்கோழி அசில் வகை நாட்டுக்கோழி, கடக்நாத் வகை நாட்டுக்கோழி, நந்தனம் பி2 மேம்படுத்தப்பட்ட வகை

குஞ்சு பொரிக்கும் பிரிவு

இம்மையத்தில் 3700 குஞ்சுகள் பொரிக்க கூடிய திறன் கொண்ட தானியங்கி குஞ்சுபொரிப்பான் உள்ளது. வருடத்திற்கு 25000 எண்ணிக்கையான குஞ்சுகளை இம்மையம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குகிறது (2020-21). இம்மையத்தில் 2 எண்ணிக்கையில் குஞ்சு பொரிக்கும் இயந்திரங்கள் உள்ளன.

  • 5280 முட்டைகள் பொரிக்க கூடிய திறன் கொண்ட குஞ்சுபொரிப்பான்.
  • 8568 முட்டைகள் பொரிக்க கூடிய திறன் கொண்ட புதிய குஞ்சு பொரிப்பான்.

பசுந்தீவன பிரிவு மாதம் வாரியாக

iv class="ctl-tan-com-para-txt">

இம்மையத்தில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் பசுந்தீவன பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு பண்ணையில் உள்ள கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது. அதுபோக மீதமுள்ள பசுந்தீவன பயிர் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பின்வரும் தீவனப்பயிர் வகைகள் இம்மையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் விபரம் பின்வருமாறு,

வ.எண் தீவனப்பயிர் வகைகள்
1. கோ.எப்.எஸ் 29
2. கோ.எப்.எஸ் 31
3. கம்பு நேபியர் ஒட்டுப் புல் – கோ 4
4. கம்பு நேபியர் ஒட்டுப் புல் – கோ 5
5. வேலி மசால்
6. மரவகை தீவனங்கள்
7. மண்ணில்லா பசுந்தீவனம்
8. அசோலா

விரிவாக்கப் பணிகள்

இம்மையம் மற்ற அரசு துறைகளுடன் இணைந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடை மற்றும் கோழிகளுக்கான பல்வேறு விரிவாக்க பணிகளை நடத்தி வருகிறது. அதன் விபரம் பின்வருகிறது.

  • பண்ணை ஆலோசனைகள்.
  • மையத்தில் நடத்தப்படும் மற்றும் மையத்திற்கு வெளியே நடத்தப்படும் பயிற்சிகள்.
  • செயல் திறன் மேம்பாட்டுப்பயிற்சிகள் மற்றும் சுயவேலை வாய்ப்பு பயிற்சிகளை விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு வழங்குதல்.
  • கண்காட்சியகங்கள்.
  • மக்கள் தொடர்பு நிகழ்வுகள்.
  • விவசாயிகளுக்கான கற்றுணர்வு மற்றும் செயல்முறை பயிற்சிகள்.
  • தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள்.
  • விவசாயிகளுக்கு வங்கியில் நிதியுதவி பெற கால்நடை மற்றும் கோழிகளுக்கான திட்ட அறிக்கை தயாரித்து வழங்குதல்.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம்,
தொழிற்பேட்டை அஞ்சல்,
மச்சுவாடி, புதுக்கோட்டை – 622 004
தொலைபேசி எண்: +91-4322-271443
மின்னஞ்சல்: rrc@tanuvas.org.in