கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்

வரலாறு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1957ஆம் ஆண்டு செம்மறியாட்டுப் பண்ணையாகத் தொடங்கப்பட்டது. பின்பு 1969ஆம் ஆண்டு கால்நடை ஆராய்ச்சி நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டது. பின்பு, 2011ஆம் ஆண்டு கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாராய்ச்சி நிலையம் 616.72 ஏக்கர் நிலப் பரப்பில் சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

குறிக்கோள்

  • பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டக் கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு உள்ளிருப்புப் பயிற்சி மற்றும் செய்முறைப் பயிற்சி அளித்தல்
  • கால்நடைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு வசதியை ஏற்படுத்தித் தருதல்
  • பண்ணையாளர்களுக்கு அறிவியல் ரீதியான பண்ணைத் தொழில்நுட்பங்களை மாதிரிப் பண்ணை மூலம் செயல் முறை விளக்கமளித்தல்

உள்கட்டமைப்பு

  • அனைத்து வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் மற்றும் கலையரங்கம்
  • இளநிலைப் பட்டக் கால்நடை மருத்துவ இரு பாலின மாணவர்களுக்கான தனித்தனி விடுதிகள்
  • இறைச்சி உற்பத்திக்கான இறைச்சிக் கூடம் மற்றும் இறைச்சிப் பொருட்களை விற்பதற்கான விற்பனை அங்காடி

சேவைகள்

  • கால்நடைகளுக்கான பசுந்தீவனங்களைச் சாகுபடி செய்தல்
  • பண்ணையாளர்கள் மற்றும் பிற கால்நடைப் பராமரிப்புத் துறைகளுக்கான இனவிருத்திக் கால்நடைகள் மற்றும் கோழி இனங்களை வழங்குதல்
  • நெறிமுறை மற்றும் கட்டுப்பாட்டு விதிக்கு உட்பட்ட கால்நடைகளை ஆராய்ச்சிக்காக வழங்குதல்
  • கால்நடை மற்றும் கோழியினப் பராமரிப்பிற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துதல்

வல்லுநர்கள்

  • முனைவர் த. பாலசுப்பிரமணியன், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • முனைவர் வீ. ஜெய்சித்ரா, பேராசிரியர்
  • முனைவர் க. பிரேமவல்லி, இணைப் பேராசிரியர்
  • முனைவர் அ. பாரதிதாசன், இணைப் பேராசிரியர்
  • முனைவர் கரு. பசுபதி, இணைப் பேராசிரியர்
  • முனைவர் பெ. கோபு, உதவிப் பேராசிரியர்
  • முனைவர் க. செந்தில்குமார், உதவிப் பேராசிரியர்
  • முனைவர் மு. சுகந்தி, உதவிப் பேராசிரியர்
  • முனைவர் ம. அருள்பிரகாஷ், உதவிப் பேராசிரியர்
  • முனைவர் ந. அபர்ணா, உதவிப் பேராசிரியர்
  • மருத்துவர் எ. ரேச்சல் ஜெமீமா, உதவிப் பேராசிரியர்