கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறையானது இந்திய கால்நடை கவுன்சில் (வி.சி.ஐ) விதிமுறைகளின்படி ஜூன் 2012 இல் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது, கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்கி வருகின்றது. கால்நடை உடற்செயலியல் மற்றும் கால்நடை உயிர் வேதியியலில் முதுகலை பட்டப் படிப்புகள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக முதுகலை விதிமுறைகள்’2010 ஐப் பின்பற்றி 2019-இல் தொடங்கப்பட்டது. இத்துறையானது, துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. மேலும், கால்நடை சிகிச்சை வளாகம், கால்நடை மருந்தகங்கள் மற்றும் உள்ளூர் பண்ணைகளுக்கு நோய் கண்டறிவதற்கு பரிசோதனைகள் செய்து தரப்படுகின்றன.
திட்டம் (பல்கலைக்கழக நிதி) - உம்பளச்சேரி மாடுகளின் இரத்த உயிர்வேதியியல் மதிப்பீடுகளை ஆவணப்படுத்துதல்.
கால்நடை உடற்செயலியல் ஆய்வகம்
கால்நடை உடற்செயலியல் ஆய்வகம்
கல்வி சுற்றுலா, வானிலை ஆய்வு நிலையம், ஆடுதுறை அரிசி ஆராய்ச்சி நிலையம், கும்பகோணம்
தேசிய அளவிலான உடற்செயலியல் வினாடி வினா போட்டி, டிசம்பர் 2018, மதன் கோப்பை, கர்னல், ஹரியானா (மாணவர்கள் என்.பிரதீப் ஜெ. திலஹயேஸ்வரி)
உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
ஒரத்தநாடு - 614625
தொலைபேசி எண்: +91-4372-234011 Extn : 4213
மின்னஞ்சல்: vpbvcriond@tanuvas.org.in