கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு
கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை
கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறையானது இளநிலை கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் பாடங்களை கற்பிக்கும் நோக்கத்துடன் ஏப்ரல் மாதம் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கால்நடைகளுக்கான இனவழி மூலிகை மருத்துவ முறைகள் பற்றிய முதுநிலை கால்நடை மருத்துவப்பட்டயப் படிப்பானது அக்டோபர் 2018 முதல் இத்துறையில் செயல்பட்டு வருகிறது.
கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் பாடத்தில் முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பானது அக்டோபர் 2019ல் இத்துறையில் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் புதுமை நிதித்திட்டத்தின் கீழ் ’இனவழி கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைத்தல்’ ஆராய்ச்சிதிட்டமானது ரூ.1372.95 லட்சங்கள் நிதி உதவியுடன் 2017 முதல் இத்துறையில் செயல்படுத்தப்படுகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக திட்டத்தின் இனவழி கால்நடை முதலுதவி மூலிகை மருத்துவ ஆராய்ச்சித்திட்டமானது 2017 முதல் இத்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகிரது.
குறிக்கோள்:
இளநிலை, முதுநிலை கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இன வழி மூலிகை மருத்துவ முறைகள் பற்றிய பட்டயப்படிப்பு மாணாக்கர்களுக்கு கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் பாடங்களை கற்பித்தல்.
அலோபதி மற்றும் மூலிகை மருந்துகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளில் தேவை அடிப்படையிலான மருந்தியல் மற்றும் நச்சுயியல் ஆராய்ச்சியை மேற்கொள்தல்
கால்நடை வளர்ப்போர்க்குத் தேவையான மருந்து மற்றும் அதன் பயன்பாட்டுத் தகவல் சேவைகளை வழங்குதல்
சேவைகள்:
இனவழி கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தமிழக கால்நடைப் பண்னையாளர்கள் பயனுக்காக 2017 முதல் இத்துறையில் செயல் பட்டுவருகிறது.
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பிரச்சார வாகனம் மூலமாக நடமாடும் மூலிகை மாதிரிப் பூங்கா வழி தமிழகமுள்ள கிராமங்களில் கால்நடைகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவ முறைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
சாதனைகள்/ காப்புரிமைகள்/ தொழில்நுட்ப பரிமாற்றங்கள்:
இனவழி கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தமிழக கால்நடைப் பண்னையாளர்கள் பயனுக்காக ஆகஸ்ட் 2017 முதல் இத்துறையில் செயல் பட்டுவருகிறது.
கால்நடைகளில் ஏற்படும் மடிநோய்க்கு மேல்பூச்சு மருந்தாக பயன்படும் மூலிகைத் தாது மீநுண் எமுல் ஜெல் மருந்து உருவாக்கப்பட்டது.
இனவழி கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைத்தல் திட்டத்தின் கீழ், கருப்பை அழற்சி மாத்திரை, கல்லீரல் ஊக்கி, இனவிருத்திப்பொடி முதலிய மூலிகைத் தயாரிப்பு பொருட்கள் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் நான்கு வெவ்வேறு வளாகங்களில் (18 ஏக்கர்;) கால்நடைகளுக்கான மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
பசுக்களில் மடிநோய் பற்றிய ஆராய்ச்சியில் மூலிகை தெளிப்பான் உருவாக்கப்பட்டு மதிப்பிடப்பட்டுள்ளது.
வல்லுநர்கள்
முனைவர் வ. ரங்கநாதன்,
பேராசிரியர் மற்றும் தலைவர்
முனைவர் மு.ஜெ. இராஜா,
இணைப்பேராசிரியர்
மருத்துவர் அ. இளமாறன்
உதவிப்பேராசிரியர்
மருத்துவர்க.விஜயகரன்,
உதவிப்பேராசிரியர்
தொடர்புக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை,
கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,