mvc

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு

கால்நடை ஒட்டுண்ணியியல் துறை


ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை ஒட்டுண்ணியியல் துறை 05.06.2012 அன்று முதல் இளங்கலை மாணவர்களுக்கு தரமான கல்வி, ஆராய்ச்சி மற்றும் விவசாயிகளுக்கு விரிவாக்க சேவையை வழங்கும் நோக்கில் நிறுவப்பட்டது. இந்த துறை கால்நடை குடற்புழுக்கள் ஆய்வகம் மற்றும் அருங்காட்சியகம், கால்நடை பூச்சியியல் மற்றும் ஓரணு ஒட்டுண்ணிகள் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகம் போன்ற மூன்று ஆய்வகங்களுடன் செயல்படுகிறது. கால்நடை ஒட்டுண்ணி மாதிரிகள், வன விலங்குகள் மற்றும் மனிதர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒட்டுண்ணிகளை அடையாளம் காண்பதன் மூலம் விலங்குகளின் ஒட்டுண்ணி நோய்களைக் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

குறிக்கோள்கள்

  • கால்நடை ஒட்டுண்ணியியல் துறையில் இளங்கலை படிப்புகளை வழங்குதல்
  • கால்நடைகள் மற்றும் கோழிகளின் ஒட்டுண்ணி நோய்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்
  • ஒட்டுண்ணிகள் ஆராய்ச்சியை இளங்கலை மாணவர்களின் மனதில் ஊக்குவித்தல்
  • விவசாயிகளுக்கு விலங்குகளின் ஒட்டுண்ணி தொற்று பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்
  • ஒட்டுண்ணி நோய்களைக் கண்டறிவது குறித்து கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சித் திட்டத்தை வழங்குதல்

உள்கட்டமைப்பு

  • ஆட்டோகிளேவ், ஹாட் ஏர் ஓவன், இன்குபேட்டர், சென்ட்ரிஃபியூஜ், ஹைக்ரோமீட்டர், டிஸ்டில்லேஷன் யூனிட், ஸ்டெர்லைசர் யூனிட், வாட்டர் பாத், டிஸ்செக்ஷன் மைக்ரோஸ்கோப்ஸ், காம்பவுண்ட் மைக்ரோஸ்கோப்ஸ் மற்றும் எல்சிடி ப்ரொஜெக்டர் போன்ற இந்திய கால்நடை குழும விவரக்குறிப்புகளின்படி இளங்கலை படிப்புகளை கற்பித்தலுக்கு தேவையான ஆய்வக உபகரணங்கள் மற்றும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
  • இளங்கலை செய்முறை வகுப்புகளைக் கையாளத் தேவையான கண்ணாடி பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், வேதிப்பொருட்கள் உள்ளன. குடற்புழுக்கள் ஆய்வகத்தில் சாண பரிசோதனை மற்றும் குடற்புழு அடையாளம் காணும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
  • ஆய்வகத்தில் நிரந்தர ஒட்டுண்ணி ஸ்லைடுகள், குடற்புழு முட்டைகள், அருங்காட்சியகம், விளக்கப்படங்கள் மற்றும் செய்முறை வகுப்புகளைக் கையாளத் தேவையான வசதிகள் உள்ளன.
  • ஆராய்ச்சி ஆய்வகம் ஒட்டுண்ணியலில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான கருவிகளைக் கொண்டுள்ளது.

கல்வி

  • இந்திய கால்நடை குழும விதிமுறைகளின்படி, இளங்கலை மாணவர்களுக்கு பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
  • கால்நடை ஒட்டுண்ணியியல் (3 + 2) = 5
  • அலகு 1 : பொது கால்நடை ஒட்டுண்ணியியல்
  • அலகு 2 : கால்நடைகளைத் தாக்கும் தட்டைப்புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்கள்
  • அலகு 3 : கால்நடைகளைத் தாக்கும் உருளைப்புழுக்கள்
  • அலகு 4 : கால்நடைகளைத் தாக்கும் கணுக்காலிகள்
  • அலகு 5 : கால்நடைகளைத் தாக்கும் ஓரணு ஒட்டுண்ணிகள்

ஆராய்ச்சி

  • கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்கள், உண்ணிகள் மற்றும் ஓரணு ஒட்டுண்ணிகளைக் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது .
  • இனவழி கால்நடை மூலிகை மருத்துவ ஆராய்ச்சியில் குடற்புழு மற்றும் உண்ணி நீக்க மருந்துகளின் செயல்பாடுகள்ஆய்வு செய்யப்படுகின்றன.
  • 2019-20 ஆம் ஆண்டு சிஸ்டோசோமா நேசேல் தட்டைப்புழு பரவல் தன்மை பற்றிய ஆராய்ச்சி தனுவாஸ் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
  • 2016-2021 ஆம் ஆண்டு வரை மொத்தம் 27 ஆராய்ச்சி கட்டுரைகள் புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் இத்துறை வல்லுநர்களால் வெளியிடப்பட்டுள்ளன.

கண்டறியும் சேவைகள்

  • 2020-21 ஆம் ஆண்டு, கால்நடை சிகிச்சை வளாகம், கால்நடை பண்ணை வளாகம், கால்நடை நோய்க்குறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மற்றும் கால்நடை பண்ணையாளர்களிடமிருந்து மொத்தமாக 904 ஒட்டுண்ணி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் சாணம், இரத்தம் மற்றும் தோல் மாதிரிகள் அடங்கும்.

குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள்

  • வாத்து பேன் அனடோகஸ் டென்டடஸ் முதன்முறையாக தென்னிந்தியாவிலிருந்து பதிவு செய்யப்பட்டது.
  • அனடிகோலா சிற்றினம். மற்றும் டிரினோட்டான் சிற்றினம் பேன் வாத்துகளிலிருந்து அடையாளம் காணப்பட்டது.
  • புறாவின் முன் இரைப்பையிலிருந்து காங்கைலோனிமா இங்ளுவிகொலா அடையாளம் காணப்பட்டது
  • புரோஸ்டோகோனிமஸ் பெல்லுசிடஸ் நாட்டுக்கோழியின் பர்ஸாவிலிருந்து அடையாளம் காணப்பட்டது.
  • ஒரத்தநாடு பகுதியில் சிஸ்டாசோமா ஸ்பின்டேல் கறவை மாடுகளின் சாணத்திலும் டெட்ராமிரேஸ் இன உருளைப்புழுக்கள் நாட்டுக்கோழிகளிலும் கண்டறியப்பட்டன.

விரிவாக்கக் கல்விப் பணிகள்

  • வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) & தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வாங்கி (NABARD) நிதியுதவியுடன் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழஙங்கிக்கொண்டுள்ளன.
  • கால்நடை சுகாதாரத் துறைகளுடன் சேர்ந்து நோய் ஆய்வுப் பணிகளைச் செய்தல்
  • நாட்டுப்புற மொழியில் வானொலி பேச்சுக்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் பிரபலமான கட்டுரைகள் மூலம் விவசாயிகளுக்கு ஒட்டுண்ணி நோய்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.

வல்லுநர்கள்

  • முனைவர் ஆர்.வேலுசாமி, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்
  • முனைவர் ஏ.லட்சுமிகாந்தன், உதவிப் பேராசிரியர்
  • மருத்துவர் எம்.கே.விஜயசாரதி, உதவி பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை ஒட்டுண்ணியியல் துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு,

தஞ்சாவூர் -614625, தமிழ்நாடு.

தொலைபேசி எண்: +91-4372-234012 – 4225

மின்னஞ்சல்: vpavcriond@tanuvas.org.in